மால்வேசியே
மால்வேசியே (மால்வேசியே) | |
---|---|
Malva parviflora | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Malvales
|
குடும்பம்: | மால்வேசியே (மால்வேசியே) திறனாய்வாளர்: AntoineLaurentdeJussieu
|
துணைக்குடும்பங்கள் | |
|
மால்வேசியே என்பது (தாவர வகைப்பாடு : Malvaceae; ஆங்கிலம்:mallows) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 200 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 2,300 இனங்களும் உள்ளன.[1] உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும். வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 22 பேரினங்களும். 125 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளது. தமிழில் இதன் பெயரை பருத்திக் குடும்பம் எனலாம்.
வளரியல்பு
தொகுஓராண்டு சிறு செடிகள் (எ,கா, மால்வா சில்வெஸ்ட்ரிஸ்) அல்லது பல ஆண்டு புதர் செடிகள் (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) அல்லது மரங்கள் (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா), இக்குடும்பத் தாவரங்களில் வழவழப்பான மியூசிலேஜ் நீர்மம் காணப்படும், நட்சத்திர வடிவ மயிர் வளரிகள், தாவரத்தின்இளம் உறுப்புகளின் மீது காணப்படுகின்றன.நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையுடையது. நட்சத்திர வடிவ ரோமவளரிகளால்,இளம் தண்டு மூடிக் காணப்படும். இதன் வேர்,ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.
இலையமைப்பு
தொகுஇலைகள், இலைக்காம்புடையது. தனி இலை. முழுமையானது (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா) அல்லது அங்கை வடிவ மடல்களையுடையது. (எ,கா) காஸிபியம் ஆர்போரியம்) மாற்றியலையமைவு. இலையடி செதிலுடையது. விளிம்பு பற்கள் போன்றது (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) மற்றும் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.
ஊடகங்கள்
தொகு-
Pavonia odorata
-
மென்மயிர்கள்
-
துரியன் பழங்கள்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Judd & al.
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. அப்பட்டியலிலுள்ள, இக்குடும்பச்சிற்றினங்கள்(2013ஆண்டு-சூன்-கணக்குப்படி, மொத்தம் 51[தொடர்பிழந்த இணைப்பு]) சில வருமாறு;-
- Abutilon eremitopetalum
- Abutilon menziesii
- Abutilon sachetianum
- Abutilon sandwicense
- Atkinsia cubensis
- Dicellostyles axillaris
- Hampea breedlovei
- Hampea dukei
- Hampea micrantha
- Hampea montebellensis
- Hampea reynae
- Hampea sphaerocarpa
- Hampea thespesioides
- Hibiscadelphus bombycinus
- Hibiscadelphus crucibracteatus
- Hibiscadelphus distans
- Hibiscadelphus giffardianus
- Hibiscadelphus hualalaiensis
- Hibiscadelphus wilderianus
- Hibiscadelphus woodii
- Hibiscus clayi
- Hibiscus dioscorides
- Hibiscus diriffan
- Hibiscus escobariae
- Hibiscus fragilis
- Hibiscus macropodus
- Hibiscus malacophyllus
- Hibiscus noli-tangere
- Hibiscus quattenensis
- Hibiscus scottii
- Hibiscus socotranus
- Hibiscus stenanthus
- Julostylis polyandra
- Kokia cookei
- Kokia drynarioides
- Kokia kauaiensis
- Kokia lanceolata
- Lebronnecia kokioides
- Nototriche ecuadoriensis
- Nototriche jamesonii
- Robinsonella brevituba
- Robinsonella mirandae
- Robinsonella samaricarpa
- Symphyochlamys erlangeri
- Thespesiopsis mossambicensis
- Wercklea cocleana
- Wercklea flavovirens
- Wercklea grandiflora
- Wercklea intermedia
- Wissadula diffusa
- Wissadula divergens
- Hibiscus kokio ssp. kokio என்பதைக் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.