தாவர வகைப்பாட்டியல்

தாவர வகைப்பாட்டியல் (Plant taxonomy) அல்லது பாகுபாட்டியல் என்பது தாவர உயிரினங்களைக் கூட்டங்களை, அறிவியல் முறைப்படி, அவற்றின் பொதுவான இயல்புகளைக் கொண்டு பிரித்தல் ஆகும். ஒரு உயிரினக் கூட்டம் (taxa), (கூட்டங்கள்=taxon) வகைப்பாட்டியல்[1] வரிசைமுறையில், ஒரு தனித்துவ இடத்தைப் பெறுகிறது. இவ்வாறாக உயிரினக் கூட்டங்கள், நேர்முக, இறங்கு, படிப்படியான, அடுக்குவரிசையில், ஒவ்வொரு உயிரின்தோடும் முடிகிறது. இதனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க, பெயரீட்டுத் தரநிலையானது, (taxonomic rank), வகைப்பாட்டியல் அடுக்குமுறையாக ( taxonomic hierarchy) உருவாகிறது.[2][3]

பெயர் தோற்றம்

தொகு

இலத்தீனிய மொழியில் இருந்து, ஆங்கிலம் உள்ளிட்ட பல மேற்கத்திய மொழிகள் பிறந்தன. மேலும், இதற்கு கிரேக்கமும் துணை நின்றன. எனவே, மேற்கத்திய அறிவியல் அறிஞர்கள் தங்களுக்குள்ளே அறிவியல் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், கலந்துரையாடலுக்கும் பொதுவான ஒரு முறை தேவைப்பட்டது. இம்முறையால், தங்களுக்குள் துறை சார் அறிவும், அனுபவமும் பகிரப்பட்டு வளரும் என்பதை ஏற்றுக் கொண்டனர். எனவே, அம்மொழிகளில் இருந்து, 'ஒழுங்குமைவு, முறை' என்ற இரு சொற்களைக் கொண்டு, 'வகைப்பாட்டியல்' (Taxonomy)என்ற சொல்லை உருவாக்கினர். ( பண்டைக் கிரேக்கம்τάξις taxis, "arrangement", and -νομία -nomia, "அறிவியல் முறை"[4]) கார்லசு லின்னேயசு என்ற சுவீடிய உயிரியலாளர், இன்றைய உயிரியல் வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவரின் வகைப்பாட்டியல் முறை, லின்னேயன் வகைப்பாட்டியல் முறை (Linnaean classification) என அழைக்கப்படுகிறது. அவர் உயிரினங்களை இரு பெயரீட்டு முறையில் (binomial nomenclature) பெயரிட்டு அழைத்தார். அவர் தொடங்கிய வகைப்பாட்டியல் முறைமை,, இன்று பல அறிவியல் முனைப்புகளினால் பல மடங்கு வளர்ந்துள்ளது.

நோக்கம்

தொகு

தாவர வகைப்பாட்டியல் (Plant taxonomy) என்ற அறிவியல் தாவரங்களை அடையாளமிடுகிறது; கண்டறிகிறது; வருணிக்கிறது; வகைப்படுத்துகிறது; இறுதியாக ஒவ்வொரு தாவரத்திற்கும் பெயரிடுகிறது. இவ்வாறாக, தாவரவியலில் இந்த அறிவியல்முறை முக்கியமானதாகத் திகழ்கிறது. இருப்பினும், ஒரு திட்டமான வரையறைகளுடன், இணக்கமான, பாரம்பரியமாக அனைத்து தாவரவியலாளர்களும் ஏற்றுக்கொண்ட, பின்பற்றும் ஒரேயொரு முறை மட்டுமே நிலைபெறவில்லை.. பல வகைப்பாட்டியல் முறைகள், காலத்தின் வளர்ச்சியில், பிற உயிரியல் வளர்ச்சிகோளோடு இணைந்து, அவ்வப்போது தோன்றி, வகைப்பாட்டியல் நோக்கம் விரிந்து, பல உட்பிரிவுகளாக ஓங்கி வளருகின்றனன. அவற்றினை, இங்கு சுருக்கமாகக் காண்போம்.

துறைசார் தேவை

தொகு

வேளாண்மை வேகமாக வளர செய்யப்படும் ஆய்வுகளில், இந்த அறிவியல் துறையே, முதற்படி ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான வகைப்படுத்தும் முறையை, தாவரவியல் அறிஞர்கள் பின்பற்றுகின்றனர். இவற்றால் நாளுக்கு நாள் தாவரங்களை நாம் புரிந்து கொள்ளும் திறன் அதிகமாகி, தாவரத்தால் கிடைக்கும் பயன்களைப் பெருமளவில் பெறுகிறோம். இந்த வகையான அறிவியல் வளரும் போது, நமது பொருளாதாரமும், குறுகிய காலத்தில் அதிகமாகும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, தாவரங்களை குறுகிய காலத்தில் அறுவடை செய்யமுடிகிறது.

முறைமைகளின் வளர்ச்சி வரலாறு

தொகு

மரபியில் அடிப்படைகளையும், வேதிப்பண்புகளையும் கொண்ட புதிய வகைப்பாட்டியல் முறைமைகள், பல தாவரத் தரவுத்தளங்களில் பின்பற்றப்படுகின்றன. எனினும், அவை உயரந்து வளர பிற, வகைப்பாட்டியல் முறைமைகளும் காரணிகளாக விளங்குகின்றன. , தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணையில் (List of systems of plant taxonomy) அவற்றின் காலக்கோடுகளைக் காணலாம் . அவற்றில் முக்கியமானவைகளுக்கு இங்கு அறிமுக விளக்கம் தரப்படுகிறது. அதன்படி, தாவர பாகுபாட்டியலை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. செயற்கைப் பாகுபாட்டு முறைகள் (Artificial system of classification)
    இதில் ஓரிரு புற தாவர அமைப்புகளைக்(உருவவியல்=Morphology-biology) கொண்டே, பாகுபடுத்துதல் உருவாக்கப் படுகிறது.
  2. இயற்கைப் பாகுபாட்டு முறைகள் (Natural system of classification)
    உயிரினங்களின் பரிணாம (Evolution) அடிப்படையிலும், மரபின (Genetics) அடிப்படையிலும், பாகுபடுத்துதல் உருவாக்கப் படுகிறது.

செயற்கைப் பாகுபாட்டு முறைகள்

தொகு
 
'தியோபரசுடசு', கிரேக்க அறிஞர்
  • 'தியோபரசுடசு' முறைமை (கி. மு. 390/289 )
பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட தாவரங்களின் எண்ணிக்கை நாற்பது இலகரத்தை விட 40, 00, 000) அதிகம் ஆகும். இன்னும் பல தாவரங்கள் கண்டறியப்படாமல் உள்ளன. இருப்பினும், இவைகளை எளிதில் புரிந்து கொள்ள ஒரு முறை தேவை என்பதை அறிவியல் அறிஞர்கள் எண்ணி வந்தனர். அதன்படி, ஆவணங்களின் படி, கி. மு. 390/289 ஆம் ஆண்டு 'தியோபரசுடசு' (Theophrastus) என்பவரை தாவரங்களை மூன்று வகையாகப் பிரித்தார்.
  • 'தியோபரசுடசு'க்கு பின்
'தியோபரசுடசு' முறைமையை, அவருக்கு பின் வந்தவர்கள் பின்பற்றவில்லை. நீருக்கும், தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு அடிப்படையில், நீர்த்தாவரங்கள், வறண்டநிலத் தாவரங்கள், இடைநிலைத் தாவரங்கள் என மூன்று வகையாகப் பிரித்தனர்.
  • காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624))
இருசொற் பெயரீட்டு முறை, நிலைநாட்டப் பட்டது. எடுத்துக்காட்டாக, Dianthus caryophyllus இம்முறைக்கு முன், ஒரு தாவரத்திற்கு பல சொல் முறையீட்டு முறை (polynominal) நிலவியது. அதன்படி ஒரு தாவரத்தின் பெயர் பின்வருமாறு இருக்கும். Dianthus caryophyllus என்ற பெயர் எடுத்துக்காட்டாகக் காட்டப் படுகிறது, dianthus floribus solitaris, squamis calycinis subovatis brevissmiss corollis crenatis. இரு பெயரீட்டு முறையிலும், முதற்பெயர் பேரினம் ஆகும். ஆனால், இருசொற்பெயரீட்டு முறையில் பேரினத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் காட்டாயம் குறிக்கப்பட வேண்டும்.
இந்த முறையில், ஒரு தாவரத்தின் வெளிப்புறப் பண்புகளான, இலை, பூ போன்றவற்றின் இயல்புகளைக் கொண்டு, ஒரு தாவரம் வகைப்படுத்தப் படுகிறது. ஒரு தாவரத்தில் உள்ள ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தாவரக்கூட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதன்படி, இருபத்தி நான்கு வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.[5]

இயற்கைப் பாகுபாட்டு முறைகள்

தொகு

இடார்வினின் பரிணாம முறைமை (1859)

தொகு
 
title=இடார்வின்

1859 ஆம் ஆண்டு இடார்வின் என்ற உயிரியலாளர், இயற்கைத் தேர்வின் மூலம் இனங்களின் பிறப்பு என்ற நூலினை வெளியிட்டார். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதுவரை இருந்த உயிரியக் கொள்கைகளை மாற்றியது. இதன் மூலம், உயிரினங்களின் இயல்புகள், கடவுளின் படைப்பால் தோன்றிய இயல்புகள் என்ற லின்னேயசின் கொள்கை, அடியோடு மாறியது.

பல தாவரவியலாளர்கள் தங்களது பெயரால், தனிமுறையில் தாவர வகைப்பாட்டியலை உருவாக்கினர். அவற்றில் சில உட்கூறுகள் முக்கியமானவையாக பின்னர் பன்னாட்டு தாவரவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இங்கிலர் முறைமை (1875)

தொகு

முதன் முதலாக எச்லர் என்ற செருமானிய அறிஞரே, தாவர மரபியல் அடிப்படையில் தாவர வகைப்பாட்டியலை(Blüthendiagramme (1875–1878), Syllabus (1876–1890)) உருவாக்கினார்.[6] [7] அவருக்கு பின் அதனை தொடர்ந்து, இங்கிலர் ( Engler) மேம்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு, இதன் புதிய பதிப்பு வந்துள்ளது.[8] இன்றளவும் பாசிகள் முதல் பூக்கும் தாவரங்கள் வரையிலான அனைத்துத் தாவரங்களையும் இம்முறைமை செவ்வனே வகைப்படுத்துகிறது.[9]

சுட்ரசுபர்கர் முறைமை (1894)

தொகு
 
title=சிடார்சுபர்கெர்

சுட்ரசுபர்கர் (Strasburger) என்ற தாவரவியல் பேராசிரியர், பல உயரிய தாவரவியல் விருதுகளைப் பெற்றவர். இவரே முதன்முதலாக, பூக்கும் தாவரங்கள் , பூக்காத் தாவரங்களின், தாவரங்களின் சூற்பை உறையின் இயல்புகளை துல்லியமாக, தனது நூலில் ( Lehrbuch der Botanik für Hochschulen (Textbook of Botany), 1894) விவரித்தவர். இந்நூலில் விவரிக்கப்பட்ட வகைப்பாட்டியல் மாற்றங்கள் இன்றளவும் ஏபிச்சி முறைமையில் மேம்படுத்தப்படுகின்றன.[10]

கிரான்குசிட்டு முறைமை (1981)

தொகு

கிரான்குசிட்டு (Cronquist) 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[11] இவர் வடஅமெரிக்கத் தாவரவியலாளர். இவர் இரு நூல்களை வெளியிட்டார் .[12] இவர் பூக்கும் தாவரங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்தார். பிறகு அதன் கீழ், இருவித்திலைத் தாவரங்கள், ஒருவித்திலைத் தாவரங்கள் ஆகிய இரண்டும் அமைகின்றன. இம்முறை இன்றும் பின்பற்றப் படுகின்றன. ஆனால், தற்போதுள்ள முறை, அதன் உட்பிரிவுகளில் தான் வேறுபடுகின்றன. இருவித்திலையில் (Magnoliopsida = dicotyledons) 64 வரிசைகளும், வகுப்பில், 321 குடும்பங்களும் அடக்கப் பெற்றன. ஒருவித்திலையில் (Liliopsida = monocotyledons), 19 வரிசைகளும், வகுப்பில், 65 குடும்பங்களும் அடக்கப் பெற்றன.

பேசே முறைமை (1915)

தொகு

பேசே (Bessey)முறைமை, 1915 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது.[13] இதில் புறவேறுபாடுகளைக் கொண்ட பழைய முறைமைகளையும் (தாவரவியலாளர்:de Candolle, Bentham and Hooker, Hallier), இடார்வினின் பரிணாமக் கொள்கை அடிப்படையிலான முறைமைகளையும் இணைத்து, புதிய வகைப்பாட்டியல் முறை (தாவரவியலாளர் :Richard Wettstein)உருவாக்கப்பட்டது. இதன்படி, சில தாவர இனங்கள் (உ-ம். Ranales) முழுமையாக நீக்கப்பட்டு, மற்றொரு தாவர இனத்தொகுதியுடன்(உ-ம் Ranunculus) இணைக்கப்பட்டன.

மெல்சியர் முறைமை (1964)

தொகு

மெல்சியர் (Melchior)~1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[14][15] இங்கிலர் முறைமை (Syllabus der Pflanzenfamilien (1964)யின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகவும், பூக்கும் தாவரங்களைக் குறித்து விரிவாகவும் கூறப்பட்டுள்ளதால், உலக தாவரவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, பல அறிஞர்கள், பூக்கும் தாவரத் தொகுதியின், உட்பிரிவுகளை உருவாக்கினர். எடுத்துக்காட்டக, தைமெலேசியே (Thymelaeaceae) என்பது டொம்கே (Domke 1934) என்ற அறிஞர் உருவாக்கினார்.[16]

ஏபிச்சி முறைமை (1998)

தொகு

ஏபிச்சி(APG) என்ற ஆங்கில அஃகுப்பெயர் (Angiosperm Phylogeny Group system) பன்னாட்டுப் பூக்கும்தாவரங்களின் தோற்றநெறி குழும முறைமை என்பதைக் குறிக்கிறது. இவர்களே முதல் முறையாக புதிய, மூலக்கூறு அடிப்படையிலான, தாவர வகைப்பாட்டியல் முறைமையை, அனைத்து நாடுகளின் தாவரவியலாளர்களின் ஒத்தகருத்துடன்(consensus) 1998 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிட்டனர். அதன் பிறகு, 2003 ஆம் ஆண்டு ஏபிச்சி-2 என்பதையும், 2009 ஆம் ஆண்டு ஏபிச்சி-3 முறைமையையும், 2016 ஆம் ஆண்டு ஏபிச்சி-4 முறைமையையும் உருவாக்கப் பட்டு, அனைத்து நாடுகளின் தாவரவியல் அறிஞர்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

  1. ஏபிச்சி-2 முறைமை (APG II) 2003
  2. ஏபிச்சி-3 முறைமை (APG III) 2009
  3. ஏபிச்சி-4 முறைமை (APG IV) 2016

காட்சியகம்

தொகு

துறைசார் வேறுபாடு

தொகு
  • தாவர வகைப்பாட்டியல் முறைமையும் (Plant taxonomic system), தாவரத் தொகுதியியலும் (plant systematics)[17] வெவ்வேறு, தாவரவியல் துறைகள் ஆகும். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மிக மிக சிறியது. ஆனால், இரண்டின் இலக்குகளும் வெவ்வேறு ஆனவை ஆகும். ஒப்பிட்டளவில் தாவர வகைப்பாட்டியல் முந்தைய தாவரவியல் பிரிவு ஆகும். இம்முறையில் தாவரத்தின் புற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. ஆனால், தாவரத்தொகுதி என்பது மரபியல் என்ற அடிப்படையைக் கொண்ட புதிய அறிவியல் முறையை, அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. நடைமுறையில் இம்முறையின் வழிமுறைகளே ஓங்கி இருக்கிறது எனலாம்.
  • தாவரப் பெயரிடல்முறைமை (Botanical Nomenclature) என்பது அறிவியல் முறைப்படி, தாவரங்களுக்கு பெயரிடல் ஆகும். தாவர வகைப்பாட்டியல் முடிந்த பிறகு, அதாவது தாவரக்கூட்டங்களுக்குப் பெயரிட்டப் பிறகு, ஒவ்வொரு தாவரத்திற்கும் பெயரிட, அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதே, இந்த தாவரப் பெயரிடல் முறைமையின் நோக்கமாகும்.[18]

தாவர வகைப்பாட்டியல் இலக்குகள்

தொகு

கண்டறிதல், வகைப்படுத்துதல், விவரித்தல் என்ற மூன்று இலக்குகளே, தாவரவியல் வகைப்படுத்துதலின் முக்கிய இலக்குகள் ஆகும். இந்த மூன்று இலக்குகளுக்குமான வேறுபாடுகளே திரும்ப, திரும்ப மறுசீராய்வு செய்யப் படுகின்றன.

  1. கண்டறிதல் : கண்டறிதலுக்கான வழிமுறைகளின் படியும், ஏற்கனவே கண்டறியப்பட்ட தாவரங்களின் படியும், புதிய தாவரங்கள் இனங்கண்டறியப் படுகின்றன.
  2. வகைப்படுத்துதல் : தாவரங்கள் குறிப்பிட்ட தொடர்புகளின் அடிப்படையில் பல பகுப்புகளாகத் தொகுக்கப் படுகின்றன. இந்நோக்கிற்கு அறிவியல் வகைப்பாடு பெரிதும் உதவுகிறது. அதன் விதிகள், அடுக்கதிகார முறைப்படி (hierarchy) வரிசையில், தாவரங்களை வகைப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மலைச்சுத்தி என்பது பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.
  3. விவரித்தல்  : இதன்படி, அட்டவணைப் படுத்துதல் மேற்கொள்ளப் படுகிறது. இதில் ஏற்கனவே கண்டறியப்பட்டத் தாவரங்கள், அடுக்கப் பட்டு, புற அமைப்பியல் வழியே முதலிலும், பிறகு பிற உட்பண்புகள் அடிப்படையிலும் விவரிக்கப்படுகின்றன. இம்முறைகள், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ICN) களின் படி, நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அதன் படி, ஒரு தாவரத்தின் பெயரும், பிற விவரங்களும், தாவரக் குறிப்புகளும், பன்னாட்டு தாவரப் பெயர் குறிப்பேடு (International Plant Names Index) அமைப்பில் பதிவு செய்யப் படுகின்றன.

எடுத்துக்காட்டு

தொகு
தாவர வகைப்பாட்டியல்[19]
இலத்தீன் (மூலம்)[20] ஆங்கிலம் தமிழ்
Regio : vita Region :life மண்டலம் : உயிரினம்
Superregnum/Dominio : Eukaryota Domain : Eukaryota திரளம் : மெய்க்கருவுயிரி
Regnum : Plantae Kingdom : Plant திணை : தாவரங்கள்
Cladus : Angiosperms Clade : Angiosperms கிளை : பூக்கும் தாவரங்கள்
Cladus : Eudicots Clade : Eudicots கிளை : இருவித்திலைத் தாவரம்
Cladus : Core eudicots Clade : Core eudicots கிளை :
Cladus : Asterids Clade : Asterids கிளை :
Cladus : Euasterids II Clade : Euasterids II கிளை :
Phylum Divisio : Phylum Division :Euasterids தொகுதி பிரிவு :
Classis : Class : வகுப்பு :
Ordo : Asterales Order : Asterales வரிசை  :
Familia : Asteraceae Family : Asteraceae குடும்பம் : சூரியகாந்தி
Subfamilia : Cichorioideae Subfamily : Cichorioideae துணைக்குடும்பம் :
Tribus : Vernonieae Tribe  : Vernonieae கூட்டம் :
Subtribus : Vernoniinae Subtribe : Vernoniinae துணைக்கூட்டம்  :
Genus : Vernonia Genus : Vernonia பேரினம் :
Subgenus : Subgenus : துணைப்பேரினம் :
Species : shevaroyensis Species : shevaroyensis இனம் : தாவர வகைப்பாட்டியல்
Subspecies : Subspecies : துணையினம் :
பிற பெயர்கள்: Monosis shevaroyensis [21]

உயவுத்துணை

தொகு
  • Plant Taxonomy by Sharma O. P.[22]
  • நூல் : பாகுபாடு,பெயரீடு மற்றும் தாவரகுடும்பங்கள் ; ஆசிரியர் : ஆர. என். டி. பொன்சே கா தமிழாக்கம் : உமா குமாரசுவாமி [23]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.merriam-webster.com/dictionary/taxonomy
  2. Judd, W.S., Campbell, C.S., Kellogg, E.A., Stevens, P.F., Donoghue, M.J. (2007) Taxonomy. In Plant Systematics – A Phylogenetic Approach, Third Edition. Sinauer Associates, Sunderland.
  3. Simpson, Michael G. (2010). "Chapter 1 Plant Systematics: an Overview". Plant Systematics (2nd ed.). Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-374380-0.
  4. Harper, Douglas. "Taxonomy". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
  5. பக்கம் 3, நூல் : பாகுபாடு, பெயரீடு மற்றும் தாவரக் குடும்பங்கள்; ஆசிரியர்:பேராசிரியர் ஆர். என். டி. பொன்சேகா, கொழும்பு பல்கலைக் கழகம், தமிழாக்கம்: பேராசிரியை உமா குமாரசுவாமி, திறந்த பல்கலைக் கழகம், நாவல; வெளியீடு: சிறீ லங்கா புத்தக சாலை, யாழ்ப்பாணம்
  6. Stuessy 2009, Artificial classification p. 43.
  7. Sharma, O. P. (2009). Plant Taxonomy (2nd ed.). Tata McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781259081378. Retrieved 18 May 2015.
  8. Frey, Wolfgang; Stech, Michael; Fischer, Eberhard, eds. (2009). A. Engler's Syllabus der Pflanzenfamilien Part 3: Bryophytes and seedless vascular plants (13th ed.). Berlin: Borntraeger. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-443-01063-8. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015. {{cite book}}: Invalid |ref=harv (help) Google Books.
  9. Woodland, Dennis W. (1997). Contemporary Plant Systematics (2nd ed.). Andrews University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-883925-14-2.
    • the 34th edition of "Strasburger" (Sitte, P. & al. 1998: Lehrbuch der Botanik für Hochschulen. Gustav Fischer, Stuttgart-Jena-Lübeck-Ulm).
    It was updated in
  10. "Texas A and M University Bioinformatics Working Group : Cronquist System". Archived from the original on 2014-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
    1. An Integrated System of Classification of Flowering Plants (1981)
    2. The Evolution and Classification of Flowering Plants (1988)
  11. Charles E. Bessey (1915). "The phylogenetic taxonomy of flowering plants". Annals of the Missouri Botanical Garden (Missouri Botanical Garden Press) 2 (1/2): 109–164. doi:10.2307/2990030.  also available online at "Botanicus.org" (PDF). Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
  12. Swift, Lloyd H. (1974). Botanical Classifications. Hamden, Connecticut,USA: Archon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-208-01455-1.
  13. Hans Melchior (1964). Adolf Engler (ed.). Syllabus der Pflanzenfamilien (12th ed.). I. Band: Allgemeiner Teil. Bakterien bis Gymnospermen. II. Band: Angiospermen.
  14. Domke, W. (1934).Untersuchungen über die geographische und systematische Gliederung der Thymelaeaceae. Biblioth. Bot. 111:1-151.
  15. https://en.wikipedia.org/wiki/History_of_plant_syst ematics
  16. https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature
  17. (APG III)
  18. மூலம்: விக்கியினங்கள் திட்டம்
  19. http://www.theplantlist.org/tpl1.1/record/gcc-42 Monosis shevaroyensis (Gamble) H.Rob. & Skvarla.
  20. http://www.amazon.in/Plant-Taxonomy-Sharma-P/dp/0074603736
  21. http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_வகைப்பாட்டியல்&oldid=3862950" இலிருந்து மீள்விக்கப்பட்டது