ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து)
ஹெல்லியோபோலிஸ் (Heliopolis) பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர்.[1] இந்நகரம் பண்டைய எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது கெய்ரோ நகரத்திற்கு வடகிழக்கில் ஆயின் சாம் பகுதியில் உள்ளது.
ஹெல்லியோபோலிஸ் I͗wnw or Iunu | |
---|---|
இருப்பிடம் | எகிப்து |
பகுதி | கெய்ரோ ஆளுநனரகம் |
ஆயத்தொலைகள் | 30°07′46″N 31°18′27″E / 30.129333°N 31.307528°E |
பழைய எகிப்திய இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்திய இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நகரத்தில் 12-வம்சத்தின் பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் எகிப்திய சூரியக் கடவுள் இராவினை போற்றும் வகையில் நிறுவிய 120 டன் எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் கல்தூபி கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[2] பழைய எகிப்திய இராச்சியத்தின் பிரமிடுகள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் இராவின் வீடு என குறித்துள்ளது.[3]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Dobrowolska; et al. (2006), Heliopolis: Rebirth of the City of the Sun, p. 15, ISBN 9774160088.
- ↑ Griffith, Francis Llewellyn (1911). "Obelisk". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. Cambridge University Press. .
- ↑ Bonnet, Hans, Reallexikon der Ägyptischen Religionsgeschichte. (in இடாய்ச்சு மொழி)
- ↑ "Model of a Votive Temple Gateway at Heliopolis (49.183)", Official site, Brooklyn Museum, 8 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
ஆதார நூற்பட்டியல்தொகு
- Allen, James P. 2001. "Heliopolis". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 2 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 88–89
- Bilolo, Mubabinge. 1986. Les cosmo-théologies philosophiques d'Héliopolis et d'Hermopolis. Essai de thématisation et de systématisation, (Academy of African Thought, Sect. I, vol. 2), Kinshasa–Munich 1987; new ed., Munich-Paris, 2004.
- Reallexikon der Ägyptischen Religionsgeschichte - Hans Bonnet
- Collier, Mark and Manley, Bill. How to Read Egyptian Hieroglyphs: Revised Edition. Berkeley: University of California Press, 1998.
- The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses, George Hart ISBN 0-415-34495-6
- Redford, Donald Bruce. 1992. "Heliopolis". In The Anchor Bible Dictionary, edited by David Noel Freedman. Vol. 3 of 6 vols. New York: Doubleday. 122–123
வெளி இணைப்புகள்தொகு
ஆள்கூறுகள்: 30°07′45.6″N 31°18′27.1″E / 30.129333°N 31.307528°E