ஹலாப் பண்பாடு

ஹலாப் பண்பாடு (Halaf culture) (கிமு 6,100 — 5,100) தொல்பழங்காலத்தில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு மெசொப்பொத்தேமியா பகுதிகளான தற்கால தென்கிழக்கு துருக்கி, சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் கிமு 6100 - கிமு 5100-க்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய பண்பாடாகும்.[1]

கிமு 5600 – 5000 ஹலாப் பண்பாட்டுக் காலத்திய பீங்கான் கிண்ணம், மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம், நியூயார்க்
ஹலாப் பண்பாடு
புவியியல் பகுதிவடக்கு மெசொப்பொத்தேமியா
காலப்பகுதிபுதிய கற்காலம்
காலம்கிமு 6,100 — 5,100
வகை களம்ஹலாப் தொல்லியல் மேடு
முக்கிய களங்கள்டெல் பராக்
முந்தியதுமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)
பிந்தியதுஉபைது - ஹலாப் பண்பாடுகளின் இடைநிலைக் காலம், அசுன்னா பண்பாடு, சமார்ரா பண்பாடு

வடக்கு சிரியாவில் உள்ள ஹலாப் தொல்லியல் மேட்டின் பெயரால் இப்பண்பாட்டை ஹலாப் பண்பாடு எனப்பெயரிடப்பட்டது.

டெல் ஹலாப் தொல்லியல் களத்தை 1977 மற்றும் 1927களில் முதலில் அகழ்வாய்வு செய்தவர் மேக்ஸ் வான் ஓப்பன்யும் ஆவார்.

1908ல் ஹலாப் பண்பாட்டின் தொல்பொருட்களை தென்கிழக்கு துருக்கியில் முதலில் கண்டறிந்தவர் ஜான் கார்ஸ்டாங் ஆவார்.[2] ஹலாப் பண்பாட்டின் முக்கியத் தொல்பொருட்கள், தற்கால வடக்கு ஈராக் நாட்டின் மோசுல் நகரத்திற்கு அருகே உள்ள டெல் அர்பச்சியா தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[3]

பிந்தைய ஹலாப் பண்பாட்டின் இறுதிக் காலத்தில், ஹலாப் - உபைதுகளின் 400 ஆண்டு இடைநிலைக் காலம் (கிமு 5400 - 5000) தோன்றியது.

தோற்றம்

தொகு

தென்கிழக்கு அனதோலியாவின் மலைகளில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நாடோடி கூட்டத்தின் வழித்தோன்றல்களே ஹலாப் மக்கள் என்றும், வேறு சிலர் வடக்கு ஈராக்கின் மலைப் பகுதிகளில் வாழ்ந்த மலைப் பழங்குடியின மக்கள் என்றும் கருதுகின்றனர்.[4]

இருப்பினும் மேற்படி கருதுகோள்கள், அண்மையில் 1986ல் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ஹலாப் மக்களின் தோற்றம் மற்றும் பண்பாடு குறித்து புதிய உண்மைகள் வெளிவரத் துவங்கியது.[5]

தற்போது டெல் சபி அபைது (Tell Sabi Abyad) தொல்லியல் களத்தின் 11 அடுக்குகளை அகழ்வாய்வு செய்கையில் 7 முதல் 11 அடுக்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் முந்தைய ஹலாப் பண்பாடு காலத்தவைகள் என்றும், 4 முதல் 6 அடுக்குகளில் இருந்த தொல்பொருட்கள் மூலம் ஹலாப் - உபைதுகளில் இடைநிலைக் காலத்தைவைகள் என்றும்; 1 முதல் 3 வரையிலான அடுக்குகள் துவக்க கால ஹலாப் பண்பாட்டுக் காலத்தியது எனத் தொல்லியள் ஆய்வாளரக்ள் கணித்துள்னர்.

புதிய தொல்பொருளியல் ஆய்வாளர்கள் ஹலாப் பண்பாடு தீடீரென்றோ அல்லது வெளிநாட்டு மக்களின் தாக்கத்தால் தோன்றவில்லை என உறுதிசெய்யப்பட்டு, மாறாக வடக்கு சிரியாவின் உள்நாட்டு பழங்குடி மக்களிடையே ஏற்பட்ட மாற்றங்களில் ஒரு தொடர்ச்சியான செயல்முறைகளின் விளைவாகவே ஹலாப் பண்பாடு தோன்றியது.[6] that spread to the other regions.[1]

பண்பாடு

தொகு

கட்டிடக்கலை

தொகு
 
மறுசீரமைக்கப்பட்ட ஹலாப் பண்பாட்டுக் காலத்திய கோயில், அலெப்போ தேசிய அருங்காட்சியகம், சிரியா

ஹலாப் பண்பாட்டின் தொல்லியல் களங்களில் சில தொன்மையான கட்டிடங்கள் தற்கால வடக்கு சிரியாவில் உள்ள ஹலாப் தொல்லியல் மேட்டின் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.[7] தொல்லியல் களத்தில் தேன் கூடு போன்று வட்ட வடிவத்தில் அமைந்த கல்லறைக் கட்டிடம் [8] இக்கட்டிடங்கள் கருங்கல் அஸ்திவாரத்தின் மீது களிமண் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் சமயச் சடங்களுக்காகவும், மக்கள் வாழிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹலாப் மட்பாண்டக் கலை

தொகு
 
ஹலாப் மக்களின் பாண்டங்கள்

மட்பாண்டக் கலைஞர்களால் உருவாக்கபப்ட்ட ஹலாப் மக்களின் மட்பாண்டங்கள் இரண்டு நிறங்களில் விலங்குகளின் உருவங்களால் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இது போன்ற மட்பாண்டங்கள் வடக்கு மெசொப்பொத்தேமியாவின் நினிவே, சகர் பசார், அனதோலியா பகுதிகளின் தொல்லியல் களங்களில் கிடைக்கப் பெற்றுள்ளது. பல மட்பாண்டங்கள் சமையல் பணிக்காக படைத்துள்ளனர். ஹலாப் மக்கள் களிமண் மற்றும் கற்களாலான முத்திரைகள் பயன்படுத்தினர். ஹலாப் மக்கள் செப்பின் பயன்பாட்டை அறிந்திருந்தாலும், களிமண் மற்றும் கற்களாலான கருவிகள் பயன்படுத்தினர்.

பொருளாதாரம்

தொகு
 
ஹலாப் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த கிமு 5000 - 4000 காலத்திய மக்கட்ச் செல்வத்தினை குறிக்கும் சுடுமண் பெண் சிலை, வால்டர் அருங்காட்சியகம், பால்ட்டிமோர்

ஹலாப் மக்கள் மழை நீரை நம்பி தரிசு நில வேளாண்மையை மேற்கொண்டனர். கோதுமை, பார்லி, ஆளிச் செடிகளை பயிரிட்டனர். மேலும் இறைச்சி, கம்பளி உடை மற்றும் பால் பொருட்களுக்காக செம்மறி ஆடுகள் மற்று வெள்ளாடுகளை மேய்த்து வளர்த்தனர்.

ஹலாப் பண்பாட்டின் முடிவு (வடக்கின் உபைதுகள்)

தொகு

ஹலாப்-உபைதுகளின் கலப்பின மக்களின் நுழைவால், கிமு 5,000 ஆண்டுகளில் ஹலாப் பண்பாடு முடிவிற்கு வந்து, ஹலாப்-உபைதுகளின் பண்பாட்டின் இடைகாலம் துவங்கியது.[9] பல ஹலாபிய பண்பாட்டுக் குடியிருப்புகள் அழிந்தது. எஞ்சியவைகள் உபைதுகளின் பண்பாட்டுக் களங்களாக மாற்றம் பெற்றது.[10]

ஹலாப் பண்பாட்டு காலத்திற்கு பிந்தி வந்த வடக்கு மெசொப்பொத்தேமியா உபைதுகளை, தெற்கு மெசொப்பொத்தேமியாவின் உபைதுகளை வேறுபடுத்திக் காட்டியது.[11] உபைது மக்கள் ஹலாப் பண்பாட்டை பின்பற்றினர்.[10][12]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mario Liverani (2013). The Ancient Near East: History, Society and Economy. p. 48.
  2. Castro Gessner, G. 2011. "A Brief Overview of the Halaf Tradition" in Steadman, S and McMahon, G (eds.) The Oxford Handbook of Ancient anatolia. Oxford: Oxford University Press. pp. 780
  3. Campbell, S. 2000. "The Burnt House at Arpachiyah: A Reexamination" Bulletin of the American Schools of Oriental Research no. 318. pp. 1
  4. Maria Grazia Masetti-Rouault; Olivier Rouault; M. Wafler (2000). La Djéziré et l'Euphrate syriens de la protohistoire à la fin du second millénaire av. J.C, Tendances dans l'interprétation historique des données nouvelles, (Subartu) - Chapter : Old and New Perspectives on the Origins of the Halaf Culture by Peter Akkermans. pp. 43–44.
  5. Peter M. M. G. Akkermans, Glenn M. Schwartz (2003). The Archaeology of Syria: From Complex Hunter-Gatherers to Early Urban Societies (c.16,000-300 BC). p. 101.
  6. Peter M. M. G. Akkermans, Glenn M. Schwartz (2003). The Archaeology of Syria: From Complex Hunter-Gatherers to Early Urban Societies (c.16,000-300 BC). p. 116.
  7. Tell Arpachiyah
  8. Beehive tomb
  9. John L. Brooke (2014). Climate Change and the Course of Global History: A Rough Journey. p. 204.
  10. 10.0 10.1 Georges Roux (1992). Ancient Iraq. p. 101.
  11. Susan Pollock; Reinhard Bernbeck (2009). Archaeologies of the Middle East: Critical Perspectives. p. 190.
  12. Robert J. Speakman; Hector Neff (2005). Laser Ablation ICP-MS in Archaeological Research. p. 128.

ஆதர நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halaf culture
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலாப்_பண்பாடு&oldid=3739685" இலிருந்து மீள்விக்கப்பட்டது