உரூக் (Uruk (/ˈrʊk/; சுமேரியம்: Unug; அக்காதியம்: Uruk; அரபு மொழி: وركاء‎, Warkā'; அரமேயம் / எபிரேயம்:אֶרֶךְ‘Ereḥ[1]; பண்டைக் கிரேக்கம்Ὀρχόη Orḥoē, Ὀρέχ Oreḥ, Ὠρύγεια Ōrugeia) உரூக் காலத்தில் (கிமு 4000 முதல் கிமு 3100 முடிய) சுமேரியாவின் (கீழ் மெசொப்பொத்தேமியா) பண்டைய நகரங்களில் உரூக் நகரமும் ஒன்றாகும். இப்பண்டைய நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் உள்ள முத்தன்னா ஆளுநரகத்தில், சமாவா என்ற ஊரின் கிழக்கில் 30 கிமீ தொலைவில், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் உள்ளது.[2]

உரூக்
𒌷𒀕 or 𒌷𒀔 Unug சுமேரியம்
Uruk (அக்காதியம்)
وركاء Warkā(அரபு)
உரூக் is located in ஈராக்
உரூக்
Shown within Iraq
இருப்பிடம்அல்-வர்கா, முத்தன்னா ஆளுநரகம், ஈராக்
பகுதிமெசபடோமியா
ஆயத்தொலைகள்31°19′27″N 45°38′14″E / 31.32417°N 45.63722°E / 31.32417; 45.63722
வகைதொல்லியல் மேடு
பரப்பளவு6 km2 (2.3 sq mi)
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 4,000
பயனற்றுப்போனதுகிபி 700
காலம்உரூக் காலம் முதல் துவக்க மத்திய காலம் வரை
பகுதிக் குறிப்புகள்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்உரூக் தொல்லியல் நகரம்
பகுதிதெற்கு ஈராக்கின் அக்வார் பகுதி
கட்டளை விதிகலப்பு: (iii)(v)(ix)(x)
உசாத்துணை1481-005
பதிவு2016 (40-ஆம் அமர்வு)
பரப்பளவு541 ha (2.09 sq mi)
Buffer zone292 ha (1.13 sq mi)

சுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது. உரூக் நகரம், கிமு 2,900ல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது.[2] கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. இருப்பினும் செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த்தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் குன்றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிந்தது.

வில்லியம் கென்னட் லோப்டஸ் என்ற ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர், 1850 முதல் 1854 முடிய உரூக் நகரத்தின் தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு மேற்கொண்டார். உரூக் நகரத்தை அகழ்வாய்வு அறிக்கையில், இந்நகரத்தை மத்திய அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.[3]

2016ல் உரூக் நகரத் தொல்லியல் களத்தை, யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

வரலாறு

தொகு
 
உரூக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் விரிவாக்கப்பகுதிகள், கிமு3600-3200

கிமு 4000–3200-இல், உரூக் காலத்தின் போது, உரூக் நகரம், நகர இராச்சியமாக உருவாகத் தொடங்கியது. பண்டைய இலக்கியங்களும், தொன்ம வரலாறுகளும், சுமேரிய மன்னர் கில்கமெஷின் தலைநகரான உரூக் நகரம் இருந்தது எனக்குறிப்பிடுகிறது. மேலும் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலின் 10:10ல், மன்னர் நிம்ரோத் ஆட்சியில், உரூக் நகரம் தலைநகரமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது.[4]

 
பண்டைய உரூக் நகர வரைபடம்

தொல்லியல் களம்

தொகு
 
கிமு 2000ல் மெசொப்பொத்தேமியாவின் பண்டைய உரூக், பாபிலோன், நினிவே, அசூர், அக்காத், மாரி, கிஷ், சூசா, நிப்பூர், லார்சா, நிம்ருத், ஊர், கிஷ் மற்றும் சிப்பர் நகரங்களைக் காட்டும் வரைபடம்

உரூக் தொல்லியல் களம், தற்கால ஈராக் நாட்டின், பண்டைய ஊருக்கு, வடகிழக்கே 50 கிமீ தொலைவில், 5.5 km2 (2.1 sq mi) பரப்பளவில் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Erech, ANCIENT CITY, IRAQ
  2. 2.0 2.1 Harmansah, 2007
  3. William Kennett Loftus (1857). Travels and researches in Chaldaea and Susiana: with an account of excavations at Warka, the "Erech" of Nimrod, and Shush, "Shushan the Palace" of Esther, in 1849-52. Robert Carter & Brothers. Of the primeval cities founded by Nimrod, the son of Gush, four are represented, in Genesis x. 10, as giving origin to the rest : — 'And the beginning of his kingdom was Babel, and Erech, and Accad, and Galneh, in the land of Shinar.' ...let us see if there be any site which will correspond with the biblical Erech — the second city of Nimrod. About 120 miles southeast of Babylon, are some enormous piles of mounds, which, from their name and importance, appear at once to justify their claim to consideration. The name of Warka is derivable from Erech without unnecessary contortion. The original Hebrew word 'Erk,' or 'Ark,' is transformed into 'Warka,' either by changing the aleph into vau, or by simply prefixing the vau for the sake of euphony, as is customary in the conversion of Hebrew names to Arabic. If any dependence can be placed upon the derivation of modern from ancient names, this is more worthy of credence than most others of like nature.... Sir Henry Rawlinson states his belief that Warka is Erech, and in this he is supported by concurrent testimony.... [Footnote: See page xvi. of the Twenty-ninth Annual Report of the Royal Asiatic Society, 1852 ; and Proceedings of the Royal Geogr. Society, vol. i., page 47]
  4. While earlier scholars such as Jerome (4th century) had identified Erech with the Syrian city of Edessa (now within Turkey), the modern consensus is that it refers to the Sumerian city-state of Uruk in south Mesopotamia. See Warwick Ball, 2001, Rome in the East: the transformation of an empire, p. 89. Ball further speculates that the earlier traditions connecting Edessa (Orhai) with Erech might have arisen because the ancient Uruk was possibly 'transferred' to the more northerly location in the reign of Nabonidus of Babylon, 6th century BC.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உரூக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூக்&oldid=3732261" இலிருந்து மீள்விக்கப்பட்டது