உரோசா
Rosa bracteata
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Rosales
குடும்பம்:
Rosaceae
துணைக்குடும்பம்:
Rosoideae
பேரினம்:
Rosa

இனங்கள்

Between 100 and 150, see list

ரோஜா

(Rose) பேரினத்தின் ரோசசி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. இந்தத் தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். ரோஜாவில் முட்கள் உண்டு என்பது ஒரு பொதுவாக நிலவுகிற பிழையான கருத்தாகும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்). இந்தத் தாவர வகையில் பெரும்பாலானவை ஆசியக் கண்டத்தை சேர்ந்தவை. சில வகைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்காவை சேர்ந்தவை. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன[1].

இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக் கொத்துக்களாகவும் இருக்கும். இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.

முளரிப்பூ (Rose), முளரி பேரினத்தின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். ரோஜாவில் முட்கள் உண்டு என்பது ஒரு பொதுவாக நிலவுகிற பிழையான கருத்தாகும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்). இந்த தாவர வகையில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. சில வகைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்காவை சேர்ந்தவை. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன[1].

இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும். இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.

ரோஜா என்பது கிரேக்க தேசத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன வார்த்தை ரோசாவிலிருந்து வருவது. ரோடான் (யலிக் வடிவம் : வ்ரோடான் ), ஆரமைக்லிருந்து வர்ரதா, அஸீரியன் இலிருந்து உர்டினு , பழங்கால ஈரானியநிலிருந்து வார்தா (மேலும் பார்க்க : ஆர்மேனியன் வர்த், அவெஸ்தான் வார்தா, சொக்டியான் வர்த் - மேலும் ஹீப்ருவின் வெரட் இவை மேற்கூறிய கிரீக்க வார்த்தைக்கும் முற்பட்டவை.

ரோஜாவின் இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜாவின் இடுப்பு அரிதாக பழக்கூழ், பழக்கூழ்பாகு, பழப்பாகாக மாற்றப்படுகிறது அல்லது முதன்மையாக அதில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் சிக்காக தேநீர் தயாரிக்கக் காய்ச்சப்படுகிறது. அவை பிழியப்பட்டு வடிகட்டப்பட்டு ரோஜா இடுப்பு பானகம் தயாரிக்கப்படுகிறது. ரோஜாவின் இடுப்புகள், சருமப் பொருட்கள் மற்றும் சில அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரோஜா இடுப்பு விதை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன

தாவரவியல்

தொகு
 
ரோசா கேனைனா இடுப்புகள்

பெரும்பாலும் இந்த தாவரத்தின் இலைகள் 5-15 சென்டிமீட்டர் வரை நீளமும் தண்டுப் பகுதியை ஒட்டி எழும்பிய இறகு போன்ற அமைப்புடன் கூடிய (3-) 5-9(-13) இலைகளைக் கொண்ட கொத்துக்களாகவும் இருக்கும். இந்த இலைக்கொத்துக்கள் வழக்கமாக ரம்பம் போன்று கூராக அமைந்த ஓரங்களையும், தண்டுப் பகுதியின் அடி பாகத்தில் சில சிறு முட்களையும் கொண்டிருக்கும். மிகப் பெரும்பான்மையான ரோஜாக்கள் பருவகாலத்தின் பிறகு இலை உதிர்ப்பவை. ஆனால் சில (குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில்) எப்பொழுதும் பசுமையாக அல்லது ஏறக்குறைய பசுமையாக இருப்பவை.

பெரும்பான்மையான தாவரத்தின் பூக்கள் ஐந்து இதழ்களைக் கொண்டவை. விதிவிலக்கு - |ரோசா செரிசியா. இதற்கு நான்கு இதழ்கள் தான். ஒவ்வொரு இதழும் இரண்டு வேறுபட்ட மடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்; அவை பெரும்பாலும் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை. ஆனால் சில வகைகளில் மஞ்சள் அல்லது சிவப்பு காணப்படும். இதழ்களின் கீழ் ஐந்து புற இதழ்கள் உண்டு. (அல்லது ரோசா செரிசியாவைப் பொறுத்தமட்டில், நான்கு.) இவை மேற்புறமாகப் பார்க்கும்பொழுது நன்கு நீண்டு பார்வையில் படும்படியாகவும் வட்ட இதழ்களிலிருந்து வேறுபட்ட பச்சை நுனியாகவும் தோற்றமளிக்கும். கருப்பை கீழ்ப்பகுதியில், இதழ்களுக்கும் புற இதழ்களுக்கும் கீழே வளர்ந்திருக்கும்.

ரோஜாவின் ஒட்டுமொத்தமான பழம் ரோஜாவின் இடுப்பு என்று அழைக்கப்படுகிற விதை போன்ற அமைப்பாகும். திறந்த முகம் கொண்ட பூக்களை உற்பத்தி செய்யும் ரோஜா தாவரம் மகரந்தச் சேர்க்கை செய்யும் தேனீக்களையும் மற்ற பூச்சியினங்களையும் தன்பால் கவர்ந்து இழுப்பதால், இடுப்புகள் உற்பத்தி மேலும் ஏதுவாகிறது. பெரும்பான்மையான வீட்டுப் பயிருடுவகைகளின் இதழ்கள் மிகவும் இறுக்கமாக இருப்பதால் அவை மகரந்தச் சேர்க்கைக்கு வழி விடுவதில்லை. பெரும்பான்மையான தாவரங்களின் இடுப்புகள் சிவப்பானவை, ஆனால் சில (உதாரணம் - ரோசா பிம்ப்பிநெல்லிபோலியா பொலியா) ஆழ்ந்த ஊதாவிலிருந்து கருப்பு இடுப்பைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு இடுப்பும் சதைப்பிடிப்பான வெளிப்புற மடிப்பைக் கொண்டிருக்கும். hypanthium (ஹைபேந்தியம்) புற இதழையும் புல்லிவட்டத்தையும் தாங்கி நிற்கும் சிறு கோப்பையில் 5–160 "விதைகள்" (தொழில் நுட்ப ரீதியில், achene (அஷயின்) எனப்படும் உலர்ந்த ஒரு-விதைப் பழங்கள்) நுண்ணிய, விறைப்பான முடிக்கொத்தில் பொதிந்திருக்கும். சில தாவரங்களின் ரோஜா இடுப்புகள், குறிப்பாக டாக் ரோஜா-ரோசா கேனைனா மற்றும் ரோசா ருகோசா மிகுந்த அளவில் விட்டமின் சி கொண்டவை, எந்தச் செடியினத்தையும் விட அபரிதமான அளவில் அளிக்கவல்லவை. இவற்றின் இதழ்கள் மெழுகு போன்ற மேல் தோல் கொண்டவை. அவை இலை போல் செயல்படுகின்றன. இந்த இடுப்புகள் பழம் தின்னும் பறவைகளான பாடும் பறவை மற்றும் மைனாக்களால் உண்ணப்படுகின்றன, பிறகு இந்தப் பறவைகள் தமது எச்சத்தின் மூலமாக விதைகளைப் பரவச் செய்கின்றன. சில பறவைகள், குறிப்பாக ஃபின்சஸ் போன்றவை, விதைகளையும் உண்ணுகின்றன.

 
ரோஜா கூர்முனைகள்

பொதுவாக ஒரு ரோஜா தண்டின் மீது காணப்படும் கூரிய அமைப்புகள் "முட்கள்" என்று அழைக்கப்பட்டாலும், அவை உண்மையில் கூர் முனைகள் - மேல் தோலின் வெளி வளர்ச்சி (தண்டுத் திசுவின் வெளி அடுக்கு). சிட்ரஸ் அல்லது பைரகாந்தா போன்றவற்றில் தோன்றும் உண்மையான முட்கள், திருத்தி அமைக்கப்பட்ட தண்டுகள். அவை எப்பொழுதும் ஒரு கணுவிலிருந்து கிளம்புகின்றன. மேலும் அவற்றில் கணுக்களும் இடைக் கணுக்களும் முட்களின் முழு நீளத்திற்கும் காணப்படும். ரோஜாவின் கூர் முனைகள் தனித்தன்மை கொண்ட,அரிவாள் போன்று வளைந்த கொக்கிகள். இவை, ரோஜா, மற்ற வளர்கின்ற செடி கொடிகளைப் பற்றிப் படர உதவுகின்றன. ரோசா ருகோசா மற்றும் ஆர்.பிம்ப்பிநெல்லிபொலியா போன்ற சில தாவர வகைகளுக்கு நெருக்கிக் கட்டப்பட்ட நேரான முதுகெலும்பு உண்டு. விலங்குகள் மேய்வதைக் குறைக்கும் பொருட்டு அல்லது காற்றில் பறந்து வரும் மணலைத் தேக்கி மணல் அரிப்பைக் குறைத்து தனது வேர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு (இந்த இரண்டு வகைகளும் கடலோர மணல்மேடு களில் இயல்பாக வளர்பவை.) - இது மாறி வரும் சூழலுக்குத் தக்க படி தம்மை மாற்றிக்கொள்ளும் முயற்சி எனலாம். கூர் முனைகள் இருக்கின்ற போதிலும், ரோஜாக்கள் அடிக்கடி மான்களால் மேயப்படுகின்றன. ரோஜாவின் சில வகை தாவரங்களில் முதிர்வு அடையாத கூர் இல்லாத முனைகளே காணப்படும்.

 
ரோஜா இலைக்கொத்துக்கள்

.

தாவரம்

தொகு
 
ரோசா மல்டிப்லோரா

ரோஜா தாவரத்தின் சில எடுத்துக்காட்டுகள்

தீங்கிழைக்கும் பூச்சிகளும், நோய்களும்

தொகு

ரோஜாக்கள், ரோஜா துரு, பிராக்மிடியம் ம்யுக்ரோநேட்டம் , ரோஜா கரும் புள்ளி மற்றும் நுண்துகள் பூஞ்சைக் காளான்போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றன. ரோஜாவின் காளான் நோய்களுக்கு சிறந்த தீர்வு ஒரு தடுத்து நிறுத்தும் விதமான Fungicideகாளான் கொல்லிதெளிக்கும் திட்டமே அன்றி நோய் பரவி செடியில் தோன்ற ஆரம்பித்த பிறகு அதை குணப்படுத்த முயற்சிப்பது அல்ல. நோய் தெரிய ஆரம்பித்த பிறகு, கத்தரித்து சீர்படுத்தியும், காளான் கொல்லியைப் பயன்படுத்தியும் அதன் பரவுதலைக் குறைக்க முடியும் என்றாலும் உண்மையில் நோயைத் தடுத்து நிறுத்த முடியாது. சில வகை ரோஜா தாவரங்கள் மற்ற சில வகைகளைக் காட்டிலும் காளான் நோய்களால் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படுபவையாக உள்ளன.

ரோஜாவை பாதிக்கும் தீங்கிழைக்கும் பூச்சிகளில் முதன்மையானது, அதன் உயிர்ச்சத்தை உறிஞ்சி செடியை பலவீனப் படுத்தும், ஏபிட் (பச்சை ஈ) ஆகும். லேடி பக் எனப்படும் வண்டு ஏபிட்களை தின்று வாழ்வது ஆதலால் அவ்வண்டுகளுக்கு ரோஜா தோட்டத்தில் ஊக்கம் தர வேண்டும். ரோஜாக்களில் பூச்சிக் கொல்லியைத் தெளிப்பது என்பது அடிக்கடி பரிந்துரைக்கப்பட்டாலும் நன்மை பயக்கும் பூச்சிகளுக்கு இழப்பு குறைவாக இருக்கும் வண்ணம் கவனத்துடன் செய்யப்பட வேண்டும். ரோஜாக்கள், லேபிடோப்டேரா, வண்ணத்துப்பூச்சி,விட்டில் பூச்சிஇனத்தின் சிறு புழுக்களால் உணவுத் தாவரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பார்க்க: ரோஜாக்களை உண்டு வாழும் லேபிடோப்டேராவின் பட்டியல்.

வேளாண்மை

தொகு
 
1870 களில் பல்கேரியாவின் கசான்லக் நகரத்தின் அருகில் உள்ள ரோஜா பள்ளத்தாக்கில் ரோஜா பறித்தல், ஆஸ்த்ரிய ஹங்கேரிய பயணி எப். கநித்ஸ் இன் கல்வெட்டு

தோட்டக்கலையில் ரோஜாக்கள் ஒட்டுக்கிளை முறையிலும், துண்டுகளை வேரூன்றச் செய்யும் முறையிலும் பரப்பப் படுகின்றன. [[Cultivar|பயிருடு வகைகள் ]]அவற்றின் பூக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. அவை உறுதி அளிக்கும் ஒரு ஆணி வேரின் மீது ஒட்டப்படும், அல்லது (குறிப்பாக பழைய தோட்ட ரோஜாக்கள் விஷயத்தில்) அவை தமது சொந்த வேர்களை உருவாக்கிக் கொள்ள விடப்படும். ரோஜாக்களுக்கு வளரும் பருவத்தில் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேர நேரடியான சூரிய ஒளி தேவைப்படுகிறது. பூக்கும் காலத்திற்குப் பிறகும் உறைபனியில் திறந்து இருக்கும் நிலைக்குப் பிறகும் ரோஜாக்கள் குளிர் காலத்தில் ஒரு தேக்க நிலையை அடைகின்றன.

ரோஜாக்கள் பிரபலமான தோட்டப் புதர்கள், அதே போல் மிகவும் பிரபலமான மற்றும் சர்வ சாதாரணமாக விற்பனையாகும், பூ வியாபாரிகளின் பூக்கள். பூ வியாபாரிகளின் பயிர் என்கிற அவற்றின் மிகப் பெரிய பொருளாதார முக்கியத்துவத்தைத் தவிர, ரோஜாக்கள் நறு மணப் பொருள் தொழிலுக்கும் மிகுந்த பயனுள்ளவை.

தோட்டப் பயனுக்காக பல ஆயிரக் கணக்கான ரோஜா கலப்பினங்களும், பயிரிடு வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக அதிகமானவை, பல அல்லது அனைத்து ஸ்டேமன்களும் கூடுதல் இதழ்களாக மாற்றப்பட்ட இரட்டைப் பூக்கள். 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் பேரரசி ஜோசபின் தமது மால்மைசான் தோட்டங்களில் ரோஜாக்களை இன விருத்தி செய்து அதன் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தார். இங்கிலாந்தில் உள்ள விக்டோரியாவின் ஆரம்ப காலத்து தோட்டக் கல்லறை மற்றும் தாவரத் தோட்டமான, ஆப்னி பார்க் கல்லறைக்காக, ஒரு ரோஜா தோட்டம் லாடீகஸ் செடிப் பண்ணையால் நிலை நாட்டப்பட்ட 1840 போன்ற கால வாக்கிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட பல விதமான பயிரிடு வகைகள், சார்பு இனங்கள், தாவரங்களின் திரட்டு சாத்தியமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் ரோஜா வளர்ப்பாளர்கள், பொதுவாக அளவு மற்றும் நிறத்தை வலியுறுத்தினார்கள், இதன் விளைவாக, குறைந்த வாசனை உள்ள அல்லது வாசனை இல்லவே இல்லாத பெரிய, கவர்ச்சிகரமான பூக்கள் தயாரிக்கப்பட்டன. இதற்கு மாறாக, பல காட்டு மற்றும் "பழங்காலத்து" ரோஜாக்களுக்கு வலிமையும் இனிமையும் கொண்ட வாசனை உண்டு.

ரோஜாக்கள் மிதமான சீதோஷ்ண நிலையில் செழித்து வளர்கின்றன. ஆசிய தாவரங்களை ஆதாரமாக கொண்டவை தமது பூர்வீக உப வெப்ப மண்டலசுற்றுச் சூழலில் நன்கு வளர்கின்றன. சில வகைத் தாவரங்கள் மற்றும் பயிரிடு வகைகள், , குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், சரியான ஆணிவேரில் ஒட்டுநடவு செய்யப்படும்போது, வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் நன்கு செழிப்பாகவும் வளர முடியும்.

தோட்ட ரோஜாக்களை ஒரே விதமாக வகைப்படுத்தும் ஒழுங்கான திட்டம் இல்லை. ஆனால், பொதுவாக, ரோஜாக்கள் இந்த மூன்று முக்கிய பிரிவுகள் ஒன்றில் வைக்கப்படுகின்றன.

காட்டு ரோஜாக்கள்

தொகு

காட்டு ரோஜாக்களில் மேலே பட்டியலிடப்பட்ட தாவரங்கள் மற்றும் அவற்றின் சில கலப்பினங்களும் அடங்கும்.

பழைய தோட்ட ரோஜாக்கள்

தொகு

பெரும்பாலான பழைய தோட்ட ரோஜாக்கள் கீழே உள்ள தொகுதிகள் ஒன்றில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஐரோப்பிய அல்லது மத்திய தரைக் கடல் பகுதியை மூலமாகக் கொண்ட பழைய தோட்ட ரோஜாக்கள் ஒரு காலத்தில், குறிப்பிடத்தக்க நறு மணத்துடன், முதன்மையாக வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் இரட்டை இரட்டையாய்ப் பூக்கள் பூக்கும் மரப் புதர்கள். இந்தப் புதர்களின் இலைகள் மிகவும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவையாக இருக்கின்றன, மற்றும் அவை பொதுவாக இரண்டு வருடம் முதிர்ந்த பிரம்புகள் மீது தான் படர்ந்து பூக்கின்றன.

 
'ஆல்பா செமிப்ளேனா', ஒரு ஆல்பா ரோஜா

ஆல்பா

தொகு

அப்படியே சொல்வது என்றால் "வெள்ளை ரோஜாக்கள்", ஆர். ஆர்வேன்சிஸ் மற்றும் நெருங்கிய தொடர்புடைய ஆர்.ஆல்பா விலிருந்து வந்தவை. மிகப் பழைய தோட்ட ரோஜாக்களின் சில வகைகளான இவைகளை, கிரேட் பிரிட்டனுக்கு ரோமானியர்கள் எடுத்து வந்திருக்க்கக்கூடும். இந்தப் புதர்கள் வருடத்திற்கு ஒரு முறை வசந்த காலத்தில் வெள்ளை அல்லது மங்கலான இளஞ்சிவப்பு பூக்களாய் பூக்கின்றன. இந்தப் புதர்கள் அடிக்கடி பழுப்பு-பச்சை இலைகளைக் கொண்டிருக்கும் மற்றும் இவை வளர்ச்சியின் போது மேல் ஏறிச் செல்லும் வழக்கம் உள்ளவை. உதாரணங்கள்: 'ஆல்பா செமிப்லேனா', 'யார்க்கின் வெள்ளை ரோஜா'

 
கேலிக்கா ரோஜா 'சார்ல்ஸ் டே மில்ஸ்', 1790 க்கு முன்பு

கேலிக்கா

தொகு

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஆர்.கேலிக்கா விலிருந்து உருவாக்கப்பட்ட கேலிக்கா அல்லது ப்ராவின்ஸ் ரோஜாக்கள் மிகப் பழைய வகுப்பு ஆகும். அப்போதகேரியின் ரோஜா, ஆர்.கேல்லிக்கா அபிஷினாலிஸ் , மத்திய காலங்களில் துறவிகளின் மூலிகைப் பண்ணைகளில் வளர்க்கப் பட்டது, மற்றும் ஆங்கிலேய சரித்திரத்தில் லன்கஸ்டரின் சிவப்பு ரோஜா என்று பிரபலமாகியது. அவை கோடையில் குட்டையான, அபூர்வமாக நான்கு அடிக்கு மேற்பட்ட புதர்களில் ஒரு முறை பூக்கும். ஒரு முறை பூக்கும் மற்ற பல பழைய தோட்ட ரோஜாக்களைப் போலன்றி, கேலிக்கா வகுப்பு சிவப்பு, பழுத்த சிவப்பு, ஆழ்ந்த ரத்தச் சிவப்பு வண்ணங்களையும் உள்ளடக்கியது. உதாரணங்கள்: 'கார்டினல் டே ரிஷேலியு', 'சார்ல்ஸ் டே மில்ஸ்', 'ரோசா முண்டி' (' ஆர். கேலிக்கா வர்ஸிகலர்).

 
'ஆட்டம் டமாஸ்க்' (க்வேட்ரே சைசோன்ஸ்')

டமாஸ்க்

தொகு

தொன்மையான காலங்களில் ரோசா மோஸ்சாட்டா x ரோசா கேலிக்கா x ரோசா பிட்ஷேன்கொனா வகைகளின் இயற்கையான கலப்பால் தோன்றிய டமாஸ்க் ரோஜாக்களை 1254 க்கும் 1276 க்கும் இடைப் பட்ட ஒரு காலத்தில் பர்சியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வந்த பெருமை ராபர்ட் டே ப்ரை க்கு வழங்கப் படுகிறது என்றாலும் அதற்குப் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் குறைந்த பட்சமாக ஒரு டமாஸ்க் ரோஜாவாவது இருந்தது என்பதற்கு பழங்கால ரோமானிய சுவரோவியங்களின் சான்று உள்ளது. கோடை டமாஸ்க்குகள் கோடையில் ஒருமுறை பூக்கின்றன. இலையுதிர் காலம் அல்லது நான்கு பருவங்கள் டமாஸ்க்குகள் இலையுதிர் காலத்தில் பிறகு மீண்டும் பூக்கின்றன: the only remontant பழைய ஐரோப்பிய ரோஜாக்கள். புதர்கள் ஒரே சீராகவும், கண்ட இடங்களில் பரவியும் வளரும் பழக்கங்கள் கொண்டவை மற்றும் கொடிய முட்கள் கொண்டவை. இதன் பூக்கள் பொதுவாக, கேலிக்கா வகையை விட சற்றே அதிகமாக தளர்ந்த இதழ் அமைப்பும், ஒரு வலிமையான விரும்பத்தக்க நறு மணமும் கொண்டவை. உதாரணங்கள்: 'இஸ்பகான்', 'மேடம் ஹார்டி'.

சென்டிபோலியா அல்லது ப்ரோவென்ஸ்

தொகு

நெதர்லாந்தில் பதினேழாம் நுற்றாண்டில் வளர்க்கப்பட்ட சென்ட்டிபோலியா ரோஜாக்கள், அவற்றின் "நூறு இதழ்களுக்காக" அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன; அந்தப் பூக்களின் கோள வடிவம் காரணமாக அவை முட்டைக்கோஸ் ரோஜாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. டமாஸ்க் ரோஜாக்கள் ஆல்பாஸ்களுடன் கலப்பு செய்யப்பட்டதன் விளைவான சென்ட்டிபோலியாக்கள் ஒரு-முறை பூப்பவை. ஒரு பிரிவு என்கிற முறையில், பலவிதமான அளவுகள் மற்றும் உருவங்களின் சிதைவுகள் கொண்ட, மோஸ் ரோஜாக்கள் மற்றும் முதன்முறையாக மிகச் சிறிய அளவில் சுருக்கப்பட்ட சில ரோஜாக்களை உள்ளடக்கிய (கீழே பார்க்க).உற்பத்திக்கு, வளைந்து கொடுக்கக்கூடியவை என்று புகழ் பெற்றவை. உதாரணங்கள்: 'சென்ட்டிபோலியா', 'பால் ரிக்கால்ட்'.

மோஸ்

தொகு

மோஸ் ரோஜாக்கள், முதன்மையாக சென்ட்டி போலியா ரோஜாக்களின் (அல்லது சில சமயங்களில் டமாஸ்க்குகளின் )சிதைவுகள், தமது தண்டுகளின் மேற்புறம் திரண்ட தசை வளர்ச்சியும், தேய்க்கப்படும் பொழுது மரம் அல்லது தைல வாசனையை வெளித் தள்ளும் புற இதழ்களையும் கொண்டவை. மோஸ் ரோஜாக்கள் இந்த அரிதான சிறப்பு இயல்புக்காக அன்புடன் போற்றி வளர்க்கப்படுகின்றன என்றாலும் ஒரு பிரிவு என்கிற முறையில் அவை ரோஜாக்களின் புதிய வகைப்படுத்துதலுக்கு எந்த ஒரு பங்களிப்பும் செய்து விடவில்லை. சென்ட்டி போலியாவை பின்புலமாகக் கொண்ட மோஸ் ரோஜாக்கள் ஒருமுறை-பூப்பவை. ஆனால் தாம் ஆட்டம் டமாஸ்க் பாரம்பரியம் என்பதை உணர்த்தும் விதமாக சில மோஸ் ரோஜாக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும் தன்மையை வெளிப்படுத்துகின்றன. உதாரணம்:'காமன் மோஸ்'(சென்ட்டிபோலியா-மோஸ்), 'ஆல்பிரட் டே டல்மாஸ்' (ஆட்டம் டமாஸ்க் மோஸ்).

போர்ட்லேன்ட்

தொகு

நீண்ட காலமாக போர்ட்லேன்ட் ரோஜாக்கள் சீன ரோஜாக்களுக்கும் ஐரோப்பிய ரோஜாக்களுக்கும் ஏற்பட்ட கலப்பின் முதல் பிரிவு என்றே நினைக்கப்பட்டு வந்தன; ஆயினும்,லயான்ஸ் பல்கலை கழகத்தின் சமீபத்திய மரபணுச் சோதனைகள், மூல போர்ட்லேன்ட் ரோஜாக்களில் சீன மரபு வழி எதுவும் இல்லை, மாறாக சொல்லப்போனால் அவை ஒரு ஆட்டம் டமாஸ்க்/கேலிக்கா சந்ததியி[2] ன் எடுத்துக்காட்டு என்று தெளிவுபடுத்தியிருக்கின்றன. 1775 ஆம் ஆண்டு வாக்கில் ஆர்.பேஸ்ட்டானா அல்லது 'ஸ்கேர்லெட் போர் சீசன்ஸ்' ரோஸ்' (இப்பொழுது எளிமையாக அறியப்படுகிற 'தி போர்ட்லேன்ட் ரோஸ்') என்று அழைக்கப்பட்ட ஒரு ரோஜாவை போர்ட்லேன்டின் கோமகள் இத்தாலியிலிருந்து பெற்றுக் கொண்டதை அடுத்து அவைகள் அவர் பெயரில் அழைக்கப்படுகின்றன. அதன் பிறகு அந்த ஒரு ரோஜாவிலிருந்து போர்ட்லேன்ட் ரோஜாக்கள் என்கிற முழு வகுப்பும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாய், மீண்டும் மீண்டும் பூக்கக்கூடிய, கவர்ச்சியான ஐரோப்பிய-பாணி பூக்கள் கொண்ட, இந்த ரோஜா வகுப்பின் செடிகள் குட்டையாகவும், அடர்த்தியாகவும், இதன் பூக்காம்புகளும் அதே விகிதப்படி குட்டையாக விளங்கும் தன்மையும் கொண்டவை. உதாரணம்: 'ஜேம்ஸ் வெயிட்ச்', 'ரோஸ் டே ரெஷ்ட்', 'கோம்டே டே ஷேம்புர்ட்'.

சீனா

தொகு
 
'பார்சன்'ஸ் பிங்க் சீனா' அல்லது 'ஓல்ட் ப்ளஷ்' "வீரியமான சீனாக்களில்" ஒன்று

ரோசா சினென்சிஸ் ஐ ஆதாரமாகக் கொண்ட சீனா ரோஜாக்கள், கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பயிரிடப்பட்டு கடைசியாக 1700௦௦ களில் மேற்கு ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தது. அவைகள் தான் இன்றைய [3] பலவற்றின் பெற்றோர்கள் மற்றும் அவை பூவின் அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தன. மேலே கூறிய ஐரோப்பிய ரோஜா வகுப்புகளுடன் ஒப்பிடுகையில்[4], சீன ரோஜாக்கள் குளிரால் அதிகமாய் பாதிப்படைகின்ற புதர்களும், குறைவான மணம், அதிக சுள்ளிகள் மீது அமைந்த சிறு வடிவப் பூக்களும் கொண்டவை. என்றாலும் அவை ஐரோப்பிய வகைகளைப் போலன்றி கோடை முழுமைக்கும், இலையுதிர் காலத்தின் கடைசி கட்டம் வரை, மீண்டும் மீண்டும் பூக்கும் வியக்கத்தக்க திறன் கொண்டிருந்தன. இதனால் 1800 களின் ஆரம்பத்தில் கலப்பினம் செய்யும் நோக்கங்கள் காரணமாக இவை மிகவும் விரும்பப்பட்டவையாக இருந்தன. ஐரோப்பிய ரோஜாக்கள் திறந்த பிறகு பொலிவு இழப்பது போலன்றி, சீன ரோஜாக்களின் பூக்கள் "சூரிய பழுப்பு" அல்லது காலப்போக்கில் கருப்பாகின்ற தன்மையைக் கொண்டிருந்ததால் குறிப்பிடத்தக்கவை ஆகின. இன்றைய கண்காட்சி ரோஜா தனது வடிவத்திற்கு சீன உயிர் அணுக்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. மேலும், திறந்தவுடன் விரிந்து கொள்ளும் மெல்லிய மொட்டுகளை கொண்டு வந்ததும் சீனா ரோஜாக்கள் தாம். கிரகாம் ஸ்டூவர்ட் தாமஸ் கூற்றுப்படி, சீன ரோஜாக்கள் என்கிற வகுப்பு மீது தான் நவீன காலத்து ரோஜாக்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதியிலும், நான்கு வீரியமான சீன ரோஜாக்கள் ('ச்லேட்டர்ஸ்'கிரிம்சன் சீனா'1792, 'பார்சன்ஸ் பிங்க் சீனா' 1793, 'ஹும்ஸ் ப்ளஷ் டீ-சென்ட்டட் சீனா, 1809; மற்றும் 'பார்க்ஸ்' யெல்லொவ் டீ-சென்ட்டட் சீனா, 1824) ஐரோப்பாவுக்கு கொண்டு வரப்பட்டன என்பது மரபுக் கூற்று. உண்மையில் அதை விட அதிகமாக, குறைந்த பட்சம் ஐந்து சீனாக்கள், தேயிலைகளை எண்ணிக்கையில் கொள்ளாமல், இறக்குமதி செய்யப்பட்டன. மீண்டும் மீண்டும் பூக்கும் பழைய தோட்ட ரோஜாக்களின் முதல் வகுப்புகள் மற்றும் பிற்பாடு நவீன தோட்ட ரோஜாக்கள் படைப்பை இது கொண்டு வந்தது. உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா). உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா).

 
டீ ரோஜா 'மிஸ்ஸஸ் டட்லி கிராஸ்' (பால் 1907)

கீழ்திசை பயிரிடு வகைகளான, மூலமான "டீ-சென்ட்டட் சீனாஸ்" (ரோசா x ஓடோரட்டா ) வகைகள் ஆர்.சினென்சிஸ்ஸும் ஆசியாவின் வெளிர் மஞ்சள் பூக்களுடன் கூடிய ஒரு பெரிய ஏறு வகை ரோஜாவான ஆர்.ஜைஜான்டீயும் சேர்ந்த கலப்பினங்களின் பிரதிநிதியாக கருதப்பட்டு வந்தன. 1800 களின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே வளர்ப்பாளர்கள், குறிப்பாக பிரான்சில் , முதலில் அவற்றை சீனாக்களுடனும் பிறகு போர்பான்கள் மற்றும் நோயசெட்டேக்களுடனும் கலப்புச் செய்து தமது வேலையை ஆரம்பித்தனர். டீக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும் ரோஜாக்கள், அவற்றின் நறு மணம் சீனாவின் கறுப்புத் தேநீரை நினைவு படுத்துவதால் (இது எப்பொழுதும் பொருந்துவதில்லை என்றாலும்)அவ்வாறு பெயரிடப்பட்டவை. நிறத்தின் விதங்களில் வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் (அந்தக் காலத்தில் ஒரு புதுமை) மஞ்சள், மஞ்சள் கலந்த ஆரஞ்ச் போன்ற மென்மையான வெளிர் வண்ணங்கள் அடங்கும். பலவீனமான பூக்காம்புகள் காரணமாக பயிருடு வகைகளின் தனி பூக்கள் பாதி தொங்குபவை மற்றும் தலையசைப்பவை. "எடுத்துக்காட்டாக" அமையும் ஒரு டீயில், கூரான மொட்டுக்கள் உயர்ந்து-நடுவிலான, அதன் இதழ்கள் பின்னோக்கி சுருண்டிருக்க சுருள் சுருளாய் விரியும் பூக்களையும், அதன் இதழ்கள் ஒரு கூர்நுனி கொண்டும் திகழும். இப்படியாக டீக்கள் தாம் இன்றைய "உதாரணமாய்த் திகழ்கிற" பூ வியாபாரிகளின் ரோஜா வடிவத்தின் மூலகர்த்தாக்கள். சரித்திர ஆசிரியர் ப்ரென்ட் டிக்கர்சன் கூற்றுப்படி, இந்த டீ வகைப்படுத்தல் எந்த அளவுக்கு தாவர இயலுக்கு கடமைப்பட்டதோ அதே அளவுக்கு வியாபார யுக்திக்கும். 19 வது நூற்றாண்டு தோட்டக்கலைஞர்கள் அவர்கள்தம் வசம் விரும்பத்தகுந்த டீ பூ வடிவம் இருந்தால், அவர்களது ஆசியாவை ஆதாரமாகக் கொண்ட பயிரிடு வகைகளை "டீஸ்" என்று வகைப்படுத்தி விடுவார்கள், அவர்களிடம் இல்லை என்றால் "சீனாஸ்". சீனாஸ் போல இந்த டீஸ் குளிரான சீதோஷ்ண நிலைகளில் கடுமையாக இருப்பதில்லை. உதாரணங்கள்: 'லேடி ஹில்லிங்க்டன்', 'மேமன் கோஷட்'.

போர்பான்

தொகு

போர்பான்கள் இந்திய மகா சமுத்திரத்தில் மடகாஸ்கருக்கு அப்பால் லே ஐல் டே போர்பான் என்கிற(தற்போது ரீயுனியன் என்று அழைக்கப்படும்) இடத்தில் தோன்றியவை. இவை ஆட்டம் டமாஸ்குக்கும், 'ஓல்ட் ப்ளஷ்' சீன ரோஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கலப்பின் விளைவாக தோன்றியிருக்க வேண்டும், இவை இரண்டுமே அந்த தீவில் புதர் வேலி அமைக்கும் பொருளாக அடிக்கடி பயன் படுத்தப் பட்டவை. வழவழப்பான இலைகளும் மங்கலான ஊதா நிறப் பிரம்புகளும் கொண்ட உயிர்த்துடிப்புள்ள, அடிக்கடி பாதி மேலே ஏறும் புதர்கள் மீது இவை மீண்டும் மீண்டும் பூக்கின்றன. பிரான்சில் இவை முதன் முதலாக 1823 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணங்கள்: 'லுயிசே ஓடியர்', 'மேம்' பியர்ரே ஓகர்', 'சேபிரின் ட்ரௌஹின்'.

 
நோய்செட்டே ரோஜா 'டெஸ்ப்ரெ ஆ' ப்லுஅர்ஸ் ஷோன்ஸ்' (டெஸ்ப்ரெ 1830)

நோய்செட்டே

தொகு

முதல் நோய்செட்டே ரோஜா தெற்கு கரொலிநாவைச் சேர்ந்த ஜான் சேம்ப்னிஸ் என்ற பெயர் கொண்ட அரிசி பயிரிடுபவரால் ஒரு கலப்பின நாற்றாக வளர்க்கப்பட்டது. இதன் பெற்றோர்கள் சீன ரோஜா 'பார்சன்ஸ்'பிங்க்' மற்றும் இலையுதிர் காலத்தில் பூக்கும் கஸ்தூரி ரோஜா (ரோசா மோஸ்சேட்டா ), விளைவு வசந்த காலம் தொடங்கி இலையுதிர் காலம் வரை சிறிய இளஞ்சிவப்பு பூக்கள் கொண்ட பெரிய கொத்துகளை உருவாக்கும் உயிர்த்துடிப்புள்ள ஏறும் ரோஜா. சேம்ப்னிஸ் தமது ரோஜாவின் நாற்றுகளை ('சேம்ப்னிஸ்' பிங்க் க்லஸ்தர்' என்று அழைக்கப்படும்) பிலிப்பே நோய்செட்டே என்ற தனது தோட்டக்கலை நண்பருக்கு அனுப்பி வைத்தார், அவர் அந்தத் தாவரங்களை பாரிஸிலிருந்த தனது சகோதரர் லூயிக்கு அனுப்பினார், இவர் 'ப்ளஷ் நோய்செட்டே' வை 1817 இல் அறிமுகப்ப்படுத்தினார். முதல் நோய்செட்டேக்கள் சின்னப்பூக்கள் கொண்டதாயும், பெருமளவு குளிர் தாங்கும் ஏறிகள் ஆகவும் இருந்தன. பிற்பாடு டீ ரோஜாக்களின் மரபணுக்களைப் புகுத்தியது, அளவில் பெரிய பூக்கள், அளவில் சிறிய கொத்துக்கள், கணிசமாகக் குறைந்து போன குளிர் தாங்கும் வலிமை கொண்ட ஒரு டீ-நோய்செட்டே துணைவகுப்பை உருவாக்கியது. உதாரணங்கள்: 'ப்ளஷ் நோய்செட்டே', 'மேம். ஆல்பிரட் கேரியேர்' (நோய்செட்டே), 'மரேச்சல் நியல்' (டீ -நோய்செட்டே). (ஸீ மற்றும் [[: டே:நோய்செட்டே-ரோஜா|ஜெர்மன்]] இன் நோய்செட்டே ரோஜாக்களை பற்றிய கட்டுரைகள்)

ஹைப்ரிட் பர்பெச்சுவல்

தொகு
 
ஹைப்ரிட் பெர்பெச்சுவல் ரோஜா 'ல ரெயின்'(லஃபே 1844)

விக்டோரியாவின் இங்கிலாந்தில் முதன்மையான ரோஜாக்களின் வகுப்பு, ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் (ஹைப்ரைட்ஸ் ரிமோன்ட்டன்ட்ஸ் இன் ஒரு தவறான பொருள் தரும் மொழி பெயர்ப்பு, 'மீண்டும் பூக்கும் கலப்பினங்கள்') 1838 இல் ஆசிய ரேமொண்டன்சி ஐயும், பழைய ஐரோப்பிய மரபு வழிகளையும் வெற்றிகரமாக இணைத்த முதல் ரோஜாக்களாக வெளிப்பட்டது. தோன்றியது. மீண்டும் பூத்தல் என்பது ஒரு மந்த கால இயல்பு ஆதலால், ஆசிய/ஐரோப்பிய கலப்புகளின் (ஹைப்ரிட் சீனாஸ், ஹைப்ரிட் போர்பான்ஸ்,ஹைப்ரிட் நோய்செட்டேஸ்),முதல் தலைமுறை பிடிவாதமாக ஒருமுறை பூத்தன, ஆனால் இந்த ரோஜாக்களை அவற்றைத் தம்முடனேயே அல்லது சீனாஸ் உடன் அல்லது டீஸ் உடன் மறு கலப்பு செய்த போது, அவற்றின் சில சேய்கள் ஒரு முறைக்கு மேலாகவே பூத்தன. இந்த வகையில் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் ஒரு விதமான தொகுப்பு, பெருமளவுக்கு போர்பான்ஸ் களிடமிருந்தும் சீனாஸ்,டீஸ்,டமாஸ்க்ஸ், கேல்லிக்காஸ் மற்றும் ஒரு சிறிய அளவில் நோய்செட்டேஸ், ஆல்பாஸ் மற்றும் சென்ட்டி போலியாஸ் களிடமிருந்தும் சேர்த்துக் கலந்த கலவையிலிருந்து பெற்ற ஒரு ஜாடி வகுப்பு. மென்மையான தேநீர் ரோஜாக்கள் குளிர் பகுதிகளில் செழித்து வளர முடியாது என்பதால் இவை அந்தக் காலத்தில் வட ஐரோப்பாவின் மிகப் பிரபலமான தோட்ட மற்றும் பூ வியாபாரிகளின் ரோஜாக்களாக ஆக ஆனது. மற்றும் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் இன் அளவில் மிகப் பெரிய பூக்கள் போட்டா போட்டி கண் காட்சிகள் என்கிற புதிய புதிர்-மோகத்திற்கு நன்கு பொருந்தி வந்தன. பெயரில் இருக்கும் "பர்பெச்சுவல்" என்கிற வார்த்தை மீண்டும் மீண்டும் பூத்தலைக் குறிப்பால் உணர்த்துகின்றன, ஆனால் இந்த வகுப்பின் பல சார்ந்தினங்கள் மீண்டும் மலரும் பழக்கம் அறவே இல்லாது இருந்தன. வசந்த காலத்தில் ஒரு மிகப் பெரிய அளவில் பூத்தல், தொடர்ந்து கோடையில் சிதறிய பூத்தல், சிறிய அளவில் இலையுதிர் கால வெடித்து சிதறல் அல்லது சில நேரங்களில் அடுத்த வசந்தம் வரை பூத்தல் என்பது பூஜ்யம் என்கிற போக்கு இருந்தது. குறைந்த வரம்பிலான நிறத் தட்டு (வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு) நம்பத் தகுந்த மீண்டும் மீண்டும் பூத்தல் இல்லாமை, போன்ற காரணங்களால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் கடைசியாக அவைகளின் சொந்த சந்ததியினரான ஹைப்ரிட் டீஸ் ஆல் இருளடைந்தன. உதரணங்கள்: 'பர்டிநந் பிச்சர்ட்', 'ரெயின் டேஸ் வயலேட்ட்ஸ்', 'பால் நெய்ரான்'.

ஹைப்ரிட் மஸ்க்

தொகு
 
ஹைப்ரிட் மஸ்க் ரோஜா 'மூன்லைட்'(பெம்பர்ட்டன் 1913)

ஹைப்ரிட் மஸ்க் தொகுதி முதன்மையாக ரெவரென்ட் ஜோஸப் பெம்பர்டன் என்கிற ஒரு பிரித்தானிய ரோஜா நிபுணரால் 20 ஆம் நுற்றாண்டின் துவக்கத்தில் பீட்டர் லேம்பர்ட் இன் 1896 ஆம் வருடத்துக் கலப்பு 'ஆக்லையா' வை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ரோஜாவின் 'ட்ரையர்' என்கிற நாற்று இந்த வகுப்பின் அடிக்கல்லாகக் கருதப் படுகிறது. இவற்றின் சில பெற்றோர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் ஆதலால், இந்த வகுப்பின் மரபியல் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆயினும், ரோஸ் மல்டிபிளோரா ஒரு பெற்றோராக அறியப் படுகிறது, மற்றும் ஆர்.மோஸ்சாட்டா (கஸ்தூரி ரோஜா)வும் இதன் மரபுரிமையில் கணக்கிடப்படுகிறது. என்றாலும் அதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கிடையாது. ஹைப்ரிட் மஸ்க்குகள் நோய்-எதிர்ப்பவை, ரேமொண்டன்ட் மற்றும் வலிமையான, தனிப்பட்ட "கஸ்தூரி" வாசனையுடன் பொதுவாகக் கொத்துகளாய் பூப்பவை. 'பப் பியுட்டி' மற்றும் 'பெனலோப்' உதாரணங்களில் அடங்கும்.

பெர்முடா "மிஸ்டரி" ரோஜாக்கள்

தொகு

குறைந்தது ஒரு நூற்றாண்டாய் பெர்முடாவில் வளர்க்கப்பட்டு வந்த பல டசன் "கண்டுபிடிக்கப்பட்ட" ரோஜாக்களின் ஒரு தொகுதி. வெப்ப மண்டல மற்றும் உப வெப்ப மண்டலப் பகுதிகளில் ரோஜாக்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த ரோஜாக்கள் குறிப்பிடத்தக்க பயன் மற்றும் ஆர்வம் தருபவை, ஏனென்றால், இவை வெப்பமான ஈரப்பதம் உள்ள பகுதிகளில் ரோஜா சாகுபடியை வாட்டும் நேமட்டோட் எனப்படும் புழுக்கள் ஏற்படுத்தும் கேடு மற்றும் காளான் நோய்களுக்கு சிறந்த எதிர்ப்பு தருபவை மற்றும் வெப்பமான, ஈரப்பதம் உள்ள தட்பவெப்ப நிலையில் பூக்க வல்லவை. இவற்றில் பெரும்பாலான பூக்கள் ஏதோ ஒரு வகையில் வேளாண்மை அல்லது அதன் நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட பழைய தோட்ட ரோஜா பயிரிடு வகைகளாக இருக்கக் கூடும். இவைகள் "மிஸ்டரி ரோஜாக்கள்" ஏனென்றால் இவற்றின் "சரியான" சரித்திரப் பெயர்கள் தொலைந்து போய் விட்டன. மரபின் கட்டளை என்னவென்றால் இவற்றிற்கு, இவற்றை மறுகண்டுபிடிப்பு செய்த தோட்டத்தின் உரிமையாளர் பெயரை இட வேண்டும் என்பது தான்.

ஹைப்ரிட் ருகோசா

தொகு
 
ருகோசா ரோஜா 'ப்ளேங்க் டபள் டே கொபர்ட்' (கோஷட் 1893)

ஆர்.ருகோசா தாவரங்களில் இருந்து பெறப்பட்ட, இந்த உயிர்த்துடிப்புள்ள ரோஜாக்கள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் மிகவும் கடுமையானவை. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் நறுமணமானவை, மீண்டும் மீண்டும் பூப்பவை, நடுத்தரமான இரண்டு தட்டையான பூக்கள் கொண்டவை. ஹைப்ரிட் ருகோசாவின் தனிப்படுத்திக் காட்டும் சிறப்பு என்னவென்றால் இதன் சுருக்கம் விழுந்த இலைகள், ஆனால் சில கலப்பினங்களுக்கு இந்த தனி இயல்பு இருக்காது. இந்த ரோஜாக்கள் அடிக்கடி இடுப்புகளை அமைத்துக் கொள்ளும். 'ஹன்சா' மற்றும் ரோசரேயி டே ல'ஹே' உதாரணங்களில் அடங்கும்.

மற்றவை

தொகு

மற்ற வேறு சில சிறு வகுப்புகளும் இருக்கின்றன (ஸ்காட்ஸ், ஸ்வீட் ப்ரையர் போன்றவை) மற்றும் சில பழைய ரோஜாக்களின் ஏறும் வகுப்புகள் (ஐர்ஷைர், க்ளைம்பிங் சீனா, லேவிகேட்டா, செம்பர்விரேன்ஸ், போர்சால்ட், க்ளைம்பிங் டீ, மற்றும் க்ளைம்பிங் போர்பான் ஐ உள்ளடக்கியவை) உள்ளன. ஏறு மற்றும் புதர் வடிவங்களின் வகுப்புகள் இரண்டும் அடிக்கடி ஒன்றாகத் தொகுக்கப்படுகின்றன.

நவீன தோட்ட ரோஜாக்கள்

தொகு

நவீன ரோஜாக்களை வகைப்படுத்துதல் என்பது மிகவும் குழப்பமளிக்கக் கூடியது ஏனென்றால் பல நவீன ரோஜாக்களில் பழைய தோட்ட ரோஜாக்களின் பாரம்பரியம் உள்ளது மற்றும் இவற்றின் உருவம் மிக அதிகமாக வேறுபடுகிறது. வகைப்படுத்துதல் வளர்ச்சி மற்றும் பூக்கும் சிறப்பு இயல்புகள் நோக்கில் "பெரிய பூக்கள் கொண்ட புதர்", "மீண்டும் தோன்றும், பெரிய பூக்கள் கொண்ட புதர்", "கொத்துப் பூக்கள் கொண்டவை", "ரேம்ப்ளர் ரெகரன்ட்", அல்லது "கிரௌண்ட் கவர் நான்-ரெகரன்ட்" போன்று அமையும். மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான நவீன தோட்ட ரோஜாக்களின் வகைப்படுத்துதல் கீழ்க் கண்டவையில் அடங்கும்:

ஹைப்ரிட் டீ

தொகு
 
ஒரு 'மெமோரியம்' ஹைப்ரிட் டீ ரோஜா (வான் ஆப்ராம்ஸ் 1962)

நவீன ரோஜாக்களின் வரலாற்றின் பெரும் பகுதியில் அதிகமாய் விரும்பப்படும் ஹைப்ரிட் டீஸ் முதலில் 1800 களின் இறுதியில் டீ ரோஜாக்களை ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் களுடன் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டன. 1867 இல் உருவாக்கப்பட்ட 'ல பிரான்ஸ்' ரோஜாக்களின் ஒரு புதிய வகுப்பின் முதல் அறிகுறி என்று உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஹைப்ரிட் டீஸ் இல் தமது இரண்டு பெற்றோர்களுக்கும் இடையிலான நடுவழி தனி இயல்புகள் காட்சி தருகின்றன: டீஸ் ஐ விடக் கடுமையானவை ஆனால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் ஐ விடக் கடுமை குறைந்தவை, மற்றும் எப்போதும் பூப்பதில் ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் ஐ விட அதிகம் ஆனால் டீஸ் ஐ விடக் குறைவு. பூக்கள் பெரிய, உயர்-நடுவிலான மொட்டுகளுடன் நன்கு வடிவமைந்து, ஒவ்வொரு பூத்தண்டும் சொல்லி வைத்தாற்போல் ஒற்றையான நன்கு அமைந்த பூவில் முடிவு பெறுகிறது. புதர்கள் விரைப்பாக மேல்நோக்கியும், நெருக்கமில்லாத இலைகளுடனும் கூடிய இவை இன்றைய நாட்களில் பெரும்பாலும் இயற்கைப் பரப்பின் ஒரு வேண்டாத சுமையாகப் பார்க்கப்படுகின்றன. ஹைப்ரிட் டீஸ் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான தோட்ட ரோஜாக்களின் ஒரு வகுப்பு என்று பெயர் பெற்றன; இன்று, இவை மற்ற எந்த ரோஜா வகுப்பைகளையும் விட பராமரிப்புச் செலவு அதிகம் பிடிக்கும் வகை என்கிற அவப்பெயர் காரணமாய் தோட்டக்காரர்கள் மற்றும் இயற்கை பரப்பை சீரமைப்பவர்கள் மத்தியில் இவற்றிற்கு ஒரு செல்வாக்கு சரிவு ஏற்பட்டு குறைந்த பராமரிப்புச் செலவு பிடிக்கும் "இயற்கை பரப்பு" ரோஜாக்கள் பக்கம் செல்லும் நிலை. ஹைப்ரிட் டீ பூ தொழிலின் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட ரோஜாவாக நிலவி வருகிறது, அது சம்பிரதாயமான சூழல்களில் சிறிய தோட்டங்களில் இன்னமும் விரும்பப்படுகிறது. உதாரணங்கள்: 'பீஸ்' (மஞ்சள்), 'மிஸ்டர் லிங்கன்' (சிவப்பு), 'டபிள் டிலைட்'(இரு நிறம் சந்தனம் மற்றும் சிவப்பு).

பெர்னேடியானா

தொகு
 
பெர்னேஷியானா ரோஜா சொலெயில் டி'ஓர்,' அதன் வகுப்பின் முதன்மையானது (பெர்னெட் 1900)

பிரெஞ்சு வளர்ப்பாளர் ஜோஸப் பெர்னெட்-டச்சர் தனது 1900 வருஷ அறிமுகம் 'சொலேய்ல் டி'ஓர்.'உடன் பழைய ஆஸ்ட்ரியன் பிரையர் ரோஜா ரோசா பீட்டிடா வின் மரபணுக்களை உள்ளடக்கி ரோஜாக்களின் முதல வகுப்பைத் துவக்கி வைத்தார்.

இதனால் ரோஜாக்களின் முழுவதும் புதியதான ஒரு நிறப் பரப்பு உருவானது. ஆழ்ந்த மஞ்சள், மஞ்சள் கலந்த ஆரஞ்ச், செம்புச் சிவப்பு, ஆரஞ்ச், உண்மையான கருஞ்சிவப்பு, மஞ்சளின் இரு நிறங்கள், லேவண்டர், சாம்பல் நிறம் மற்றும் பழுப்பு கூட இப்போது சாத்தியமாகின.

உண்மையில் ஒரு தனி வகுப்பாகக் கருதப் பட்டாலும், 1930 இல் பெர்நிஷியானாஸ் அல்லது ஹைப்ரிட் பீட்டிடாஸ் ஹைப்ரிட் டீஸ் உடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய நிறப் பரப்பு ஹைப்ரிட் டீ இன் புகழை மிக உயரே தூக்கிச் சென்றது ஆனால் இந்த நிறங்களுக்காக ஒரு விலை கொடுக்கவும் நேர்ந்தது: நோயினால் பீடிக்கப்படும் போக்கு,வாசனை இல்லாத பூக்கள் மற்றும் கத்தரித்துச் சீர்படுத்துதலைத் தாங்க முடியாத தன்மைகளை ரோசா பீட்டிடா தமkiது சந்ததியினருக்கு விட்டுச் சென்றது.

போலியந்தா

தொகு

அப்படியே சொல்வது என்றால் "பல பூக்கள் கொண்ட" ரோஜாக்கள், கிரேக்க வார்த்தை "போலி" (பல) மற்றும் "அன்தோஸ்" (பூ).

உண்மையில் இரண்டு கிழக்காசிய தாவரங்கள் ரோசா சினென்சிஸ் மற்றும் ஆர்.மல்டிபிளோரா வின் கலப்புகளிலிருந்து பெறப் பெற்ற போலியந்தாக்கள் பிரான்சில் 1800 களின் இறுதியில் ஹைப்ரிட் டீக்களுடன் முதலில் தோன்றின.

அவை குட்டையான செடிகளைக் கொண்டிருந்தன-சில அடர்த்தியாக, மற்றவை பரந்திருக்கும் பழக்கத்தில் - சிறு சிறு பூக்களுடன் - (சராசரியாக 1" குறுக்களவில்) பெரிய தெளிப்புகளாக ரோஜாக்களுக்கே உரித்தான வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்தன.

இவற்றின் புகழுக்கு முக்கியமான காரணம் இவை ஏராளமாகப் பூத்தல்: வசந்த காலத்திலிருந்து இலையுதிர் காலம் வரை, இயற்கைப் பரப்பில் ஒரு வலிமையான நிறத் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு ஆரோக்கியமான போலியந்தா புதர் முழுக்க முழுக்க பூக்களால் மூடப்பட்டிருக்கக் கூடும்.

போலியந்தா ரோஜாக்கள் குறைந்த பராமரிப்புச் செலவு, நோய்-எதிர்ப்பு சக்தி கொண்ட தோட்ட ரோஜாக்கள் என்று இன்று வரை மதிக்கப்படுகின்றன, மற்றும் அதே காரணத்திற்காக இன்று பிரபலமாகவும் இருந்து வருகின்றன.

உதாரணங்கள்: "செசில் பிரன்னர்", "தி பைரி","ரெட் பைரி", "பிங்க் பைரி".

ப்லோரிபண்டா

தொகு
 
ரோசா 'போருசியா', ஒரு நவீன ப்லோரிபண்டா ரோஜா

போலியன்தாஸ் ஐ ஹைப்ரிட் டீஸ் உடன் கலப்புச் செய்வதில் உள்ள பயனை ரோஜா வளர்ப்பாளர்கள் உடனடியாகக் கண்டு கொண்டனர் - போலியந்தா போன்று மிக தாராளமாக பூக்கக் கூடிய, ஆனால் ஹைப்ரிட் டீ யின் பூ அழகு மற்றும் நிற பரப்புடன் கூடிய ரோஜாக்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.

இரண்டு பெற்றோர்களின் வகுப்புகளுக்கும் இடைப்பட்ட வழி குணாதிசயங்களுடன் 1909 இல் முதல் போலியந்தா/ஹைப்ரிட் டீ கலப்பு, "க்ரஸ் அன் ஆச்சென்' உருவாக்கப்பட்டது. உருவத்தில் பெரிய, நன்கு வடிவமைந்த பூக்கள் மற்றும் ஹைப்ரிட் டீ போன்ற வளரும் பழக்கம் இந்தப் புதிய ரோஜாக்களைப் போலியன்தாஸ் மற்றும் ஹைப்ரிட் டீஸ் இரண்டிலிருந்துமே பிரித்துக் காட்டியது, ஒரு புதிய வகுப்பு உருவாக்கப்பட்டு ப்லோரிபண்டா என்று பெயரிடப்பட்டது, "பலமுறை-பூப்பவை" என்பதற்கு லத்தீனச் சொல்.

ஒரு சரியான ப்லோரிபண்டா, அளவில் சிறிய அதே சமயம் சராசரி ஹைப்ரிட் டீ ஐக் காட்டிலும் அடர்த்தியான, ஆனால் சராசரி போலியந்தா வைக் காட்டிலும் குறைவான அடர்த்தி, பரப்புடனும், விரைப்பான புதர்களைக் கொண்டிருக்கும்.

இதன் பூக்கள் ஹைப்ரிட் டீஸ் ஐக் காட்டிலும் அளவில் சிறியவை ஆனால் பெரிய தெளிப்புகளாக பரந்து, தோட்டத்தில் ஒரு நல்ல பூத்தாக்கத்தைத் தருகின்றன.

ப்லோரிபண்டாக்கள் அனைத்து ஹைப்ரிட் டீ நிறங்களிலும், ஹைப்ரிட் டீஸ்களுக்கே உரித்தான பூ அமைப்புடனும், சில சமயங்களில் ஹைப்ரிட் டீஸ் களிடமிருந்து கொத்துக் கொத்தாகப் பூக்கும் தன்மையிலிருந்து மட்டுமே வேறுபட்டு காணப்படுகின்றன.

இவை இன்று பொதுப் பூங்காக்கள் மற்றும் அது போன்ற இடங்களின் பெரிய படுக்கை அமைப்பு திட்டங்களில் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணங்கள்: 'டைன்ட்டி மெய்ட்', 'ஐஸ்பர்க்', 'டஸ்கான் சன்'.

க்ரேண்டிப்லோரா

தொகு

க்ரேண்டிப்லோராக்கள் என்பவை ("பெரிய பூக்களாலான" என்பதற்கு லத்தீனச் சொல்) 1900 களின் நடுவில் உருவாக்கப்பட்ட ரோஜாக்களின் வகுப்பு - ஹைப்ரிட் டீஸ் களுக்கும் ப்லோரிபண்டாஸ் களுக்கும் இடையேயான இரண்டு இனத்திலும் பொருந்தாத பின்-கலப்புகளுக்கு - குறிப்பாக, 1954 இல்[5] அறிமுகப்படுத்தப்பட்ட 'க்வீன் எலிசபத்' ரோஜாவுக்கு, இடப்பட்ட பெயர்.

க்ரேண்டிப்லோரா புதர்கள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரி பண்டாஸ் புதர்களை விட அளவில் பெரியவை, மற்றும் ஹைப்ரிட் டீ-பாணியில், ஒரு ப்லோரிபண்டாவைப் போன்று, சிறிய கொத்துக்களில் மூன்றிலிருந்து ஐந்துவரையிலான பூக்கள் என்கிற அமைப்பைக் கொண்டவை.

1950 களில் தொடங்கி 1980 கள் வரைக்கும் க்ரேண்டிப்லோராக்கள் கொஞ்சம் புகழுடன் திகழ்ந்தன ஆனால் இன்று இவைகள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரிபண்டாஸ் களைக் காட்டிலும் மிகவும் புகழ் குறைந்தவையே. உதாரணங்கள்: 'க்வீன் எலிசபத்', 'கொமான்ச்சே', 'மோன்டிசுமா'.

மினியேச்சர்

தொகு
 
மைலண்டைன் (ஒரு மினியேச்சர் ரோஜா) ஒரு டெரகோட்டா பூந்தொட்டியில்

பழைய தோட்ட ரோஜாக்களின் எல்லா வகுப்புகளும் - கேல்லிக்காஸ், சென்ட்டிபோலியாஸ் போன்றவை - இவற்றின் பெரிய வகை வடிவங்களைப் போன்றே இவை ஒருமுறை-பூப்பவை என்றாலும், ஒத்தாற்போன்ற மிகச் சுருக்கப்பட்ட வடிவங்கள் ஏற்படுத்தக் கொண்டிருந்தன.

சாதாரண மாதிரி-வடிவம் கொண்ட சார்பு இனங்கள் போன்றே மினியேச்சர் பழைய தோட்ட ரோஜாக்கள், எப்பொழுதும் பூக்கும் மினியேச்சர் ரோஜாக்களை உருவாக்க மீண்டும் மீண்டும் பூக்கும் ஆசிய தாவரங்களுடன் கலப்புச் செய்யப் பட்டன.

இன்று, மினியேச்சர் ரோஜாக்கள் என்றால் குச்சிகள் நிறைந்த, மீண்டும் மீண்டும் பூக்கும், உயரத்தில் 6"லிருந்து 36" வரையிலும், பெரும்பாலானவை 12"-24" உயர பரப்பிலும் அடங்குகிற புதர்கள்.

பூக்கள் எல்லா ஹைப்ரிட் டீ நிறங்களிலும் தோன்றுகின்றன; பல சார்பினங்களும் சிறப்பான உயர்-மத்தி ஹைப்ரிட் டீ பூ வடிவைப் பின்பற்றுகின்றன.

மினியேச்சர் ரோஜாக்கள் பெரும்பாலும் பூ தொழில் அதிபர்களால் வீட்டுச்செடிகள் என்று வியாபார யுக்தியுடன் விற்கப்படுகின்றன, ஆனால் இந்தச் செடிகள் பெரும்பாலும் வெப்பமான பகுதிகளைச் சேர்ந்த வெளிப்புற புதர்களிடமிருந்து தோன்றியவை என்பதையும், மினியேச்சர் ரோஜா சார்ந்தினங்கள் பலவற்றிற்கு உயிர் வாழ வருடா வருடம் குளிர் இல்லாத ஒரு காலப் பகுதி தேவை என்பதையும் நினைவில் கொள்வது முக்கியமானது.

உதாரணங்கள்: பெடைட் டே ஹாலண்ட் (மினியேச்சர் சென்ட்டிபோலியா, ஒருமுறை-பூப்பவை), கப்கேக்(நவீன மினியேச்சர், மீண்டும் மீண்டும்-பூப்பவை).)

க்ளைம்பிங்/ரேம்ப்லிங்

தொகு
 
ரோசா 'சேஃபிரைந் ட்ரௌஹிந்', ஒரு ஏறும் போர்போன் ரோஜா (பைசோட் 1868)

மினியேச்சர் ரோஜாக்களைப் போன்றே மேற்கூறிய அனைத்து ரோஜாக்களின் வகுப்புகளும், பழையவை மற்றும் நவீனம் இரண்டும், "ஏறும்" வடிவங்கள் கொண்டவை, இதனால், இந்தப் புதர்களின் பிரம்புகள் அதிக உயரம் வளர்பவை மற்றும் சாதாரண ("புதர்") வடிவங்களை விட அதிகம் வளைந்து கொடுப்பவை.

பழைய தோட்ட ரோஜாக்களில், இது பெரும்பாலும் பயிரிடு வகைகள் மற்றும் சர்ந்தினங்களின் இயற்கையான வளர்ச்சி பழக்கம்; ஆயினும், நவீன ரோஜாக்கள் பலவற்றில், ஏறும் ரோஜாக்கள் என்பவை தானாகவே நிகழ்கிற சிதைவுகளின் விளைவுகள்.

உதாரணமாக,'பீஸ்'ஹைப்ரிட் டீ ரோஜாவின் வடிவம், இவற்றின் பிரம்புகள் நீண்டவை மற்றும் வளைந்து கொடுப்பவை அதாவது "க்ளைம்பிங்" என்பதைத் தவிர, மரபணு ரீதியாக சாதாரண "புதர்" ஐ ஒத்தது என்பதால் 'க்ளைம்பிங் பீஸ்' "க்ளைம்பிங் ஹைப்ரிட் டீ" ஆக நியமனம் பெறுகிறது.

க்ளைம்பிங் ரோஜாக்கள் பல உயரத்தில் 8' முதல் 20' வரை வளர்கின்றன மற்றும் மீண்டும் மீண்டும் பூப்பதை வெளிப்படுத்துகின்றன. ரேம்ப்ளர் ரோஜாக்கள், தொழில் நுட்ப ரீதியாக ஒரு தனி வகுப்பு என்றாலும் பெரும்பாலும் ஏறும் ரோஜாக்களுடன் சேர்த்துத்தான் பேசப் படுகின்றன.

இவையும் நீண்ட, வளைந்து கொடுக்கும் பிரம்புகளை வெளிப்படுத்துகின்றன, ஆனால் உண்மையான ஏறிகளிலிருந்து இரண்டு வழிகளில் வேறுபடுகின்றன: அளவில் பெரிய ஒட்டு மொத்தமான உருவம் (20-30' உயரம் என்பது சாதாரணம்), மற்றும் ஒருமுறை-பூக்கும் ஒரு தன்மை.

க்ளைம்பிங் ரோஜாக்கள் மற்றும் ரேம்ப்ளிங் ரோஜாக்கள் இரண்டுமே ஐவி, க்ளிமேடிஸ் அல்லது விஸ்டீரியா க்கள் போல உண்மையான படர கொடிகள் அல்ல; இவை தாங்கிகளுடன் தாமாகவே ஒட்டிக் கொள்ளும் செய்திறன் அற்றவை, ஆகவே, கொடிப்பந்தல் மற்றும் கொழுகொம்பு போன்ற கட்டமைப்புகள் உடன் கட்டப்பட வேண்டும் மற்றும் கைகளைக் கொண்டு பழக்கப் படுத்த வேண்டும்.

உதாரணங்கள்: 'ப்ளேஸ்' (மீண்டும் மீண்டும்-பூக்கும் ஏறி), 'அமெரிக்கன் பில்லர்' (ஒரு முறை-பூக்கும் ரேம்ப்லேர்).

இங்கிலீஷ்/டேவிட் ஆஸ்டின்

தொகு

ரோஜாக்களின் ஒரு தனி வகுப்பு என்று எந்த நிறுவப்பட்ட ரோஜா அலுவலகத்தாலும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், - இங்கிலீஷ் (டேவிட் ஆஸ்டின் என்றும் அறியப்படுகிற) ரோஜாக்கள் ஒரே மாதிரியாக உபயோகிப்பாளர்களாலும், சில்லறை வியாபாரிகளாலும் தனியாக எடுத்து வைக்கப்படுகின்றன.

ஸ்ராப்ஷயர், இங்கிலாந்து ஐச் சேர்ந்த டேவிட் ஆஸ்டின் 1960 களில் நவீன ஹைப்ரிட் டீஸ் மற்றும் ப்லோரிபண்டாஸ் களைக் கலப்புச் செய்து பழைய தோட்ட ரோஜாக்கள் மீதான ஆர்வத்தைத் தூண்ட விரும்பி முன்னேற்றப் பணியைத் துவக்கினார்.

நவீன, மீண்டும் மீண்டும் பூக்கும் குணாதிசயங்களுடனும், எண்ணிக்கையில் அதிகமான நிறப் பரப்புடன், பழைய-பாணி வடிவங்கள் மற்றும் நறுமணங்கள் கொண்ட தனித் தன்மை உள்ள கேல்லிக்கா , ஆல்பா மற்றும் "டமாஸ்க்" ரோஜாக்களை நினைவுபடுத்தும் விதமாக, ரோஜாக்களின் ஒரு புதுப் பிரிவை உருவாக்குவது என்பது தான் திட்டம்.

ஆஸ்டின் தனது பணியில் பெரும்பாலும் வெற்றி அடைந்தார்; தற்சமயம் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான சார்ந்தினங்கள் கொண்ட அவரது "இங்கிலீஷ்" ரோஜாக்கள் கூட்டம், தோட்டக்கலை மக்களால் அன்புடன் கட்டித் தழுவி ஏற்கப்பட்டிருக்கின்றன மற்றும் உபயோகிப்பாளர்களுக்கு பரவலாக கிடைக்கின்றன.

டேவிட் ஆஸ்டின் ரோஜாக்கள், தொடர்ச்சியாக புதிய சார்ந்தினங்கள் வெளியிடப்பட்டு, இன்றும் முனைப்புடன் உருவாக்கப்படுகின்றன,

இந்த முயற்சியில் பழைய தோட்ட ரோஜாக்களின் மரபுக்கே உரித்தான குளிர்-தாங்கும் தன்மையும், நோய்-எதிர்ப்பு வலிமையும் பெரிய அளவில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்; நவீன ஹைப்ரிட் டீஸ் மற்றும் ப்லோரிபண்டாஸ் களை பீடிக்கும் அதே நோய் தொந்தரவுகளுக்கு பல இங்கிலீஷ் ரோஜாக்களும் ஆளாகக் கூடும் மற்றும் யுஎஸ்டிஏ மண்டலம் 5 க்கு வடக்கில் இவைகள் திடகாத்திரமாக இல்லை.

உதாரணங்கள்: 'மேரி ரோஸ்', 'கிரகாம் தாமஸ்', 'தமோரா'.

கனேடியன் ஹார்டி ரோசெஸ்

தொகு

கடினமான கனேடியன் குளிர் காலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ரோஜாக்கள் அக்ரிகல்ச்சர் கனடா வால் மோர்டன் இல் உள்ள மோர்டன் ரிசர்ச் ஸ்டேஷன் இலும், மேனிடோபா மற்றும் எக்ஸ்பரிமென்டல் பார்ம், ஒட்டாவா விலும் (பிற்பாடு ல'அசொம்ஷன், க்யூபெக்-யிலும்) உருவாக்கப்பட்டன.

இந்த இரண்டு முக்கியமான வழிகள் பார்க்லேன்ட் தொடர் மற்றும் எக்ஸ்ப்ளோரர் தொடர் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த செயல் திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன; ஆயினும் மிச்சமுள்ள செடி கையிருப்பு கனேடியன் ஆர்ட்டிஸ்ட்ஸ் தொடர் வழியாக தனியார் வளர்ப்பாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் கனேடியன் பழங்குடி தாவரங்கள் மற்றும் அதிக மென்மையான ரோஜாக்களின் கலப்புகளில் பெறப்பட்ட இந்தச் செடிகள் மிக அதிகமாக குளிர் தாங்குபவை, சில -45 டிகிரீ செல்சியஸ் வரையிலும் கூட. ஒரு பரந்த வகைப்பாடு உள்ள உருவங்கள் மற்றும் நிறங்கள் சாதிக்கப்பட்டன .'மோர்டன் பெல்லி', 'வின்னிபெக் பார்க்ஸ்' மற்றும் 'க்யுத்பெர்ட் கிரான்ட்' உதாரணங்களில் அடங்கும். மற்ற குறிப்பிடத்தக்க கனேடியன் வளர்ப்பாளர்களில் ஜார்ஜெஸ் பக்நெட் மற்றும் ராபர்ட் எர்ஸ்கின் அடங்குவர்.

லேன்ட்ஸ்கேப் ரோசஸ்

தொகு
 
ஒரு புதர் ரோஜாவின் உதாரணம்.

இவைகள் முக்கியமாக பொது மக்களின் இனிமை வாழ்க்கை தோட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நவீன வகை ரோஜா. இவைகள் ஒட்டுமொத்தமாக புதர் ரோஜாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தோட்டக்காரர்கள் மற்றும் இயற்கைபரப்பு சீரமைப்பாளர்கள் மத்தியில் பாரம்பரிய ஹைப்ரிட் டீ மற்றும் ப்லோரிபண்டா வகைகள் ஆதரவை இழந்தன, ஏனெனில் அவை பெரும்பாலும் கடும் மனித உழைப்பும், ரசாயனமும் தேவைப்பட்ட, பலவிதமான தீங்கிழைக்கும் பூச்சிகள் மற்றும் நோய் உபாதைகளால் பாதிக்கப்படும் செடிகள்.

"லேன்ட் ஸ்கேப்" ரோஜாக்கள் என்று பெரிதாக அழைக்கப்படும் ரோஜாக்கள், நிறம், வடிவம் மற்றும் நறுமணம் தரும், அதே சமயம் பராமரிப்புச் செலவு குறைவாகவும் பேணுவது சுலபமானதாகவும் உள்ள ஒரு தோட்ட ரோஜாவுக்கான உபயோகிப்பாளரின் ஆசையைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டவை தாம். லேன்ட் ஸ்கேப் ரோஜாக்கள் பல கீழ்க்கண்ட குணாதிசயங்களைக் கொண்டுள்ளன:

  • நல்ல நோய் எதிர்ப்புத் தன்மை
  • குள்ளமாக வளரும் தன்மை வழக்கமாக 60 செமீ (24 இன்சுகள்)க்குக் கீழ்
  • மீண்டும் மீண்டும் பூத்தல்
  • நோய் மற்றும் தீங்கிழைக்கும் பூச்சி எதிர்ப்பு
  • உறிஞ்சி உயிர் வாழாமல், தமது வேர்கள் மீதே வளர்தல்.

புதிய லேன்ட் ஸ்கேப் ரோஜாக்களின் சார்ந்தினங்களை வளர்ப்பதில் ஈடுபட்ட முதன்மையான நபர்கள்: வெர்னெர் நோக் (ஜெர்மனி), மெய்டிலேன்ட் ரோசஸ் (பிரான்ஸ்), பூட் & கோ (நெதர்லேன்ட்ஸ்) மற்றும் வில்லியம் ரேட்ளர் (யுஎஸ்ஏ). பூக் கம்பள ரோஜாக்கள், அல்லது கம்பள ரோஜாக்கள் என்றும் அறியப் படுகின்ற இவ்வகை, தரைப்பரப்பு ரோஜாக்கள் பிரிவின் முழுத் தன்மையையும் மாற்றியிருக்கின்றன. 1990 இல் வெர்னெர் நோக் ஆல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அவைகள், அந்த நேரத்தில் உலகத்தின் மிகக் கடுமையான ரோஜா பரீட்சைகளில் ஒன்றான டாயிச்லேன்ட் ரோஸ் டெஸ்டர்ஸ் ஆல் தரப்படும் மிக உயரிய விருதைப் பெற்றன.இந்தப் பரீட்சையில் கலந்து கொண்ட 43 சார்ந்தினங்களில் - நோய் எதிர்ப்பு சம்பந்தமாக சுமார் 200 முறைகள் சோதிக்கப்பட்டதில் - இந்த ஒரு வகை மட்டுமே அந்தப் பரீட்சையில் தேறியது, அதுவும் ஒரு ரோஜாவுக்கு எப்போதுமே கொடுக்கப் பட்ட மிக அதிகமான அந்த நேரத்தில் சாத்தியமான 100 க்கு 85.5, நோய் எதிர்ப்புக்கு 20 க்கு 18.3 குறி எண்களுடன்.இவை இப்போது வளர்க்கப்பட்ட ரோஜாக்களில் சிறந்த தரைபரப்பு ரோஜா பிரிவு என்று மதிக்கப்படுகின்றன, உலகம் முழுமையும் கிடைக்கின்றன.

கார்ப்பெட் ரோசஸ்

தொகு

டேவிட் ஆஸ்டின் போலவே இவையும் ஒரு தனி ரோஜா வகுப்பு என்று நிறுவப்பட்ட ரோஜா அதிகாரி மூலமாக அதிகாரபூர்வமாக அங்கீகாரம் பெறாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் கார்ப்பெட் ரோஜாக்கள் (பிளவர் கார்ப்பெட் என்றாலும்) உபயோகிப்பாளர்களாலும், இயற்கைப்பரப்பு சீரமைப்பாளர்கள் மற்றும் தொழில் சம்பந்தப்பட்டவர்களாலும் அவ்விதமே கருதப் படுகின்றன. வெர்னர் நோக் (ஜெர்மனி) 1965 இல் நோய் எதிர்ப்பு ரோஜாக்களை வளர்க்கத் தொடங்கினார். அவர் ரோஜாக்கள் மீது தீவிர விருப்பம் கொண்டிருந்தார், ஆனால் ரோஜாவின் இந்த எல்லாவிதமான நோய்களுடன் அவை நீண்ட காலத்திற்கு தோட்டக் காரர்களின் மனதை கவர முடியும் என்று கருதவில்லை.

அவர் 1989 இல் தனது முதல் பிளவர் கார்ப்பெட் ரோஜா, பிளவர் கார்ப்பெட் பிங்க் ஐ அறிமுகப் படுத்தினார். முன்னெப்பொழுதும் இல்லாத நோய் எதிர்ப்பு தன்மை மட்டுமன்றி எந்த ரோஜாவையும் விட மிக நீண்ட காலம் பூப்பவை ( 5 லிருந்து 9 மாதங்கள் வரை- சீதோஷ்ண நிலையைப் பொறுத்து)ஆகவும், கவர்ச்சியான கத்தரித்து சீரமைத்தல் தேவை இல்லாமலும் - பெரிய கத்தரிக்கோல், டிராக்டரைக் கொண்டும் கத்தரிக்க முடியும் (1/3 ஆகக் குறைக்கிறோமா, அல்லது தரை மட்டமாக ஆக்குகிறோமா என்பதும் ஒரு விஷயமில்லை) இவை எல்லாமே சிறந்த பச்சைப்பசேல் இலைகளின் மீது என்பதான ரோஜா அது. தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் ஒரு வலிமையான வளர்ப்பு திட்டம் காரணமாய் வெள்ளை, ஆப்பிள் ப்லோஸம், சிவப்பு, மஞ்சள், தங்க நிறம், பவழ நிறம் போன்ற பலவிதமான நிறங்கள் அறிமுகமாயின, கிடைக்கவும் ஆரம்பித்தன.

இந்தச் சமயத்தில் அவருடைய மைந்தர் ரெயின்ஹார்ட்நோக் கின் கீழ் வளர்ப்பு வேலை தொடர்ந்தது. மேன்மேலுமான வளர்ப்பு, 2007 இல் அடுத்த தலைமுறை வளர்ப்பு பிளவர் கார்ப்பெட் பிங்க் சுப்ரீம் உடன் ஸ்கார்லெட் மற்றும் ஆம்பர் ஆக அறிமிகம் ஆனது. முந்தியவற்றின் குணாதிசயங்களோடு இவைகள் 41 டிகிரீ வரையிலான வெப்பமான சூழ்நிலைகளிலும் சவுகரியமாக இருக்கக் கூடியவை.

கத்தரித்துச் சீரமைத்தல்

தொகு

ரோஜாவை கத்தரித்து சீரமைத்தல், தோட்டக்கலையின் ஒரு கலை வடிவம் போல் சில சமயங்களில் மதிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் சீரமைக்கப்பட வேண்டிய ரோஜாவின் வகை, சீரமைப்பின் காரணம், சீரமைப்பு செய்யும் விருப்பம் வருடத்தின் எந்த பகுதி என்பதைப் பொறுத்தது.

பழைய தோட்ட ரோஜாக்கள் பெரும்பாலும் சரியான ஐரோப்பிய பாரம்பரியத்தைச் சேர்ந்த (ஆல்பாஸ், டமாஸ்க்ஸ், கேலிக்காஸ் போன்றவை)வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில், 2 வருடமான (அல்லது அதற்கு மேலும் ஆன) பிரம்புகள் மீது வருடத்தில் ஒரு முறை பூக்கும் புதர்கள்.

இவற்றுடன் ஒப்பிடத்தக்க மற்றெந்த புதர் லைலாக் அல்லது போர்சிதியா போன்று இவற்றின் கத்தரித்துச் சீர் செய்ய வேண்டிய தேவைகள் மிகக் குறைவானதே. பொதுவாக வயதான, நீண்டு மெலிந்த பிரம்புகள் மட்டுமே, புதுப் பிரம்புகளுக்கு இடம் தரும் விதத்தில்,கத்தரித்து சீர் செய்யப்பட வேண்டும்.

ஒரு வருட பிரம்புகளை ஒரு போதும் கத்தரித்து சீர் செய்யக் கூடாது ஏனென்றால் அது அடுத்த வருடத்தின் பூ மொட்டுகளை நீக்கி விடும்.

செடியின் ஒட்டு மொத்த உயரம் அல்லது அகலத்தை குறைப்பதற்கு பூத்து முடிந்த பிறகு உடனடியாக புதர்களையும் சிறிதளவு சீரமைக்க வேண்டும்.

பொதுவாக, நவீன கலப்பினங்களைக் காட்டிலும் பழைய தோட்ட ரோஜாக்களின் சீரமைப்புத் தேவைகள் குறைந்த உடலுழைப்பில் எளிதாக முடியக் கூடியவை.

ஹைப்ரிட் டீஸ், ப்லோரிபண்டாஸ், க்ரேண்டிப்லோராஸ், நவீன மினியேச்சர்கள், மற்றும் இங்கிலீஷ் ரோஜாக்கள் உள்ளடக்கிய நவீன கலப்பினங்கள், எப்போதும் பெரும்பாலும் சீன ரோஜாக்கள் ஆர்.சினென்சிஸ் அடங்கிய ஒரு சிக்கலான மரபணு பின்புலம் கொண்டவை.

வளரும் பருவத்தில் எந்தப் புதிய தாவர வளர்ச்சியிலும் தொடர்ந்து பூக்கின்ற ஈரப்பதம் கொண்ட உப வெப்ப மண்டலப் பகுதிகளில் இருந்து வரும் சீன ரோஜாக்கள், எப்போதும் வளர்கின்ற, எப்போதும் பூக்கின்ற ரோஜாக்கள்.

இவற்றின் நவீன கலப்பின சந்ததியினர் இதே போன்ற குணங்களை வெளிப்படுத்துகின்றன. பழைய தோட்ட ரோஜாக்கள் போலன்றி, நவீன கலப்பினங்கள் வளரும் காலத்தில் உருவாகும் எந்தப் புதிய பிரம்புகள் மீதும் தொடர்ச்சியாகப் பூக்கின்றன(உறைபனியால் நிறுத்தப்படும் வரை).

ஆதலால், செடியின் சக்தியை புது வளர்ச்சி, புதிய பூக்கள் உண்டாக்கத் திருப்பி விடும் விதமாக, பூத்து ஓய்ந்து போன தண்டுகளை நீக்கி, அவற்றைக் கத்தரித்து சீரமைப்பது தேவை.

கூடுதலாக, குளிர் பிரதேசங்களில் நடப்பட்ட நவீன கலப்பினங்கள் எல்லாவற்றிற்கும் வசந்த காலத்தின் துவக்கத்தில் கட்டாயமாக ஒரு "கடுமையான" (எல்லா பிரம்புகளையும் உயரத்தில் 8" லிருந்து 12" க்குள்ளாக குறைக்கும்) வருடாந்திர சீரமைப்பு தேவைப்படுகிறது. இவற்றின் சிக்கலான சீன பின்புலம் காரணமாய், நவீன கலப்பினங்கள் ஐரோப்பிய பழைய தோட்ட ரோஜாக்கள் போன்று குளிர் தாங்குவதில்லை மற்றும் குளிர் காலத்தின் குறைந்த தட்ப வெப்ப நிலை பெரும்பாலும் வெட்ட வெளியில் இருக்கும் தண்டுகளை சக்கையாக்கி விடுகின்றன அல்லது கொன்று விடுகின்றன.

வசந்த காலத்தில், கத்தரித்து சீர் செய்யப் படாமல் விடப்படும் போது, சேதம் அடைந்த இந்த பிரம்புகள் புதரின் வேர்ப் பகுதி வரை சென்று இறக்கின்றன, இதனால், செடிகள் பலவீனமடைந்த, சிதைந்த தோற்றம் கொள்கின்றன.

ஹைப்ரிட் டீஸ், ப்லோரிபண்டாஸ் போன்றவற்றின் இந்த வருடாந்திர "கடுமையான" சீரமைப்பு பொதுவாக வசந்த காலத்தின் துவக்கத்தில் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான தோட்டக்காரர்கள் இதை போர்சித்தியா புதர்களின் பூத்தலுடன் பொருந்தும் நேரத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.

வளரும் மொட்டுகளிலிருந்து 1/2" உயரத்திற்கு மேலே பிரம்புகள் வெட்டப்பட வேண்டும்.(பிரம்பின் மீது உள்ள வளர்ந்த இலையின் முனையை வைத்து அடையாளம் காணப் படும்).

பழைய தொட்ட ரோஜாக்கள் மற்றும் நவீன கலப்பினங்கள் இரண்டிலிருந்தும் எந்த ஒரு பலவீனமான, சிதைந்து போன அல்லது நோய் பீடித்த பகுதியும் வருடத்தின் எந்த நேரமாக இருந்தாலும், முழுமையாக வெட்டி நீக்கப்பட வேண்டும்.

எந்த ரோஜாவுக்கும் எந்த சீரமைப்பும் முளைத்து வரும் மொட்டுக்கு மேலே நாற்பத்து ஐந்து டிக்ரீ கோணத்தில் வெட்டு விழும் வண்ணம் செய்யப்பட வேண்டும்.

இது சீரமைக்கப்பட்ட தண்டின் தழும்பு விரைவாக ஆற உதவியாக இருக்கிறது, மற்றும் இது வெட்டு விழுந்த இடத்தின் மீது, நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய ஈரம் சேர்வதை குறைக்கிறது.

பொதுவான ரோஜா சீரமைப்புக்கு (அலங்கார வேலைகளுக்காக பூ வெட்டுதல் உட்பட), விட்டம் 1/2" அல்லது இதற்குக் குறைவாக உள்ள எந்த வளர்ச்சியையும் வெட்ட கூர்மையான பாக்கு வெட்டி போன்ற கத்தரிக்கோல் (கையில் பிடிக்கக் கூடிய, அரிவாள் போன்று தட்டையான வெட்டும் பாகத்துடன்) பயன்படுத்தப் பட வேண்டும்.

1/2" க்கு மேற்பட்ட தடிமன் கொண்ட பிரம்புகளுக்கு, பொதுவாக, கழி அறுப்பான் அல்லது ஒரு சிறிய கை ரம்பம் பலன் தரக்கூடியவை. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பாக்கு வெட்டி போன்ற கத்தரிக்கோல் சேதமடையலாம் அல்லது உடைந்து போகலாம்.

களை எடுத்தல்

தொகு

"களை எடுத்தல்" என்பது பூக்கும் காலத்தில் ஓய்ந்து, காய்ந்து, நிறமிழந்து நைந்து போன பூக்களை ரோஜா புதர்களிலிருந்து கைகளால் நீக்குகிற எளிய செயல்.

களை எடுப்பதன் நோக்கம் செடியை அது தனது ஆற்றல் மற்றும் செயல் திறன்களை, பழ உற்பத்தியில் அல்லாது, புதிய கிளைகள் மற்றும் பூக்கள் உருவாக்குவதில் ஊக்குவிப்பது. அழகுணர்ச்சி நோக்கங்களுக்காக, காய்ந்து போன பூக்கள் பார்வைக்கு அசிங்கமாக தோன்றுவதால், களை எடுத்தல் நடத்தப் படலாம்.

ரோஜாக்கள் களை எடுத்தலுக்கு சிறப்பான முறையில் பலன் தரக் கூடியவை.

பூவின் பீடத்தோடு மட்டும் நிற்காமல் தண்டின் முதல் ஐந்து இலைக் கொத்தோடு களை எடுத்தல் செய்யப்பட வேண்டும்.

இது புதுக் கிளைகள் உருவாவதையும் பூ உற்பத்தியையும் ஊக்கப்படுத்துகிறது.

களை எடுத்தல் ரோஜாக்களின் வேறுபட்ட சர்ந்தினங்களில் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக பூக்கும் சர்ந்தினங்களில், அது பழைய தோட்ட ரோஜக்களோ அல்லது அதி நவீன கலப்பின சார்ந்தினங்களோ, களை எடுத்தல் செடியை புதிய கிளைகள், இலைகள் மற்றும் பூக்கள் ஐத் தொடர்ந்து உருவாக்க உதவுகிறது.

களை எடுத்தல் "ஒருமுறை-பூக்கும்" சார்ந்தினங்களில் (ஒவ்வொரு பருவத்திலும் ஒரு முறையே பூக்கும்), அடுத்த பூக்கும் பருவம் வரை புதுப் பூக்கள் உருவாகப்போவதில்லை என்றாலும் செடி புதிதான பச்சை வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விளைவை செய்கிறது.

ரோஜா தோட்டக்காரர்கள் பலரையும் பொறுத்த மட்டில், ரோஜாச் செடியின் வளர்ச்சியைப் புதுப்பிக்கவும், ரோஜாச் செடிகளை வலிமையாக, துடிப்புடன், பயனுள்ளதாக வைத்திருக்கவும், களை எடுத்தல் பயன் படுகிறது.

நல்ல இடுப்புகளை உருவாக்கும் ரோசா க்லௌக்கா அல்லது ரோசா மொயேசி போன்ற தாவர ரோஜாக்களுக்கு களை எடுத்தல் கூடாது.

வரலாறு

தொகு

ரோஜா அதன் அழகுக்காக எப்போதுமே மதிக்கப்பட்டு வந்திருக்கிறது மற்றும் குறியீடு ரீதியாக அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

பழங்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகள் என்று சொல்லப்படுகிற ஆபிரோடைட் மற்றும் வீனஸ் இன் அடையாளம் என்று கருதினார்கள். ரோம் நகரத்தில் ரகசிய அல்லது அந்தரங்கமான விஷயங்களின் விவாதம் நடக்கும் அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்படும்.

ஸப் ரோசா , அல்லது "ரோஜாவின் கீழ்" என்கிற சொற்றொடர் -சப் ரோசா இதன் பொருள் ஒரு ரகசியத்தை பாதுகாப்பாக வைத்திருத்தல் - இந்தப் பழங்கால ரோமானிய பழக்கத்திலிருந்தே உண்டானது.

ஆரம்ப காலக் கிருத்துவர்கள் ரோஜாவின் ஐந்து இதழ்களை கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் என்று கருதினார்கள்.

இந்த விளக்கத்திற்குப் பிறகும் கூட, ரோமானியர்களின் அதீதப் போக்கு மற்றும் வேற்று மதத்தவரின் சமயச் சடங்குகளில் இதற்கு இருந்த தொடர்பு காரணமாக அவர்களின் தலைவர்கள் அதை ஏற்றுப் பின்பற்றத் தயங்கினார்கள்.

சிவப்பு ரோஜா கிருத்துவ உயிர்த்தியாகிகளின் ரத்தத்தின் குறியீடு என்பதாக இறுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

பிறகு கன்னி மேரியுடனும் ரோஜாக்கள் சம்பந்தப் படுத்தப் பட்டன.

1800 களில் ஐரோப்பாவில் சீனாவிலிருந்து தொடர்ந்து பூக்கும் ரோஜாக்கள் அறிமுகத்துடன் ரோஜா வேளாண்மை தானாகவே ஆரம்பமாயிற்று.

தற்சமயம் பூவின் உருவம், வடிவம், நறுமணம் மற்றும் முள் இல்லாத வகைக்காகவும் கூட ரோஜாக்களின் ஆயிரக்கணக்கான சார்ந்தினங்கள் உருவாக்கப்படுகின்றன.

 
ரெனோயர் இன் முட்டைக்கோஸ் ரோஜாக்கள் ஓவியம், ஒரு பூ ஜாடியில் ரோஜாக்கள்

ரோஜாக்கள் ஓவியர்களால் அடிக்கடி வரையப்படுகின்றன. லக்ஸம்பொர்க் இல் பிறந்த பெல்ஜிய நாட்டு ஓவியர் பியார்ரே ஜோஸப் ரிடௌடே நல்ல விபரங்கள் அடங்கிய ரோஜா ஓவியங்கள் சிலவற்றைப் படைத்தார்.

ஹென்றி பான்டின் லடௌர் என்பவர், அசையாத வாழ்வை, குறிப்பாக ரோஜாக்களையும் சேர்த்த பூக்களை நிறைய அளவில் வரைந்த ஓவியர்.'பான்டின் லடௌர்' ரோஜா அந்த ஓவியரின் பெயரிடப் பட்டது தான்.

க்லௌட் மொனெட், பால் செசநே மற்றும் பியர்ரே ஆகஸ்டே ரெனைர் போன்ற மற்ற இம்ப்ரஷனிஸ்ட் ஓவியர்களின் படைப்புகளில் ரோஜாக்களின் ஓவியங்கள் உள்ளன.

வெகுஜன கலாச்சாரம்

தொகு
மேலும் தகவல்களுக்கு: Rose (symbolism)
 
சிவப்பு ரோஜாக்கள்
 
காடலோனியா வில் செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று ரோஜாக்கள் விற்றல்

ரோஜாக்கள் காதல் மற்றும் அழகின் பழங்காலக் குறியீடு. ரோஜாக்கள் ஐசிஸ் மற்றும் அபிரோடைட் போன்ற எண்ணற்ற தேவதைகளுக்குப் புனிதமானது மற்றும் இது கன்னி மேரி யின் குறியீடாகவும் பயன் படுத்தப்படுகிறது.

'ரோஸ்' என்பது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு என்று பல மொழிகளில் (ரொமான்ஸ் மொழிகள், கிரேக்க,போலிஷ் மொழிகள் போன்ற) பொருள் படும்.

ரோஜா என்பது இங்கிலாந்து மற்றும் [6] யின் தேசிய மலர். மேலும் இங்கிலாந்து ரக்பி மற்றும் ரக்பி புட்பால் யூனியன் களின் குறியீடு ஆகும்.

அது இங்கிலாந்து இன் யார்க் ஷைர் மற்றும் லங்காஷைர் (முறையே வெள்ளை ரோஜா மற்றும் சிவப்பு ரோஜா), கனடாவின் ஆல்பெர்டா (காட்டு ரோஜா) மற்றும் பாகிஸ்தான் இன் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் - இன் பிரதேச பூ.

இது யு எஸ் யின் நான்கு மாகாணங்களின் மாகாண மலர்: அயோவா மற்றும் நார்த் டக்கொடா ("ஆர்.அர்கான்சனா"), ஜார்ஜியா (ஆர்.லேவி கேடா ), மற்றும் [7] (ரோசா ) பொதுவாக). போர்ட் லேன்ட் ம், ஓரேகான் ம் "ரோஜாக்களின் நகரம்" என்பதை தமது செல்லப் பெயர்களாகக் கருதுகின்றன, மற்றும் ஒரு வருடாந்திர ரோஜா திருவிழாவையும் நடத்துகின்றன.

ரோஜா சில சமயங்களில் ரோஜா ஜன்னல்களுக்கான வரை படத்தின் அடிப்படை, இம்மாதிரியான ஜன்னல்கள் ஐந்து அல்லது பத்து தனி பிரிவுகளை அல்லது இவற்றின் பெருக்குத்தொகையைக் கொண்டிருக்கும் (ரோஜாவின் ஐந்து இதழ்கள் மற்றும் ஐந்து புற இதழ்கள்); எவ்வாறாயினும் பெரும்பான்மையான கோத்திக் ரோஜா ஜன்னல்கள் மிக மிக விஸ்தாரமானவை மற்றும் உண்மையில் சக்கரம் மற்றும் வேறு சில குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடும்.

ஒரு சிவப்பு ரோஜா (பெரும்பாலும் ஒரு கையில் ஏந்தப்பட்ட) பொதுவுடமைக் கொள்கை அல்லது பொதுவுடமை ஜனநாயகத்தின் ஒரு குறியீடு: பிரித்தானிய, ஐரிஷ், பிரெஞ்சு,ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், நார்வேஜியன், டேனிஷ், ஸ்வீடிஷ், பின்னிஷ், ப்ரேசிலியன், டட்ச் மற்றும் இதர ஐரோப்பிய தொழிலாளர், பொதுவுடமை அல்லது பொதுவுடமை ஜனநாயக கட்சிகளின் ஒரு குறியீடாக பயன் படுத்தப் படுகிறது.

1968 மே இல் பாரிசில் நடந்த தெருப் போராட்டங்களில் அணிவகுத்துச் சென்றவர்களால் சிவப்பு ரோஜா ஒரு அடையாளப் பதக்கமாக அணிந்து சென்ற போது இது ஆரம்பிக்கப்பட்டது. ஒயிட் ரோஸ் என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் இருந்த ஒரு அஹிம்சையான எதிர்ப்புக் குழு.

காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் சிவப்பு ரோஜாக்களின் ஒரு மலர்க்கொத்து பயன் படுத்தப்படுகிறது. அது பல நாடுகளில் வேலென்டின் தின பரிசாக பயன்படுத்தப்படுகிறது. செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கேடலோனியாவில் மக்கள், குறிப்பாக காதலர்கள் தம்மிடையே, ஆழ்ந்த சிவப்பு ரோஜாக்களைப் பரிசாக அளிக்கிறார்கள்.

ஐரோப்பாவின் கறுப்பின கன்னி மேரிகளில் ஒருவரான, வர்ஜின் ஆப் மொன்ட்செர்ரட் ஐப் பற்றிய விரோலை என்கிற ஒரு துதிப் பாடல், இந்த வரிகளுடன் துவங்குகிறது: "ரோசா டே'ஆப்ரில்,மோரேனா டே ல செர்ரா..."

(ஏப்ரல் ரோஜா, மலைச் சங்கிலியின் அந்தி ஒளிச் சீமாட்டி...)

ஆகையால் இந்த கன்னி சில சமயங்களில் "ரோசா டே'ஏப்ரில்" என்று அறியப் படுகிறார். இவ்வாறாக சிவப்பு ரோஜா அரசு அங்கீகாரம் இல்லாத [8] வின் குறியீடு என்று பரவலாக ஏற்கப் படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • ஒரு பெயரில் என்ன இருக்கிறது?
  • 'நாம் ரோஜா என்று அழைக்கின்ற ஒன்றை/வேறெந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் அதே இனிமையான மணம் தானே . - வில்லியம் ஷேக்ஸ்பியர், ரோமியோ அண்ட் ஜுலியட் ஆக்ட் II, சீன்||
  • உன்னால் முடியும் போதே ரோஜா மொட்டுகளை சேகரி,/பழைய நேரம் இன்னும் பறந்து கொண்டு தானிருக்கிறது - ராபர்ட் ஹெர்ரிக், டு தி வர்ஜின்ஸ், டு மேக் மச் ஆப் டைம்
  • ஓ,என்னுடைய காதல் சிவந்த,சிவந்த ரோஜா போன்றது/அது புதிதாய் ஜுனில் பிறந்தது - ராபர்ட் பர்ன்ஸ், எ ரெட்,ரெட் ரோஸ்
  • 'தகவல் இயற்கையாக என்னிடமிருந்து பொங்கி வழிகிறது, விலை மதிப்பில்லாத ரோஜாவின் அத்தர் போல, நீர் நாயிலிருந்து.

மார்க் ட்வைன், ரபிங் இட்

  • இதயங்கள் பசித்திருக்கின்றன உடல்களும்; எங்களுக்கு ரொட்டி கொடுங்கள், ஆனால் எங்களுக்கு ரோஜாக்கள் கொடுங்கள். - ஜேம்ஸ் ஓப்பேன்ஹைம், "ப்ரட் அண்ட் ரோசஸ்"
  • ரோஜா என்பது ரோஜா என்பது ரோஜா என்பது ரோஜா - ஜெர்ட்ரூட் ஸ்டெயின், சேக்ரட் எமிலி (1913), ஜியாக்ரபி அண்ட் ப்ளெய்ஸ் இல் இணைக்கப்பட்டுள்ள ஒரு கவிதை.
  • நன்னம்பிக்கை உள்ளவன் ரோஜாவைப் பார்க்கிறான் அதன் முட்களை அல்ல; நம்பிக்கை அற்றவன் முட்களையே உற்று நோக்குகிறான், ரோஜாக்கள் இருப்பதையே மறந்தவனாக. - கலீல் கிப்ரான்

நறுமணப் பொருள்

தொகு

ரோஜா நறு மணப் பொருட்கள் ரோஜா அத்தர் அல்லது ரோஜா இதழ்களைப் பிழிந்து நீராவி முறையில் வடிகட்டி பெறப்படும் எளிதில் ஆவியாகக் கூடிய அத்தியாவசியமான எண்ணெய்களின் கலவையான ரோஜா எண்ணெய் இலிருந்து தயாரிக்கப் படுகின்றன.

இந்தத் தொழில் நுட்பம் பாரசீகத்தில் உதித்தது (ரோஜா என்கிற சொல்லே பாரசீக மொழியிலிருந்து வந்தது) பிறகு அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் பரவியது, ஆனால் இந்நாட்களில் சுமார் 70% லிருந்து 80% உற்பத்தி பல்கேரியாவில் கசன்லுக் குக்கு அருகில் ரோஸ் பள்ளத்தாக்கிலும், சிறிதளவு உற்பத்தி ஈரானின் கம்சார் மற்றும் ஜெர்மனி[மேற்கோள் தேவை]யிலும் நடைபெறுகிறது. மெக்காவிலுள்ள காபா வருடாவருடம் கம்சார் இலிருந்து வரும் ஈரானிய ரோஜா நீர் கொண்டு கழுவப் படுகிறது.

பல்கேரியா, ஈரான் மற்றும் ஜெர்மனியில், டமாஸ்க் ரோஜாக்கள் (ரோசா டமாஸ்கேனா 'ட்ட்ரைஜிண்டிபேட்டாலா') பயன் படுத்தப் படுகின்றன.

பிரெஞ்சு ரோஜா எண்ணெய் தொழிலில் ரோசா சென்ட்டி போலியா பயன்படுத்தப்படுகிறது.

வெளிர் மஞ்சள் அல்லது மஞ்சள்-சாம்பல் நிறங்களிலான இந்த எண்ணெய், தண்ணீர் கலந்த படைப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமாக 'ரோஸ் ஆப்சொல்யுட்' எண்ணெய் என்று சில சமயங்களில் அழைக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் எடை, பூக்களின் எடையில் சுமார் மூவாயிரத்தில் ஒரு பங்கிலிருந்து ஆறாயிரத்தில் ஒரு பங்கு வரை. உதாரணமாக, ஒரு கிராம் எண்ணெய் தயாரிக்க சுமார் இரண்டாயிரம் பூக்கள் தேவைப் படுகின்றன.

ரோஜா அத்தரின் முக்கியமான உட்பொருட்கள் வாசனை மிகுந்த ஆல்கஹால்ஸ்ஜெரானியோல் மற்றும் சிட்ரோ நெல்லோல்; மற்றும் ரோஜா கற்பூரம், ஒரு வாசனையற்ற பேரபின் என்கிற மெழுகு வகை. -டமாஸ்செனோன் ம் வாசனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்.

 
ஜெரானியோல் (C10H180)

காட்சிக்கூடம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. http://www.britannica.com/EBchecked/topic/509710/rose
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  3. "ரோசா சினென்சிஸ்". Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  4. சீன ரோஜாக்கள். ரோஜா சேகரிப்பு
  5. http://www.gardenmob.com/blog1/2006/07/13/the-great-roses-queen-elizabeth/ The Great Roses: Queen Elizabeth
  6. "National Flower of the United States". பார்க்கப்பட்ட நாள் 2008-02-04.
  7. "New York State Flower". பார்க்கப்பட்ட நாள் 2007-10-01.
  8. [1]Escolania de Montserrat - El Virolai

புற இணைப்புகள்

தொகு

  பொதுவகத்தில் Rosa பற்றிய ஊடகங்கள்

  •   விக்கியினங்களில் Rosa பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசா&oldid=3924696" இலிருந்து மீள்விக்கப்பட்டது