கீழ் மெசொப்பொத்தேமியா
கீழ் மெசொப்பொத்தேமியா (Lower Mesopotamia)[1][2] பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியாவின் கீழ் பகுதியாகும். கீழ் மெசொப்பொத்தேமிய தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாரசீக வளைகுடாவில் கலக்கும் முன்னர் அமைந்த வடிநிலத்தில் அமைந்த நிலப்பரப்புகள் ஆகும்.


மத்திய காலத்தில் வண்டல் மண் நிறைந்த கீழ் மெசொப்பொத்தேமியாவை அரபு மொழியில் சாவத் (Sawad) என்றும் பாரசீக மொழியில் சிபால் (Jibal) என்றும் அழைப்பர்.[3] கீழ் மெசொப்பொத்தேமியா பண்டைய சுமேரிய - பாபிலோனிய நாகரீகங்களின் பிறப்பிடமாகும்.[4] இதன் மேற்பகுதியில் (வடக்கில்) மேல் மெசொப்பொத்தேமியா உள்ளது.
புவியியல்
தொகுஇப்பகுதியில் என்றும் வற்றாத புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாய்வதால் பாக்தாத் முதல் பாரசீக வளைகுடா வரை 15000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புகளில் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற வண்டல் மண் படிந்துள்ளது. மேலும் பாரசீக வளகுடாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது.கீழ் மெசொப்பொத்தேமியாவில் இரண்டு பெரிய நன்னீர் ஏரிகள் உள்ளது.
பண்டைய நாகரிகங்கள்
தொகுகீழ் மெசொப்பொத்தேமிய சுமேரிய, அக்காடிய, பாபிலோனிய மற்றும் சால்டிய நாகரிகங்களின் தாயகமாக விளங்கியதற்கு முன்னர் இப்பகுதியில் உபைதுகள் பண்பாடடு (கிமு 6500 — கிமு 3800) சிறந்து விளங்கியது.
பண்டைய நகரங்கள்
தொகுகிமு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கீழ் மெசொப்பொத்தேமியாவில் பண்டைய நகர இராச்சியங்கள் தோன்றியது. அதில் குறிப்பட்ட சில நகரங்கள் பாபிலோன், ஊர், கிஷ், நிப்பூர், சிப்பர், உரூக், லகாசு, எசுன்னா, எரிது மற்றும் அசூர் ஆகும்.
மக்களும் மொழிகளும்
தொகுகீழ் மெசொப்பொத்தேமியாவின் புவியியற்பரப்புகளில் களிமண் பலகைகளில் ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்டது. மேலும் ஆப்பெழுத்துகளில் சுமேரிய மொழி, அக்காதியம், இட்டைட்டு மொழி, கிழக்கு செமிடிக் மொழிகள், மேற்கு செமிடிக் மொழிகள், ஆர்மீனிய மொழிகள் பேசியஅக்காடியப் பேரரசு, அசிரியப் பேரரசு, பாபிலோனியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, மீடியாப் பேரரசுகள் விளங்கியது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Masry, Abdullah Hassan (2014-09-19). Prehistory in Northeastern Arabia - Abdullah Hassan Masry - Google Książki. ISBN 9781317848059. Retrieved 2018-04-30.
- ↑ "meso toc" (PDF). Retrieved 2018-04-30.
- ↑ Hitti, Philip K. (2002-09-26). History of the Arabs. ISBN 9781137039828.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Study" (PDF). maajournal.com.