ரோசிதுகள் (Rosids)[1] என்பவை பூக்கும் தாவரங்கள் வகையிலுள்ள ஒரு பெரிய உயிரினக் கிளையின் (ஒற்றை மரபுவரிசை) உறுப்பினர்களைக் குறிக்கிறது. பூக்கும் தாவர வகையில் நான்கில் ஒரு பாகத்திற்கு மேல் சுமார் 70,000 தாவர இனங்கள் [2] இவ்வுயிரினக் கிளையில் இடம்பெற்றுள்ளன[3]

உயிரின வகைபாடு மற்றும் சூழலின் அடிப்படையைப் பொறுத்து ஒற்றை மரபுவரிசைத் தாவரங்கள் 16 முதல் 20 வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிசைகளில் மொத்தமாக 140 குடும்பங்களைச் சேர்ந்த தாவரங்கள் காணப்படுகின்றன.

கிரீத்தேசியக் காலம் முதலாக ரோசித் புதைப்படிவுகள் அறியப்படுகின்றன. 99.6 மற்றும் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரீத்தேசிய நிலவியல் காலப் பகுதியின் அப்டியன் அல்லது அல்பியன் நிலவியல் நிலைகளில் ரோசித் வகை தாவரங்கள் தோன்றியிருக்கலாம் என்று மூலக்கூற்று கடிகை தொழில்நுட்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பெயர் தொகு

ரோசித்கள் என்பவை, அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறையில் அமைந்த ரோசிடே என்ற பெயரின் துணை வகுப்பு என்று வழக்கமாகபுரிந்து கொள்ளப்படுகிறது. 1967 ஆம் ஆண்டில் ஆர்மென் தாக்டாயன் ரோசிடே என்ற பெயரிடலுக்கான சரியான அடிப்படையை எடுத்துக் காட்டினார். 1830 ஆம் ஆண்டில் பிரடெரிக் கோட்டியப் பார்ட்லிங்கால் வெளியிடப்பட்ட தாவரங்களின் பட்டியல் ஓர் உயிரினக் கிளை அல்லது ஒற்றை மரபுவரிசை) எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இப்பெயர் ரோசிடே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல தாவரவியல் அறிஞர்களால் பலவாறாக வரையறை செய்யப்பட்டது. ரோசித்கள் என்ற பெயர் முறைசாராத ஒரு தாவரவியல் பெயராகும். இப்பெயரைக் கொண்டு அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறையில் அமைந்த பெயரீட்டுத் தரநிலை எதையும் நம்மால் ஊகிக்க முடியாது. மூலக்கூற்று கடிகை தொழில்நுட்ப மதிப்பீடுகள் தெரிவித்த முடிவுகளின் அடிப்படையில் ரோசித்கள் என்பவை ஒற்றை மரபுவரிசைத் தாவரங்கள் என்பதை அறியமுடிகிறது.

ரோசித்கள் தொடர்பாக மூன்று வகையான வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரோசித்கள், சாக்சிபிரேகல்கள் மற்றும் இருவித்திலைத் தாவரங்கள் என்ற வரிசையைச் சார்ந்தவை என சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். வேறுசிலர் இவ்விரண்டு வரிசைகளையும் தவிர்த்து விடுகின்றனர். இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பூக்கும்தாவர ஒற்றை மரபுவரிசைத் தொகுதி வகைப்பாட்டியலில் இருவித்திலை தாவரங்கள் என்ற வரிசை எடுத்துக் கொள்ளப்பட்டு சாக்சிபிரேகல்கள் வரிசை விலக்கப்பட்டுள்ளது.

இனத்தோற்ற நெறி முறைமை தொகு

கீழே குறிப்பிடப்படும், ரோசிதுகள் என்ற உயிரியக் கிளையின், தாவரத்தோற்ற நெறி (phylogeny) முறைமையானது, பூக்கும் தாவரங்களின் தோற்ற நெறிமுறை குழுவால் (Angiosperm Phylogeny Group[4]) பின்பற்றப் படுகிறது.


Vitales


eurosids 

fabids 


Zygophyllales



COM clade 


Celastrales




Malpighiales



Oxalidales




nitrogen‑fixing clade 


Fabales




Rosales




Fagales



Cucurbitales







malvids



Geraniales



Myrtales





Crossosomatales




Picramniales




Sapindales




Huerteales




Brassicales



Malvales









மேற்கோள்கள் தொகு

  1. http://www.definitions.net/definition/rosids
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).
  4. Peter F. Stevens (2001), Angiosperm Phylogeny Website

உயவுத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசிதுகள்&oldid=3227189" இருந்து மீள்விக்கப்பட்டது