தும்பிக்கை

தும்பிக்கை என்பது யானையின் நீண்டு வளர்ந்து விட்ட மேல் உதடும் மூக்கும் ஆகும். இது மீள்விசைத் தன்மை கொண்டது. இவ்வுறுப்பு யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகிறது. மொத்தம் 1,50,000 தசைநார்களால் ஆனது. சின்னஞ்சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை யானையால் தும்பிக்கை கொண்டு தூக்க முடியும். உண்கையில் மரக்கிளைகளை எட்டிப் பறிக்கவும் மரப்பட்டைகளை உரிக்கவும் உணவு உட்கொள்ளவும் நீர் அருந்தவும் யானைகள் தும்பிக்கையை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன.

தர்பூசணிப் பழத்தைத் தும்பிக்கையின் உதவியால் உண்ணும் ஆசிய யானை

ஆப்பிரிக்க யானைக்கு தும்பிக்கையில் இரு விரல்களும் ஆசிய யானைக்கு தும்பிக்கையின் மேற்புறம் ஒரு விரலும் இருக்கும். தும்பிக்கை காயம்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ யானையால் உயிர்வாழ இயலாது.[1]

துணை நூற்பட்டியல் தொகு

  • ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம் : மலைபடு கடாம் பதிப்பகம். பக். 117. 

மேற்கோள்கள் தொகு

  1. ச.முகமது அலி, பக். 20
"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பிக்கை&oldid=1591352" இலிருந்து மீள்விக்கப்பட்டது