ஆண்டுத் தாவரம்

ஆண்டுத் தாவரம் (About this soundஒலிப்பு ) அல்லது ஓராண்டுத் தாவரம் (Annual plant) எனப்படுவது ஒற்றை வளர் பருவத்திலேயே முளைத்து, வளர்ந்து, பூத்து, விதை உண்டாக்கி, மடிந்து தன் வாழ்க்கைச் சுற்றை முடித்துக்கொள்ளும் ஒரு தாவரமாகும். பொதுவாக, ஆண்டுத் தாவரங்கள் கோடை ஆண்டுத் தாவரம், குளிர்கால ஆண்டுத் தாவரமென இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கோடை ஆண்டுத் தாவரம் வசந்தத்திலோ கோடைத் தொடக்கத்திலோ முளைத்து, அவ்வாண்டின் இலையுதிர் காலத்துக்குள்ளாகவே முதிர்ச்சியடைந்துவிடும். குளிர்கால ஆண்டுத் தாவரம் இலையுதிர்காலத்தில் முளைத்து, அடுத்த வசந்தத்திலோ கோடையிலோ முதிர்ச்சியடையும்.[1]

பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.

இத்தாவரங்கள் ஆண்டுத் தாவரங்களென அழைக்கப்பட்டாலும், இத்தாவரங்களின் வளர் பருவமும் அது நடைபெறும் காலமும் இடத்தையும் தாவர இனத்தையும் பொருத்தே அமைகிறது. நூல்கோல் கிழங்கு (Oilseed rapa) போன்ற சில ஆண்டுத் தாவரங்கள் ஒளிர் விளக்குகளின் கிழ் விதையிலிருந்து முளைத்து விதையாகத் திரும்புவதற்குச் சில வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இத்தாவரங்கள் தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கின்றன. நெல், சோளம், பருத்தி, தர்ப்பூசணி போன்றவை ஆண்டுத் தாவர எடுத்துக்காட்டுகளாகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Definitions of Botanical Terminology". http://www.illinoiswildflowers.info/files/line_drawings.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்_தாவரம்&oldid=3281366" இருந்து மீள்விக்கப்பட்டது