அன்கு (ankh, /ˈæŋk/ or /ˈɑːŋk/; U+2625 ☥ அல்லது U+132F9 𓋹) ), பண்டைய எகிப்திய மரபில் எகிப்தியக் கடவுள்களில் கையில் காணப்படும் கைப்பிடியுள்ள சிலுவை போன்ற சின்னமாகும். இச்சின்னம் உயிரின் மூச்சு (breath of life) , நைலின் சாவி (the key of the Nile), அன்சாட்டா குரூசு (crux ansata, இலத்தீன மொழியில் "கைப்பிடியுள்ள சிலுவை" எனவும் அறியப்படுகின்றது. எகிப்தி படுகைதளக் குறியீட்டில் அயின்-நுன்-எத் ஆகியமெய்யெழுத்துக்களை அடக்கியுள்ள இதற்குப் பொருள் "உயிர்" என்பதாகும். [2]

Ankh
ஆங்க் சின்னம்
எகிப்தின் முதல் வம்ச (கிமு 3100 - 2900) காலத்திய கல் ஆங்க் சிற்பம்[1]

இந்த வரியுரு உயிரின் தத்துவத்தை காட்டுகின்றது. எகிப்திய கடவுளர்கள் இதனை அதன் கண்ணி கொண்டு வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்; சில நேரங்களில் தங்கள் கைகள் மார்பின் குறுக்கே அணைத்திருக்க ஒவ்வொரு கையிலும் அங்க் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது எகிப்திய மெய்யியலின் ஒவ்வொரு கடவுளின் கையிலோ அருகிலோ காட்டப்பட்டுள்ளது. எனவே இது துவக்க கால சமயப் பன்முகத்தின் சின்னமாக பரவலாக அறியப்படுகின்றது. அனைத்துப் பிரிவினரும் அழிவில்லா உயிரை நம்பினர். இந்தத் தத்துவமே 1960களின் புது யுக இயக்கத்தின் சின்னமாக ஏற்க காரணமாயிற்று.

இந்தச் சின்னம் எகிப்தில் மிகவும் பரவலாக இருந்துள்ளது என்பதற்கு சான்றாக மெசொப்பொத்தேமியா, பெர்சியா வரையிலான அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விவிலிய அரசர் எசக்கியாவின் அரசச்சின்னமாகவும் இருந்துள்ளது.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Fischer 1972, ப. 5
  2. The Ankh
  3. "King Hezekiah in the Bible: Royal Seal of Hezekiah Comes to Light". Biblical Archaeology Society.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்கு&oldid=3324541" இலிருந்து மீள்விக்கப்பட்டது