பீ தணக்கன் (தாவரம்)
Ailanthus | |
---|---|
Ailanthus altissima leaf and seeds | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Ailanthus |
இனங்கள் | |
See text |
பீ தணக்கன் அல்லது பீ நாறி அல்லது பீய்யமரம் (Ailanthus excelsa): என்பது காடுகளில் அதிகம் காணப்படும் ஒரு வகை மென்மரமாகும். இதன் தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எக்செல்சா என்றும் ஹெலாகாதர் என்று பொதுப்பெயரும் இந்தியில் (Gugaldhu) என்றும் மலையாளத்தில் (Mattipal) எனறும் தெலுங்கில் (peepeddamanu) என்றும் மராத்தியில் (Gulguldhupa) என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைத் தயாகமாகக் கொண்ட இம்மரம், தற்போது எல்லாப்பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இது மென்மையான மர வகையைச் சார்ந்தது. மென்மை கொண்டதால் இதனை அறுப்பது, சீர் செய்வது மிகவும் எளிது. பக்கக்கிளைகள் குறைவாகவும் உயரமாகவும் வளரக்கூடியது. இதன் வயது 20 முதல் 75 ஆண்டுகள். மழை குறைவான பகுதிகளிலும் வளமற்ற மண்ணிலும் வளரக்கூடியது. இம்மரத்திற்கு அதிகமாகப் பராமரிப்புத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இம்மரங்கள் அதிக அளவில் எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.[1]
மரத்தின் பயன்கள்
தொகுஇம் மரத்தில் அதிகமாகத் தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது. இதன் பக்கக்கிளை வீட்டு அடுப்பு உபயோகத்திற்குப் பயன்படுகிறது. மரத்தின் தழைகள், இலைகள் மண்புழுவிற்கு உணவாகப் பயன்படுகின்றன.
இம் மரம் பென்சில், எழுதுப் பலகை, நசடு பலகை தயாரிக்கப் பயன்படுகிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, தக்காளி பெட்டி, தேநீர் மற்றும் ஒட்டுப்பலகை (பிளைவுட்) செய்யவும் பயன்படுகின்றது. மேலும் பழ வகைகள் அடி படாமல் எடுத்துச் செல்லும் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. கட்டிட வேலைகளுக்குகளான முட்டுப் பலகைகளாகவும் பயன்படுகிறது. இதன் வேர்கள் வருடம் முழுவதும் பசுமையாக இருப்பதால் மண் அரிப்பை தடுக்கின்றன.