உரியம்
உரியம் (phloem) என்பது கலன்றாவரங்களில் சுக்குறோசு முதலான போசணைப் பதார்த்தங்களைக் கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் ஆகும்.[1], உரியத்தின் மூலம் ஒளித்தொகுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.
கட்டமைப்பு
தொகுஉரிய இழையத்தின் கலக் கட்டமைப்பு. உரிய நார்கள் காட்டப்படவில்லை.
|
உரியம் ஒரு கூட்டு இழையமாகும். இது கடத்தலில் முக்கிய இடம்பெறும் நெய்யரிக்குழாய், நெய்யரித்தட்டு, மற்றும் உரிய புடைக்கலவிழையத்துடன், அதிலிருந்து விசேடப்படுத்தப்பட்ட கடத்தல் இழையத்திற்கு ஆதாரத்தை வழங்கும் தோழமைக் கலங்கள், கடத்தல் தொழிலுடன் மேலதிகமாக தாவரத்திற்கு ஆதாரத்தை வழங்கக்கூடிய வல்லருக்கலவிழையத்தினாலான உரிய நார்கள் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
- நெய்யரிக்குழாய்களும் நெய்யரித்தட்டுக்களும்: இவையே முக்கியமான கடத்தல் தொழிலைச் செய்கின்றன. ஒளிச்சேர்க்கையினால் இலைகளில் தொகுக்கப்படும் சுக்குரோசு போன்ற போசணைப் பொருட்களை தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கடத்தும். இவற்றின் உயிரணுக்களின் முடிவில் துளைகள் காணப்படும்[2].
- புடைக்கலவிழையம்: உரியத்தில் காணப்படும் புடைக்கலவிழையம் உரியப் புடைக்கலவிழையம் எனப்படும். இது ஒரு உயிருள்ள இழையமாகும். இவைகள் மாவுச்சத்தினையும். கொழுப்புச்சத்தினையும் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை பிசின் (resin) களையும். தனின் (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte), பூக்கும் தாவரங்களிலும், இருவித்திலைத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. ஒருவித்திலைத் தாவரங்களில், பொதுவாக உரியப் புடைக்கலவிழையம் காணப்படுவதில்லை.[2]
- தோழமைக்கலங்கள்: புடைக்கலவிழைய உயிரணுக்களில் இருந்து விசேடமடைந்த உயிரணுக்களைக் கொண்டதாகும். இவை கடத்தலுக்கான உதவிய வழங்குகின்றது.[2]
- உரிய நார்கள்: உரியத்தில் காணப்படும் வல்லருகுக்கலவிழையம் உரிய நார்கள் மற்றும் Sclereids என அழைக்கப்படும் இழைய வகைகளைக் கொண்டுள்ளன. உரிய கூட்டிழையத்தில் காணப்படும் நான்கு வகை இழையங்களில் இவை மட்டுமே உயிரற்ற உயிரணுக்களாகும். இவை தாவரங்களுக்கு, வலிமையளிப்பதுடன் தாங்கும் தொழிலையும் செய்கின்றன. இவற்றில் உரிய நார்கள் குறுகலான, செங்குத்தான நீண்ட உயிரணுக்களாகும். இவற்றின் உயிரணுச்சுவர் மிகவும் தடித்தும், உயிரணு அறை மிகவும் குறுகலாகவும் காணப்படுவதுடன் ஓரளவு நெகிழும்தன்மை கொண்டதாக இருக்கும். Sclereids ஒழுங்கற்ற உருவத்தைக் கொண்டிருப்பதுடன், நெகிழும்தன்மையைக் குறைத்து வைக்கின்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72
- ↑ 2.0 2.1 2.2 2.3 Raven, Peter H. (1992). Biology of Plants. New York, NY, U.S.A.: Worth Publishers. p. 791. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1429239956.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)