அமர்னா

பண்டைய எகிப்தின் தொல்லியல் மேடு

அமர்னா (Amarna) (/əˈmɑːrnə/; அரபு மொழி: العمارنة‎, romanized: al-ʿamārnah) பண்டைய எகிப்திய தொல்லியல் மேடாகும். புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பிந்தைய கால பார்வோன் அக்கேடாதேன் கிமு 1346-இல் மேல் எகிப்தில் புதிதாக அமர்னா நகரத்தை நிறுவி, தீபை நகரத்தில் இருந்த தனது தலைநகரத்தை அமர்னா நகரத்திற்கு மாற்றினார். இப்பார்வோனின் இறப்பிற்குப் பின்னர் அமர்னா நகரம் கிமு 1332-இல் அழிக்கப்பட்டது.[1]

அமர்னா
العمارنة
Small aten temple.jpg
பார்வோன் அக்கேடாதேன் நிறுவிய அதின் எனும் சூரியக் கோயில்
அமர்னா is located in Egypt
அமர்னா
Shown within Egypt
மாற்றுப் பெயர்அமர்னா தொல்லியல் மேடு
இருப்பிடம்மின்னியா ஆளுநகரம், எகிப்து
பகுதிமேல் எகிப்து
ஆயத்தொலைகள்27°38′43″N 30°53′47″E / 27.64528°N 30.89639°E / 27.64528; 30.89639
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டுநர்பார்வோன் அக்கேடாதேன்
கட்டப்பட்டதுகிமு 1346
காலம்எகிப்தின் பதினெட்டாம் வம்சம், உரோமைப் பேரரசு

பண்டைய அமர்னா நகரம், மேல் எகிப்தில் பாயும் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில், தற்கால எகிப்தின் மின்னியா ஆளுநகரத்தின் தலைமையிடமான மின்னியா நகரத்திற்கு தெற்கே 58 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசியத் தலைநகரான கெய்ரோவிற்கு தெற்கே 312 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்-உக்சுர் நகரத்திற்கு வடக்கே 402 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

உரோமைப் பேரரசு மற்றும் உரோமை கோப்திக் அர்தடாக்ஸ் திருச்சபை ஆட்சியின் கீழ் சில காலம் அமர்னா நகரம் இருந்தது. பண்டைய அமர்னா நகரத்தின் தெற்கில் உள்ள தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்கையில் பல கட்டிட அமைப்புகள், நினைவுச் சின்னங்கள் போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

பெயர்க் காரணம்தொகு

அமர்னா எனும் பெயர் இப்பகுதியில் வாழ்ந்த பெனி அம்ரான் எனும் பழங்குடி மக்களின் பெயரால் ஏற்பட்டது. இதன் பண்டைய எகிப்தியப் பெயர் அக்கேடாதேன் ஆகும். (ஹலாப் பண்பாடு காலத்திய அமர்னா என்ற பெயரைக் கொண்ட தொல்லியல் மேடு சிரியாவில் உள்ளது.[4]) அமர்னா தொல்லியல் களத்தை 1820-இல் இரு முறை பார்வையிட்ட ஆங்கிலேய எகிப்தியவியல் அறிஞர் சர் ஜான் கார்ட்னர் வில்கின்சன், இத்தொல்லியல் களத்திற்கு 'அலபாஸ்டிரான்' எனப்பெயரிட்டார்.[5]

அக்கெனதென் நிறுவிய நகரம்தொகு

 
எழுதுகோல் மற்றும் பாபிரஸ் எனும் காகிதச் சுருளுடன் பெண்களின் சிற்பம்

பண்டைய எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன் அக்கெனதென் தன் பெயரால் இங்கு தனது புதிய தலைநகரத்தை நிறுவினார். அந்நகரத்தில் எகிப்திய சூரியக் கடவுளான அதினுக்கு கோயில் ஒன்றை எழுப்பினான். தனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு காலத்தில் கிமு 1346-இல் துவக்கிய கோயில் கட்டுமானம், ஒன்பது ஆண்டுகள் கழித்து கிமு 1341-இல் நிறைவுற்றது.

அமர்னா நகரத்தின் கட்டுமானப் பொருட்கள் பெரும்பாலும் களிமன் செங்கற்கள் மற்றும் உள்ளூரில் கிடைத்த கற்களால் ஆனது.[6]பார்வோன் அக்கேடாதேனின் மறைவிற்குப் பின் அரியணை ஏறிய துட்டன்காமன், தனது தலைநகரத்தை, தீபை நகரத்திற்கு மாற்றிய பிறகு, பத்தாண்டுகள் கழித்து அமர்னா நகரத்தில் மக்கள் குடியிருப்புகள் இன்றி பாழ்பட்டு போனது.[7]

நைல் ஆற்றின் மேற்கு கரையில் இருந்த அமர்னா நகரத்தின் பரப்பளவு எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. [8] எகிப்து இராச்சியத்தின் புதிய தலைநகரமான அமர்னா நகரத்தைச் சுற்றி இருந்த பதினான்கு எல்லைச் சிற்பத்தூண்களில் மன்னர் அக்கேடாதன் புதிய அமர்னா நகரத்தை நிறுவியதற்கான குறிப்புகள் உள்ளது.[8]

அமர்னா நகரத்தில், மன்னர் அக்கெனதென் எகிப்திய சூரியக் கடவுளான அதினுக்கு எழுப்பிய கோயில்கள் மற்றும் அமர்னா நகரத்தின் கிழக்கில் உள்ள மலைகளில் தனது மற்றும் பட்டத்து இராணி நெபர்திதி மற்றும் அரச குடும்பத்தினருக்காக நிறுவிய கல்லறைக் கோயில்கள் குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளார். [9]

 
அமர்னா நகரத்தின் எல்லைச் சிற்பத்தூண்கள்
 
துட்டன்காமன் சிற்பம், பெர்லின் அருங்காட்சியகம்

அக்கெனதென்அக்கெனதென்

அமர்னா நகரத்தின் மீள் கண்டுபிடிப்பு மற்றும் அகழாய்வுகள்தொகு

 
பார்வோன் அக்கேடாதேன், பட்டத்து இராணி நெபெர்திதி மற்றும் இளவரசி மெரிததேன் சிற்பம், இலண்டன் அருங்காட்சியகம்

1714-இல் பிரான்சு நாட்டின் இயேசு சபை பாதிரியாரான கிளவுட் சிகார்டு, அமர்னா பகுதியின் நைல் ஆற்றின் கரை வழியாக பயணிக்கும் போது முதன் முதலில் சில சிற்பத்தூண்]]களை கண்டுபிடித்தார். 1798-99-களில் நெப்போலியனின் படைவீரர்கள் அமர்னா நகரத்தின் வரைபடத்தை வரைந்து, 1820 -1830-களுக்கிடையே வெளியிட்டனர்.[10]

1824-இல் சர் ஜான் கார்டினர் வில்கின்சன் எனும் ஐரோப்பிய அமர்னா நகரத்தின் சிதிலங்களை கண்டுபிடித்து, வரைபடம் தயாரித்தார். பின்னர் பிரித்தானியர்கள் 1883-இல் அமர்னா நகரத்தின் தெற்கில் உள்ள பல கல்லறைக் கோயில்களின் நினைவுச் சின்னங்களை படியெடுத்தனர். [11]

1887-இல் எகிப்தின் உள்ளூர் பெண்மணி அமர்னா நகரத்தில் ஒரிடத்தைத் தோண்டும் போது அக்காடிய மொழியின் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட முப்பது அமர்னா நிருபங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[12]

1891 - 1892 ஆண்டுகளின் அகழாய்வில் எகிப்திய சூரியக் கடவுளான அதேனின் பெருங்கோயில் மற்றும் மன்னர்களின் கல்லறைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமர்னா நகரத்த்தின் எல்லையைக் குறிக்கும் 14 சிற்பத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் அக்கேடாதேன், இராணி நெபெர்திதி மற்றும் இளவரசி மெரிததேன் சிற்பம் மற்றும் துட்டன்காமன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

 1. "The Official Website of the Amarna Project". 8 October 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Google Maps Satellite image". Google. 2008-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Middle Egypt Survey Project 2006". Amarna Project. 2006. 22 June 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-06-06 அன்று பார்க்கப்பட்டது.
 4. [https://www.academia.edu/1032531/Tell_Amarna_in_the_General_Framework_of_the_Halaf_Period[தொடர்பிழந்த இணைப்பு]
 5. University College London website, Digital Egypt for Universities: Amarna, accessed 26 July 2016
 6. Grundon (2007), p. 89
 7. "Excavating Amarna". Archaeology.org. 2006-09-27. 11 July 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-06-06 அன்று பார்க்கப்பட்டது.
 8. 8.0 8.1 David (1998), p. 125
 9. Aldred (1988), pp. 47–50
 10. "Mapping Amarna". 8 October 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 11. "The Robert Hay Drawings in the British Library". 2006-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Wallis Budge describes the discovery of the Amarna tablets". 2008-10-01 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

 • Freed, Rita A., Yvonne J. Markowitz, and Sue H. D’Auria, eds. 1999. Pharaohs of the Sun: Akhenaten, Nefertiti, Tutankhamun. London: Thames and Hudson.
 • Giles, Frederick John. 2001. The Amarna Age: Egypt. Warminster, Wiltshire, England: Aris & Phillips.
 • Kemp, Barry J. 2006. Ancient Egypt: Anatomy of a Civilization. 2d ed. London: Routledge.
 • –––. 2012. The City of Akhenaten and Nefertiti: Amarna and Its People. London: Thames and Hudson.
 • Murnane, William J. 1995. Texts from the Amarna Period in Egypt. Atlanta: Scholars.
 • Mynářová, Jana. 2007. Language of Amarna – Language of Diplomacy: Perspectives On the Amarna Letters. Prague: Czech Institute of Egyptology; Faculty of Arts, Charles University in Prague.
 • Watterson, Barbara. 1999. Amarna: Ancient Egypt's Age of Revolution. Stroud, Gloucestershire: Tempus.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமர்னா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
தீபை
பண்டைய எகிப்தின் தலைநகரம் (அக்கெனதென்)
கிமு 1353 – கிமு 1332
பின்னர்
தீபை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்னா&oldid=3656803" இருந்து மீள்விக்கப்பட்டது