மரம்

தாவர இனம்

மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும்,[1][2] பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும்.[3] மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

மேப்பிள் மரம்
பவோபாப் மரம் தென்னாபிரிக்காவிலுள்ளது
கலிபோர்னியா மாநிலத்தில் வளரும் செம்மரம்.

இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.

காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும் போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர்.

உருவவியல் (Morphology)

தொகு

வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது. மரம் (மூலப்பொருள்), காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் (temperate) காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும்.

எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் பன்னங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான வடிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை.

ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி (savanna) எனப்படுகின்றது. மேலும்..

முக்கிய மரவகைகள் (genera)

தொகு

மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது.

 
கட்டிடத்தின் மேலே வளர்க்கப்படும் மரங்கள்
 
நைசாசியே (Nyssaceae):பூத்திருக்கும் ஒரு புறா மரம்
 
கலிபோர்னியா செம்மரம், உலகின் அதி உயரமான மர வகை; ஒரு ஊசியிலை மரம்

சைக்கட்டுகள் (வித்துமூடியிலித் தாவரங்கள்)

தொகு

வாழ்வுக் கட்டங்கள்

தொகு

மரங்களின், விசேடமாக ஊசியிலை மரங்களின், வாழ்க்கை வட்டம், காடு வளர்ப்புத் துறையில், கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது:

  1. விதை
  2. நாற்று: விதையிலிருந்து முளைத்துவரும், முளையத்தின் நிலத்துக்கு மேலுள்ள பகுதி.
  3. Sapling: முளையம் வளர்ந்து 1மீ உயரத்திலிருந்து அதன் தண்டு 7 சமீ விட்டமுள்ளதாக ஆகும் வரையுள்ள கட்டம்.
  4. Pole: 7 தொடக்கம் 30 சமீ விட்டமுள்ள இளம் மரங்கள்.
  5. முதிர்ந்த மரம்: 30 சமீ க்கு மேற்பட்ட விட்டம், இனப்பெருக்கக் காலத்தின் தொடக்கம்.
  6. முதிய மரம்: பழைய வளர்ச்சிக் காடுகளில் அதிகம்; உயர வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும், அதிகரித்த விதை உற்பத்தி.
  7. அளவுமீறிய முதிர்ச்சி: dieback மற்றும் பழுதடைதல் சாதாரணம்.
  8. Snag: நிற்கும் இறந்த மரங்கள்
  9. மரக்குற்றி/கழிவு: விழுந்த மரக்குற்றிகள்

மரத்தின் விட்டம், அதன் அடியில், நிலத்தின் அதியுயர்ந்த புள்ளியிலிருந்து 1.3 – 1.5 மீட்டர் உயரத்தில் அளக்கப்படுகின்றது. 7 சமீ விட்ட வரையறை பொருளாதார ரீதியிலானது. இதுவே கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்காக விற்கப்படக்கூடிய அதி குறைந்த விட்டமாகும். 30 சமீ விட்டமே அரியப்படும் மரங்களுக்கான ஆகக்குறைந்த விட்டம். ஒவ்வொரு கட்டமும் may be uniquely perceptive to different pathogens and suitable for especially adapted arboreal animals.

பண்பாடு

தொகு

மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்துவருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ehrenberg, Rachel (30 March 2018). "What makes a tree a tree?". Knowable Magazine. doi:10.1146/knowable-033018-032602. https://knowablemagazine.org/article/living-world/2018/what-makes-tree-tree. பார்த்த நாள்: 21 June 2021. 
  2. "What is a tree?". Smartphone tour. University of Miami: John C. Gifford Arboretum. 2012. Archived from the original on 20 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
  3. Tokuhisa, Jim. "Tree definition". Newton Ask a Scientist. Archived from the original on 6 December 2013. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரம்&oldid=4098488" இலிருந்து மீள்விக்கப்பட்டது