எலிபென்டைன் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள்

எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் (Elephantine Papyri and Ostraca) பணைய எகிப்தின் தெற்கு எகிப்தில் அமைந்த அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த எலிபென்டைன் தீவில்[1] நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகளை குறிப்பதாகும். இந்த பாபிரஸ் காகித்ததில் அகிகர் கதை குறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கிமு நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் பண்டைய எகிப்திய மொழி, அரமேயம், பண்டைய கிரேக்கம், இலத்தீன் மற்றும் கோப்டிக் மொழிகளில் உள்ளது.

அரமேயம் மொழியில, அறிவு ஜீவியான அகிகர் குறித்தான் கதையைக் கூறும் பாபிரஸ் குறிப்புகள்

இந்த பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் அக்காலத்தில் நடைபெற்ற சட்ட ஒப்பந்தங்கள், குடும்பங்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதங்கள், அக்காலத்திய சட்டம், சமூகம், சமயம், மொழிகள், பெயராய்வு மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்கள் குறித்தவைகள் ஆகும்.

எலிபென்டைன் ஆவணங்களில் குடும்பம் தொடர்பான ஆவணங்கள், திருமண முறிவு ஆவணங்கள், அடிமைகளை விடுதலை செய்யும் ஆவணங்கள் மற்றும் வணிக ஒப்பந்த ஆவணங்களைக் கொண்டது.

எலிபென்டைன் தீவில் 1907-இல் கண்டு பிடிக்கப்பட்ட அரமேய மொழியில் எழுதப்பட்ட பாபிரஸ் குறிப்புகளில், பண்டைய எகிப்தை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் டேரியஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 423 முதல் 404 முடிய) எலிபென்டைன் தீவில் தங்கியிருந்த யூத சமூகத்திற்கும், யூதப் படைவீர்களுக்கும் 7 நாள் பாஸ்கா திருவிழா அனுமதி அளிக்கப்பட்டதாக பாபிரஸ் கடிதக் குறிப்புகள் கூறுகிறது. [2][3]

எலிபென்டைன் தீவு தொல்லியல் மேட்டின் வரைபடம், ஆண்டு 1809 Carte de l'Égypte
அகழாய்விற்கு கண்டுபிடிக்கப்பட்ட எலிபென்டைன் தீவின் கோயில்

படக்காட்சிகள் தொகு

எலிபென்டைன் தீவு பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் புரூக்கிளின், பெர்லின் மற்றும் கெய்ரோ அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.

புரூக்கிளின் அருங்காட்சியகத்தில் உள்ளவைகள் தொகு

பெர்லின் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளவைகள் தொகு

பிற தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

முதன்மை ஆதாரங்கள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு