ஹலாப் தொல்லியல் மேடு

ஹலாப் தொல்லியல் மேடு (Tell Halaf) (அரபு மொழி: تل حلف‎) சிரியா நாட்டின் அல் ஹசாகா ஆளுநனரகத்தின் வடகிழக்கில், சிரியா-துருக்கி எல்லைப்புறத்தில் அமைந்த பண்டைய தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேட்டின் பகுதிகளில் கிமு 6,100 முதல் கிமு 5,400 வரை புதிய கற்கால ஹலாப் பண்பாடு சிறந்து விளங்கியது. ஹலாப் தொல்லியல் மேட்டில் புதிய கற்காலத்திய விலங்குகள் மற்றும் பல கோண வடிவில் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.[1]

ஹலாப் தொல்லியல் மேடு
تل حلف
சிதிலமடைந்த ஹலாப் தொல்லியல் மேட்டின் பகுதிகள்
ஹலாப் தொல்லியல் மேடு is located in Near East
ஹலாப் தொல்லியல் மேடு
Shown within Near East#Syria
ஹலாப் தொல்லியல் மேடு is located in சிரியா
ஹலாப் தொல்லியல் மேடு
ஹலாப் தொல்லியல் மேடு (சிரியா)
இருப்பிடம்அல்-ஹசாகா ஆளுனரகம், சிரியா
ஆயத்தொலைகள்36°49′36″N 40°02′23″E / 36.8266°N 40.0396°E / 36.8266; 40.0396
வகைகுடியிருப்புப் பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 6,100
பயனற்றுப்போனதுஏறத்தாழ கிமு 5,400
காலம்புதிய கற்காலம்
கலாச்சாரம்ஹலாப் பண்பாடு
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1911—1913, 1929
2006—present
அகழாய்வாளர்மேக்ஸ் வான் ஒப்பேன்கியும்
லுட்ஸ் மார்ட்டின்
அப்துல்- மசிஹ் பாக்டோ
உரிமையாளர்பொது
பொது அனுமதிYes

வெண்கலக் காலத்தில் ஹலாப் நகரம், இட்டைட்டு பேரரசினர் ஆட்சியில் இருந்தது. கிமு 10-ஆம் நூற்றாண்டில் ஆர்மீனிய நகர இராச்சியத்தின் பகுதியானது. ஹலாப் தொல்லியல் மேட்டை 1911—1913, 1929 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மேக்ஸ் வான் ஒப்பேன்கியும், லுட்ஸ் மார்ட்டின், அப்துல்- மசிஹ் பாக்டோ ஆகிய தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர். அகழாய்வின் போது கிடைத்த தொல்பொருட்கள் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுகளும், கண்டுபிடிப்புகள்

தொகு
 
ஹலாப் தொல்லியல் மேட்டின் பிந்தைய இட்டைட்டு பேரரசு காலத்திய[2] ஆணின் சிலை, துருக்கி அருங்காட்சியகம்
 
ஹலாப் தொல்லியல் மேட்டின் மேற்கு அரண்மனையில் கண்டெடுக்கப்பட்ட தேள்-பறவை மனிதச் சிற்பம்
 
ஹலாப் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க நூல் இழையில் செய்யப்பட்ட நகையின் மாதிரி வடிவம்
 
ஹலாப் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட பறவைச் சிற்பம் (184 x 70 X 70 செ மீ)

ஹலாப் தொல்லியல் மேடு துருக்கியின் கிழக்கு எல்லை அருகே சிரியா நாட்டில் புறாத்து ஆறு பாயும் வளமான ரஸ் அல்-அயின் நகரத்திற்கு அருகில் உள்ளது. அரமேய மொழியில் டெல் என்பதற்கு தொல்லியல் மேடு அல்லது முன்னாள் நகரம் என்பவர்.

கண்டுபிடிப்புகள்

தொகு

1899-இல் ஹலாப் தொல்லியல் மேட்டுப் பகுதிகள் ஒட்டமான் பேரரசு ஆட்சியில் இருந்த போது, மேக்ஸ் வான் ஒப்பேன்கியும் என்ற ஜெர்மானிய இராஜதந்திரி, கிழக்கு துருக்கி முதல் மேல் மெசொப்பொத்தேமியாவின் பாக்தாத் நகரம் வரை இருப்புப் பாதை அமைக்க நிலத்தை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

19 நவம்பர் 1899 அன்று ஜெர்மானியர் உள்ளூர் மக்கள் கூறிய கதைகள் மற்றும் அவர்கள் காண்பித்த சிலைகளின் அடிப்படையில் அந்த ஜெர்மானியர் மேக்ஸ் வான் ஒப்பேன்கியும் 19 நவம்பர் அன்று மணலுக்கு அடியில் ஹலாப் தொல்லியல் மேட்டை கண்டறிந்தார். மூன்றே நாட்களில் அத்தொல்லியல் மேட்ட்டில் அமர்ந்த நிலையில் பெண் தெய்வத்தின் சிற்பம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க தொல்பொருள்கள் கண்டுபிடித்தார். மேலும் மேற்கு அரண்மனையைக் கண்டுபிடித்தார்.[3]:16,24,63

மேக்ஸ் வான் ஒப்பென்ஹியுமின் அகழாய்வுகள்

தொகு

1907-இல் பிரபல தொல்லியல் அறிஞர் எர்னஸ்ட் ஹெர்ஸ்பீல்டுவின் கோரிக்கைக்கு இணங்க, மேக்ஸ் வான் ஒப்பேன்கியும் மீண்டும் ஹலாப் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்தனர்.

5 ஆகஸ்டு 1911-இல் மேக்ஸ் வான் ஒப்பேன்கியும், அவரது குழுவினரும் ஹலாப் தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சிதிலமடைந்த பண்டைய குசானா (Gozan) நகரத்தையும், பெரிய சிலைகளையும், தொல்பொருள்களையும், கல்லறைகளையும், வழிபாட்டு இடங்களையும், மன்னர் கப்பாரா கட்டிய மேற்கு அரண்மனையையும் கண்டுபிடித்தனர். இவ்விடத்தில் கண்டுபிடித்த புதிய கற்காலத்திய வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் மூலம் ஹலாப் பண்பாடு குறித்து அறிந்தனர்.[3]:25,48–49,64–66

1929-இல் ஹலாப் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் 65% பெர்கமோன் அருங்காட்சியகம் பெர்லினிலும்[4], 35% சிரியாவின் அலெப்போ தேசிய அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது.[3]:26[3]:16[5][6]

2006-இல் சிரியா மற்றும் ஜெர்மானிய தொல்லியல் அறிஞர்கள் ஹலாப் தொல்லியல் மேட்டில் மீண்டும் அகழாய்வு செய்தனர்.

ஹலாப் பண்பாடு

தொகு

ஹலாப் தொல்லியல் மேடு, மட்பாண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஹலாப் பண்பாட்டுக்குரியதாகும். ஹலாப் தொல்லியல் மேடு கிமு 6,100 முதல் கிமு 5,400 வரை செழித்து விளங்கியது. ஹலாப் பண்பாட்டிற்கு பிறகு மேல் மெசொப்பொத்தேமியாவில் உபைது பண்பாடு நீண்ட நிலவியது.

குசானா

தொகு
 
ஹலாப் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட பசால்ட் கல்லில் செதுக்கப்பட்ட வேட்டையாடும் சிற்பம், காலம் கிமு 850 – 830
 
மன்னர் காப்ரா அரண்மனையில் பறவை உடல், மனிதத் தலையுடன் கூடிய அசுரன், வால்டர்ஸ் கலை அருகாட்சியகம், பால்டிமோர்

கிமு 10-ஆம் நூற்றாண்டில், ஆர்மீனிய சிற்றரசர் காப்ரா என்பவர் ஹலாப் தொல்லியல் மேட்டுப் பகுதியில் தங்கள் தலைநகரத்தை குசானா என்ற பெயருடன் நிறுவினார். கிமு 894-இல் புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அதாத்-நிராரி ஆட்சியின் கீழ் ஹலாப் பகுதியில் ஆர்மீனிய நகர இராச்சியம் இருந்தது. குசானா நகரம் புது அசிரியப் பேரரசு மற்றும் பார்த்தியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் குசானா நகரம் உருக்குலைந்தது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Tall Ḥalaf, archaeological site, Syria
  2. Museum notice File:Statue TellHalaf 01.jpg
  3. 3.0 3.1 3.2 3.3 Kunst- und Ausstellungshalle der Bundesrepublik Deutschland (ed.) (2014). Abenteuer Orient - Max von Oppenheim und seine Entdeckung des Tell Halaf (German). Wasmuth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8030-3365-9. {{cite book}}: |last= has generic name (help)
  4. Berlin's Pergamon Museum exhibits Tell Halaf statues
  5. Monuments of Tell Halaf in Allepo Museum
  6. Metropolitan Museum of Art (2020). "Chronology of the Tell Halaf Reliefs From Excavation to the Present" (PDF). www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.{{cite web}}: CS1 maint: url-status (link)

மேற்கோள்கள்

தொகு
  • Abd el-Mesih Baghdo, Lutz Martin, Mirko Novák, Winfried Orthmann: Ausgrabungen auf dem Tell Halaf in Nordost-Syrien. Vorbericht über die erste und zweite Grabungskampagne (German), Harrasowitz, Wiesbaden 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-06068-4.
  • Abd el-Masih Baghdo, Lutz Martin, Mirko Novák, Winfried Orthmann: Ausgrabungen auf dem Tell Halaf in Nordost-Syrien. Vorbericht über die dritte bis fünfte Grabungskampagne 2008-2010. (German) Harrassowitz, Wiesbaden 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-06828-4.
  • Jörg Becker: Tell Halaf. Die prähistorischen Schichten - Neue Einblicke. in: D. Bonatz, L. Martin (eds.): "100 Jahre archäologische Feldforschungen in Nordost-Syrien - eine Bilanz" (German). Harrassowitz, Wiesbaden 2013, pp. 45–64, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-10009-0.
  • Mirko Novák: Gozan and Guzana. Anatolians, Aramaeans and Assyrians in Tell Halaf. in: D. Bonatz, L. Martin (eds.): "100 Jahre archäologische Feldforschungen in Nordost-Syrien - eine Bilanz. Harrassowitz, Wiesbaden 2013, pp. 259-281, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-10009-0.
  • Hijara, Ismail. The Halaf Period in Northern Mesopotamia London: Nabu, 1997.
  • Axe, David. "Back from the Brink." Archaeology 59.4 (2006): 59–65.
  • Winfried Orthmann: Die aramäisch-assyrische Stadt Guzana. Ein Rückblick auf die Ausgrabungen Max von Oppenheims in Tell Halaf. Schriften der Max Freiherr von Oppenheim-Stiftung. H. 15. Harrassowitz, Wiesbaden 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-05106-X.
  • U. Dubiel – L. Martin, Stier aus Aleppo in Berlin. Bildwerke vom Tell Halaf (Syrien) werden restauriert (German), Antike Welt 3/2004, 40–43.
  • G. Teichmann und G. Völger (ed.), Faszination Orient. Max Freiherr von Oppenheim. Forscher, Sammler, Diplomat (German) (Cologne, Max Freiherr von Oppenheim-Stiftung 2003).
  • Nadja Cholidis, Lutz Martin: Kopf hoch! Mut hoch! und Humor hoch! Der Tell Halaf und sein Ausgräber Max Freiherr von Oppenheim. (German) Von Zabern, Mainz 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2853-2.
  • Bob Becking: The fall of Samaria: an historical and archeological study. 64–69. Leiden 1992.
  • Gabriele Elsen, Mirko Novak, Der Tall Halāf und das Tall Halāf-Museum (German), in: Das Altertum 40 (1994) 115–126.
  • Alain Gaulon, "Réalité et importance de la chasse dans les communautés halafiennes en Mésopotamie du Nord et au Levant Nord au VIe millénaire avant J.-C." (French), Antiguo Oriente 5 (2007): 137–166.
  • Mirko Novak, Die Religionspolitik der aramäischen Fürstentümer im 1. Jt. v. Chr. (German), in: M. Hutter, S. Hutter-Braunsar (ed.), Offizielle Religion, lokale Kulte und individuelle Religion, Alter Orient und Altes Testament 318. 319–346. Munster 2004.
  • Johannes Friedrich, G. Rudolf Meyer, Arthur Ungnad et al.: Die Inschriften vom Tell Halaf. (German), Beiheft 6 zu: Archiv für Orientforschung 1940. Reprint: Osnabrück 1967.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tell Halaf
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலாப்_தொல்லியல்_மேடு&oldid=3931377" இலிருந்து மீள்விக்கப்பட்டது