பல்லாண்டுத் தாவரம்

பல்லாண்டுத் தாவரம் (ஒலிப்பு) அல்லது பல பருவத் தாவரம் (Perennial plant) எனப்படுவது இரண்டாண்டுகளுக்கு மேலாக வாழும் ஒரு தாவரமாகும். இத்தாவரங்கள், ஒவ்வொரு பருவ இறுதியிலும் எஞ்சியப் பகுதியிலிருந்து புதிதாகத் தழைத்து வளர்ந்து பல ஆண்டுகள் தொடர்ந்து வாழக்கூடிய தன்மை கொண்டவை. மரங்களும், புதர்களும் மட்டுமல்லாது, பூச்செடிகளும், புல்பூண்டுகளும் பல்லாண்டுத் தாவர வகையில் அடங்கும்.

உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கு ஒரு பல்லாண்டுத் தாவரமாகும்.

பல்லாண்டுத் தாவரங்களில் இரண்டு வகைகள் உள்ளன. வசந்தத்திலும் கோடையிலும் வளர்ந்து மலர்ந்து, இலையுதிர், பனிக்காலங்களில் மாண்டு, பின்னர் அடுத்த வசந்தத்தில் வேர் போன்ற எஞ்சிய பகுதிகளிலிருந்து உயிர்ப்பித்துத் திரும்பும் பல்லாண்டுத் தாவரங்கள் மூலிகை பல்லாண்டு தாவரங்கள் (herbaceous perennials) ஆகும். உருளைக் கிழங்கு, புதினா, பன்னம் போன்றவை இவ்வகையறா.

வாழை மரம்
வாழை மரமும் ஒரு பல்லாண்டு தாவரமாகும். வாழைத்தார் தள்ளிய மரத்திலிருந்து கன்றுகள் வளர்ந்து மரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

மரத்தாலான கடினமான தண்டைக் கொண்ட தாவரங்கள் இரண்டாம் வகை. இத்தாவரங்கள் குளிரையும் கோடையையும் தாங்கக்கூடிய தண்டுகளைப் பெற்றுள்ளன. இவற்றின் தண்டுகளைப் பெரும்பாலும் மரப்பட்டைகள் மூடியிருக்கும். இவற்றில் சில, குளிர்காலத்தின்போது இலைகளை உதிர்ந்துவிடுகின்றன. வாழை, ஆப்பிள் மரம், தேவதாரு போன்ற தாவரங்கள் இவ்வகையைச் சேந்தவையாகும்.

மேலும் காண்க தொகு

  • ஆண்டுத் தாவரம் -- தன் வாழ்க்கைச் சுற்றை ஒரு வளர்ச்சிப் பருவத்தில் முடித்துக்கொண்டு மாய்ந்து போகும் தாவரமாகும்
  • இருபருவத் தாவரம் -- தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் ஒரு தாவரமாகும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாண்டுத்_தாவரம்&oldid=3736120" இலிருந்து மீள்விக்கப்பட்டது