உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடீ
துணைவகுப்பு: ஆசிட்டெரிடீ (Asteridae)
வரிசை: சோலானேலெசு (Solanales)
குடும்பம்: உருளைக் கிழங்கு குடும்பம் (Solanaceae)
பேரினம்: சோலானம் (Solanum)
இனம்: சோ. டியூபரோசம்
'S. tuberosum'
இருசொற் பெயரீடு
சோலானம் டியூபரோசம்
Solanum tuberosum

லின்னேயசு

உருளைக் கிழங்கு (potato) சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது[1] அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு[2] ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது.[3] ஆண்டீய மலைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன.[4].

முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்தது[2]சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும்[3] இந்தியா இரண்டாம்[5] இடத்திலும் உள்ளன.

பண்புகள் தொகு

உருளையானது பல்லாண்டு வாழ்கின்ற (Perennial) பூண்டுத் (Herbaceous) தாவரமாகும். இவற்றின் தரைகீழ் கிளைகளின் பருத்த நுனிப்பகுதி கிழங்கு ஆகும். [6]

நஞ்சாதல் தொகு

நிறமித்தல் தொகு

சிலவகை உருளைக் கிழங்குகள் அதன் தங்க, நீல, சிவப்பு நிறச் சாயங்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றன.

தீங்குயிரிகள் தொகு

வெட்டுப்புழுக்கள் தொகு

இது உருளைக்கிழங்குப் பயிரில் 5 முதல் 10 சதம் வரை சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றும். இப்புழு கிழங்குகளில் துளைபோட்டு மாவுப் பகுதியை உண்கிறது. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் கிழங்கு அழுகிவிடும்.

கட்டுப்பாட்டு முறைகள் தொகு

  • தரிசு காலங்களில் மண்ணை நன்கு கிளறி, புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்.
  • தாய்ப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்து கவர்ந்தழிக்கவேண்டும்.
  • சுழல் தெளிப்புப் பாசனம் உள்ள இடங்களில் தெளிப்பானைக் காலை நேரங்களில் இயங்கச் செய்யவேண்டும். நீரின் வேகத்தால் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு பறவைகளுக்கு இரையாகிவிடும்.
  • குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளின் தண்டுப்பகுதியில் ஊற்றவேண்டும்.

அசுவினிப்பூக்கள் தொகு

கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழுக்கள் தொகு

உருளைக்கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.

உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர் வகைகளனா கோதுமை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிடவேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான முட்டைக்கோசு, பூக்கோசு, கேரட், முள்ளங்கி, அவரை வகைகள் முதலிய பயிர்களைப் பயிரிட்டு பயிர் சுழற்சி செய்யவேண்டும்.

  • விதைக்கிழங்கை விதைப்பதற்கு முன்பு கார்போபியூரான் கரைசலில் நனைத்து விதைக்கவேண்டும்.
  • விதைக்கிழங்குகளை விதைப்பதற்கு முன் சுத்தம் செய்யவேண்டும்.
  • நூற்புழுக்கள் நிறைந்த மண்ணிலுள்ள விதைக்கிழங்குகளை விதைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
  • நூற்புழுக் குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களான குப்ரி சொர்ணா போன்ற இரகங்களைப் பயிரிடவேண்டும்.

நோய்கள் தொகு

உருளைக்கிழங்கில் முன் இலைக்கருகல், பின் இலைக்கருகல், பழுப்பு நிற அழுகல், உருளைக்கிழங்கு வைரஸ் மற்றும் இலைச்சுருள் வைரஸ் போன்றவை முக்கியமான நோய்களாகும்.

உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி தொகு

புதிய கிழங்குகளை நடவு செய்யும் போது நன்கு ஆழமாக நடுதல் வேண்டும். மேலும் தாய் அந்துப்பூச்சிகளை இனக்கவர்ச்சி கொண்டு கவர்ந்து அழிக்கலாம். இலையில் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்க வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் (அ) குயினால்பாஸ் 2 மில்லியினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நடவுக்கு பயன்படுத்தப்படும் விதைக் கிழங்கினைக குயினால்பாஸ் ஒரு கிலோவினை 100 கிலோ கிழங்கு என்ற அளவில் கலந்து நடவு செய்யவேண்டும்.

முன் இலைக்கருகல் (பூசண நோய்) தொகு

கிழங்கை நடவு செய்த பின் மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குப் பின் இந்நோய் தொன்றுகிறது. இலைகளில் வெளிர் பழுப்பு நிறமடைய புள்ளிகள் தோன்றும். பின்பு இப்புள்ளிகளில் வட்டவடிவமான வளையங்கள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த பயிர்ச்சுழற்சி செய்வதோடு தோட்டத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நோய் தாக்கி காய்ந்து போன இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். நடவு செய்த 45,68 மற்றும் 75 வது நாட்களில் மான்கோசெப் அல்லது குளோரோதலோனின் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பின் இலைக்கருகல் தொகு

உருளைக்கிழங்கில் தோன்றக்கூடிய அனைத்து நோய்களிலும் மிக முக்கியமானது பின் இலைக்கருகல் நோயாகும். சிறிய பழுப்பு நிறமுடைய நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றுவது இந்நோயின் முதல் அறிகுறியாகும். மழையும் வெயிலிலும் மாறிமாறி இருக்கும்போது இப்புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி, இலைகள் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பூசணம் கிழங்குகளையும் தாக்குகின்றது. நோய் தாக்கப்பட்ட கிழங்கின் மூலம் இந்நோய் பரவுகிறது. எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்காத கிழங்கை நடவுசெய்யவேண்டும். தரையுடன் மூடிய படர் கிளைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கி கீழே விழுந்த இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். முன் இலைக்கருகலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மான்கோசெப் அல்லது குளோரோதலோனில் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தல் நீரில் கலந்து நடவு செய்த 45,68 மற்றும் 75வது நாட்களில் தெளிக்கவேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்பத் திற்ன கொண்ட குப்ரிஜோதி, குப்ரிமலர் மற்றும் குப்ரிதங்கம் ஆகிய இரகங்களைப் பயிரிடவேண்டும்.

பழுப்புநிற அழுகல் (பாக்டீரியா) நோய் தொகு

இளஞ்செடிகள் உடனடியாக வாடுவதும், இலைகள் பழுப்புநிறமடைந்து தளர்ச்சியுற்றுத் தொங்குவதும் இந்நோயின் அறிகுறிகளாகும். நோய் முற்றிய நிலையில் செடிகள் வாடிக் காய்ந்துவிடும். தண்டின் உட்பகுதியில் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட கிழங்கை வெட்டிப் பார்க்கும் போது கிழங்கின் ஓரத்தில் பழுப்பு நிறமுடைய வளையம் காணப்படும். இதனைத் தொடர்ந்து இக்கிழங்குகள் அழுகிவிடும். வடிகால் வசதி இல்லாத இடங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பயிர்சுழற்சியைக் கடைப்பிடிக்கவேண்டும். நோய் தாக்காத கிழங்கை நடவு செய்ய வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழித்துவிடவேண்டும்.

வைரஸ் நோய்கள் தொகு

மொசைக் நோய் தொகு

மொசைக் என்பது ஒரு வகையான வைரஸ் நோய் ஆகும். இந்நோயின் அறிகுறிகளாக இலையில் பச்சையத்திற்கு இடையே மஞ்சள் நிறக் கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத் திட்டுக்கள் காணப்படும். இதில் பாதிக்கப்பட்ட செடி மற்ற செடிகளுடன் உரசும் போது உருளைக்கிழங்கு வைரஸ் அசுவினி மூலம் பரவுகிறது.

இலைச்சுருள் நோய் தொகு

இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டுவிடும். பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி வெளரி நிறமாகத் தோன்றும். இந்த வைரசும் அசுவினி மூலம் பரவுகிறது.

வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்கு எடுத்து அதை நடவு செய்யவேண்டும். தேவையறிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அசுவினியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

உருளையின் உணவு வகைகள் தொகு

கலைப் பயன்பாடு தொகு

உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி தொகு

மண் மற்றும் தட்பவெப்பநிலை தொகு

உருளைக்கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் பூமியைத் தவிர்க்கவேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளரி மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 வரை ஒர் ஆண்டிற்கு 1200 முதல் 2000 மில்லி மீட்டர் வரை மழை பெறும் பகுதிகளில் இதனைப் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல் தொகு

நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்கவேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.

விதைத்தல் தொகு

எக்டருக்கு 3000-3500 கிலோ கிழங்குகள் விதைக்க வேண்டும்.உருளைக் கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பு முக்கியமாக கவனிக்கவேண்டும். புதிய கிழங்குகள் முளைக்காது, ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும். கிழங்கு களை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடிவிடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்தவேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவேண்டும்.

நீர் நிர்வாகம் தொகு

நடவுக்குப் பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொகு

ஓர் எக்டருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன் உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் எக்டருக்கு 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும். பிறகு விதைத்த 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவேண்டும். [7]

உற்பத்தி தொகு

முதல் பத்து உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் தொகு

Top Potato Producers
in 2011Ø
(million metric tons)
  சீனா 88.4
  இந்தியா 42.3
  உருசியா 32.7
  உக்ரைன் 24.2
  ஐக்கிய அமெரிக்கா 19.4
  செருமனி 11.8
  வங்காளதேசம் 8.3
  போலந்து 8.2
  பிரான்சு 8.0
  பெலருஸ் 7.7
World Total 374.4
Source:
UN Food & Agriculture Organisation
(FAO)
[2]

சேமிப்பு தொகு

மகசூல் தொகு

எக்டருக்கு 120 நாட்களில் 15-20 டன் கிழங்குகள். மகசூல் கிடைக்கும்.

வகைகள் தொகு

குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர் மற்றும் குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ், எப் எல் 2027 (FL 2027) [8]

மரபுத்தொழில் நுட்ப உருளைகள் தொகு

படத்தொகுப்பு தொகு

 
உருளைக்கிழங்கு வறுசீவல்

     

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Spooner, David M.; Karen McLean, Gavin Ramsay, Robbie Waugh, and Glenn J. Bryan (Oct 2005). "A single domestication for potato based on multilocus amplified fragment length polymorphism genotyping". Proceedings of the National Academy of Sciences of the United States of America 102 (41): 14694-14699. http://www.pnas.org/cgi/content/full/102/41/14694. பார்த்த நாள்: 2008-02-15. 
  2. 2.0 2.1 "History of Potatoes". The Potato Council, Oxford, UK. Archived from the original on 2009-06-03. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.
  3. 3.0 3.1 "China - World Potato Atlas". Archived from the original on 2008-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
  4. Theisen, K (2007-01-01). "World Potato Atlas: Peru - History and overview". International Potato Center. Archived from the original on 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.
  5. "India - World Potato Atlas - CIP-collab". Archived from the original on 2008-03-08. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
  6. "தாவரவியல் - உருளை" (PDF). Archived from the original (PDF) on 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2017.
  7. "உருளைக்கிழங்கு சாகுபடி". பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2017.
  8. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளைக்_கிழங்கு&oldid=3906446" இலிருந்து மீள்விக்கப்பட்டது