அக்காத்
அக்காத் (Akkad) என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த அக்காடியப் பேரரசின் தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந்நகர இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கிமீ தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று,
வரலாறு
தொகுநகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் கிமு 23வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியிருந்தது.
பிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் "அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற சொல் பாவிக்கப்பட்டது"
பெயர்
தொகுவிவிலியத்தில் ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10)[1]
ஆகேத் என்ற பெயர் அக்காத் என்ற பெயரின் சுமேரிய மருவலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் "தீயின் முடி" என பொருள்பட்டிருக்கலாம்"[2].
மன்னர்கள் ஆட்சிக்காலம்
தொகுஆட்சிக்காலம் | பெயர் | |
---|---|---|
சுமேரியா, அக்காத்திய மன்னர்கள் | ||
கிமு 2334 அல்லது கிமு 2371 தொடக்கம் கிமு 2279 அல்லது கிமு 2315 | சர்கோன் | |
2278 அல்லது 2315 தொடக்கம் கிமு 2270 அல்லது கிமு 2306 | ரிமுஷ் (Rimush) | |
கிமு 2269 அல்லது 2306 தொடக்கம் கிமு 2255 அல்லது கிமு 2291 | மணிஷ்டூஷு (Manishtushu) | |
கிமு 2254 அல்லது கிமு 2291 தொடக்கம் கிமு 2218 அல்லது கிமு 2254 | நரம்-சின் (Naram-Sin) | |
கிமு 2217 அல்லது கிமு 2254 தொடக்கம் கிமு 2193 அல்லது கிமு 2230 | ஷார்-கலி-ஷாரி (Shar-Kali-Sharri) | |
கிமு 2192 அல்லது கிமு 2230 தொடக்கம் கிமு 2169 அல்லது கிமு 2226 | ||
கிமு 2189 தொடக்கம் கிமு 2189 | இகிகி (Igigi) | |
கிமு 2189 தொடக்கம் கிமு 2189 | நணும் (Nanum) | |
கிமு 2188 தொடக்கம் கிமு 2188 | எமி (Emi) | |
கிமு 2187 தொடக்கம் கிமு 2187 | யெலுலு (Elulu) | |
கிமு 2186 தொடக்கம் கிமு 2168 | டுடு (Dudu) | |
கிமு 2168 தொடக்கம் கிமு 2154 | ஷு-டருல் (Shu-Turul) (ஷடுரல்; ஷு-டரல்) |
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ ஆதியாகமம் 10:10
- ↑ Prince, "Materials for a Sumerian Lexicon", pp. 23, 73, Journal of Biblical Literature, 1906.
உசாத்துணை
தொகு- A. Leo Oppenheim, Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization