அதின்
அதின் (Aten, எகிப்தியம்: jtn) அல்லது அதோன் (Aton) என்பது பண்டைய எகிப்தின் சமயத்தின் சூரியக் கடவுளின் கதிர்களாக உருவகப்படுத்தட்ட கடவுள் ஆவர்.[1] இது எகிப்திய சூரியக் கடவுளான “இரா” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.[2] பல்வேறு கடவுள்களில் ஒரு கடவுளை மட்டும் வழிபடும் சமயநெறியில் அதின் வழிபடப்பட்டது. நான்காம் அமென்கோதேப் எனும் அக்கிநேட்டன் பார்வோனினால் உருவாக்கப்பட்ட அதினிய சமய முறைகளுக்கு உட்பட்டது. அக்கிநேட்டன், தனது கவிதையில், அதின் இந்த உலகைப் படைத்தவராகவும், உயிர்கொடுப்பவராகவும், இந்த உலகை வளர்க்கும் ஆன்மாவாகவும் இருப்பதாகப் போற்றிப் பாடியுள்ளார்.[2]

தோற்றம் குறித்த பிறப்புக் கோட்பாடுகளோ, சார்ந்த பிறக் குடும்பக் கடவுள்கள் போன்ற விடயங்களோ அற்ற ஒரு கடவுளாகும். அதின் பற்றி இறந்தோர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- Akhenaten: History, Fantasy and Ancient Egypt, Routledge 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18549-1, pp. 36ff.
- Akhenaten and the City of Light, publisher-Cornell University Press, p8.
வெளியிணைப்புகள்
தொகு- விக்கிமூலத்தில் Great Hymn to Aten பற்றிய ஆக்கங்கள்