மைனா
பாலி மைனா (Leucopsar rothschildi)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
ஸ்ட்டேண்டிடே

மைனா ஸ்டார்லிங் (ஸ்ட்டேண்டிடே) குடும்பத்து பறவையாகும். பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியாவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன.

உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டி வாழுகின்றன. [1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனா&oldid=3903648" இலிருந்து மீள்விக்கப்பட்டது