தோட்டக்கலை
தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் நறுமணப் பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வுகொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.
சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு வரை அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம். சிலவகைச் சிறப்புத் தோட்டங்களில் ஒரேவகைத் தாவரம் மட்டுமே அமையும். இன்னௌஞ் சிலவற்ரில் பலவகைத் தாவரங்களமிடையிடையில் கலந்து வளர்க்கப்படலாம். தோட்ட வளர்ப்பு கடின உழப்பினை வேண்டுகிறது, அழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது ஈவை பண்ணைகள், காடுகளைவிட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.
தோட்டக்கலை வரலாறு
தொகுதொல்பழங்காலம்
தொகுஉலகின் மிகப் பழைய தோட்ட வடிவம் காட்டுத் தோட்டமாகும். இது காடுசார்ந்த உணவு விலைச்சல் களாமாகவும் விளங்கியது.[1] காட்டுத் தோட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஆற்றோரமாக அமைந்த காடுகளிலும் பருவக்காற்று மழை வட்டாரங்களின் ஈரமான மலைச் சாரல்களிலும் தோன்றியது. மேலும் அவற்ருக்கு அருகே இருந்த பயன்மரங்களும் கொடிமுந்திரி தாவர இனங்களும் இனங்கண்டுப் பேணப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தோட்டத்தின் வேண்டாத் தாவர இனங்கள் நீக்கப்பட்டன. பிறகு, அயல்தாவரங்களும் தெரிவுசெய்து தோட்டத்தில் வளர்க்கப்பட்டன.[2]
முதல் நாகரிகங்கள் தோன்றியதும், செல்வந்தர்கள் அழகுக்ககத் தோட்டங்களை வளர்க்கலாயினர். பண்டைய எகுபதியின் கல்லறைத் தோட்ட ஓவியங்களில் கிமு 1500 ஆண்டளவில் உருவாகிய புதிய அரசாட்சியில் தோட்டமும் நிலக்கிடப்பும் வடிவமைத்ததற்கன சான்றுகள் கிடைத்துள்ளன; அவை தாமரை மலர்ந்த சிறுகுளங்களையும் பனைமர வரிசையையும் சீரொருமையுடன் திகழும் வேலங்கன்றுகளையும் காட்டுகின்றன. பண்டையத் தோட்ட வடிவமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு பாபிலோனியத் தொங்கும் தோட்டமாகும். இது பண்டையல் ஏழு வியப்புகளில் ஒன்றாகும். பண்டைய உரோம் நகரில் பல பத்து தோட்டங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
பண்டைய எகுபதி நாட்டுச் செல்வந்தர்கள் நிழலுக்காக தோட்டங்களை வளர்த்துள்ளனர். எகுபதி நாட்டு மக்கள் மரங்களையும் தோட்டங்களையும் கடவுளரோடு தொடர்புபடுத்தினர். அவர்களின் தெய்வங்கள் தோட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டதாகக் கருதினர். பண்டைய எகுபதியின் தோட்டச் சுவர் ஓரங்களில் மரங்களை வரிசைகளில் நட்டு வளர்த்துள்ளனர். இவற்றில் பரவலாகப் பேரீச்ச மரங்களும் ஊசியிலை மரங்களும் வில்லோ மரங்களும் கொட்டைதரும் மரங்களும் அமைகின்றன. தோட்டங்கள் உயர் சமூக, பொருளியல் செழிப்பின் அறிகுறிகள் ஆகின. இவர்கள் வைன் தோட்டங்களையும் செழிப்பின் அடையாளங்களாக வளர்த்தனர். எகுபதியத் தோட்டங்களில் உராசா, பாப்பி, டெய்சி, ஐரிசு பூக்களும் மலர்ந்து காணப்படும்.
தோட்ட வகைகள்
தொகுவீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழவுள்ள நிலப்பகுதியிலேயே அமைவது வழக்கமெனினும், வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பலகணிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு.
"உள்ளகத் தோட்டக்கலை" என்பது கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது ஆகும். வீட்டுத் தாவரங்கள் இதற்கென அமைக்கப்பட்ட காப்பகங்கள், பசுமைக்குடில் போன்றவற்றுள்ளும் வளர்க்கப்படுவதுண்டு.
"நீர்த் தோட்டக்கலை" என்பது சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதாகும் .
வீட்டுத்தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை அறிவு பயன்படுகிறது.
தோட்டக்கலை நோக்கங்கள்
தொகுதாவரங்கள் பயன்பாடு சார்ந்த, பயன்பாடு சாராத பல்வேறு தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு:
பயன்பாடு சார்ந்தவை
- உணவு
- கால்நடைத் தீவனம்
- மருத்துவம்
- சாயங்கள்
- துணிவகைகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றிற்கான மூலப் பொருள்கள்.
பயன்பாடு சாராதவை
- அழகு
- இயற்கையுடனான இசைவு
- பொழுதுபோக்கு
மரக்கறி வகைகள், பழ வகைகள், மூலிகைகள், நிழல் மரங்கள், புல், பல்லாண்டுத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், பூச்செடிகள் போன்ற பலவகைத் தாவரங்களும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. பல தோட்டங்களில், இவற்றில் பலவற்றை ஒருங்கே காணக்கூடும்.
பழ மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலே வளர்க்கப்படுவது வழக்கமெனினும் பேரளவில் வளர்க்கும்போது தோப்புகளிலே வளர்ப்பார்கள்.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ Douglas John McConnell (2003). The Forest Farms of Kandy: And Other Gardens of Complete Design. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754609582.
- ↑ Douglas John McConnell (1992). The forest-garden farms of Kandy, Sri Lanka. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789251028988.