எலிபென்டைன் தீவு
எலிபென்டைன் தீவு (Elephantine) தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த தீவு மற்றும் தொல்லியல் களம் ஆகும். எலிபென்டைன் தீவு, வடக்கிலிருந்து தெற்காக 1200 மீட்டர் நீளமும், 400 மீட்டர் அகலமும் கொண்டது. இத்தீவு யானையின் தும்பிக்கை வடிவில் உள்ளதால் இதற்கு எலிபென்டைன் தீவு எனப்பெயராயிற்று. பண்டைய எகிப்தியர்கள் சிற்பங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான கருங்கற்களை இத்தீவிலிருந்து வெட்டி எடுத்தனர். இத்தீவின் அகழாய்வில் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பெயர்: جزيرة الفنتين | |
---|---|
தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதியில் அமைந்த எலிபென்டைன் தீவின் மேற்கு கரை | |
புவியியல் | |
ஆள்கூறுகள் | 24°05′N 32°53′E / 24.09°N 32.89°E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | நைல் நதி |
நீளம் | 1,200 m (3,900 ft) |
அகலம் | 400 m (1,300 ft) |
நிர்வாகம் | |
| ||||||
3bw "Elephantine"[1] படவெழுத்து முறையில் |
---|
படக்காட்சிகள்
தொகு-
எலிபென்டைன் தீவின் சித்திரம்
-
கனும் கோயில்
-
அஸ்வான் அருங்காட்சியகம், எலிபென்டைன் தீவு
-
நடு எலிபென்டைன் தீவில் நூபியர்களின் குடியிருப்புகள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "3bw" in Faulkner, Concise Dictionary of Middle Egyptian cf. http://projetrosette.info/popup.php?Id=1012&idObjet=423