சென் மோதிரம்

சென் மோதிரம் (Shen ring) என்பது பண்டைய எகிப்திய கடவுள்கள் கைகளில் பற்றி இருக்கும் பாதுகாப்பு வளையல் போன்ற மோதிரம் ஆகும்.

எகிப்தியக் கடவுள் ஓரசு கைகளில் பற்றியிருக்கும் சென் மோதிரம்

எகிப்திய மொழியில் சென் என்பதற்கு கயிற்றால் சுற்றியிருக்கும் வளையம் போன்ற மோதிரம் என்று பொருளாகும். பண்டைய எகிப்திய தொன்மவியலில், சென் மோதிரம் அழிவற்ற பாதுகாப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

கழுகுத் தலை கொண்ட ஓரசு கடவுளின் கையில் எப்போதும் சென் மோதிரம் இருக்கும். எகிப்தின் மூன்றாம் வம்ச ஆட்சியின் நினைவுச் சின்னங்களில் ஒன்றான பார்வோன் ஜோசெர் பிரமிடு வளாகத்தில் சென் மோதிரம் ஒன்றை தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்தனர்.[1]

சென் மோதிரத்தை இரட்டை வடக்கயிற்றியில் சுற்றப்பட்டிருக்கும். கயிற்றின் முனைகள் மடிந்திருக்கும் வகையில், ஒரு மூடிய வளையம் அடிப்பகுதியில் முடிச்சுடன் உருவாகிறது. சென் மோதிரம், சிலுவை போன்ற ஆங்க் அல்லது தாயத்து அல்லது போல தோன்றுகிறது. இது ஒரு மந்திர உதவியாக பயன்படுத்தப்பட்டது. எகிப்தின் மூன்றாம் வம்ச மற்றும் நான்காம் வம்ச ஆட்சிக் காலங்களில் பார்வோன்களின் குடும்பத்தினர் பாதுகாப்புக்காக கழுத்தில் அணிந்திருந்தனர்.[2]

எகிப்திய பெண் கடவுள் நெக்பெத் கைகயில் சென் மோதிரம்
ஸ்பெயின் நாட்டின் காஞ்சோ ரோனோ தொல்லியல் களத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சென் மோதிரம் வடிவ பொருள்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kemp, B. 2007. Ancient Egypt. Anatomy of a Civilisation. pp106
  2. Shen-ring
  • Kemp, Barry (2007). Ancient Egypt. Anatomy of a Civilisation. Routledge, Oxford.. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Shen ring
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Shen ring steles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_மோதிரம்&oldid=3444897" இலிருந்து மீள்விக்கப்பட்டது