மூக்கு
உடற்கூற்றின்படி, மூக்கு (Nose) (ⓘ) என்பது, முதுகெலும்பிகளின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படையான சுவாசத்திற்காக நிகழும் செயல்முறையில் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பல விலங்குகளில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் காணப்படுகின்றன.[1]. இவை வெளிவளியில் உள்ள தூசு, துகள்கள் மூக்கு வழியாக நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும் மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், தொண்டை வழியாகச் சென்று சுவாசத் தொகுதியின் பிற பகுதிகளை அடைகின்றது.[2]
மூக்கு | |
---|---|
நாய்கள் மிகக் கூர்மையான மோப்பத் திறன் அமைந்த மூக்குகளைப் பெற்றுள்ளன | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Nasus |
MeSH | D009666 |
TA98 | A06.1.01.001 A01.1.00.009 |
TA2 | 117 |
உடற்கூற்றியல் |
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து உதடுகள் மற்றும் வாயின் மேல், முகத்தின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறது. மூக்கு எலும்புகள், மேல் மற்றும் கீழ் பக்கவாட்டு நாசிக் குருத்தெலும்புகள், மூக்குத்துளைகளைப் பிரிக்கும் நடுச்சுவர் குருத்தெலும்பு உள்ளிட்ட எலும்புகள் மூலம் மூக்கின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. பல பாலூட்டிகளில் இது நீண்டு முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும். உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றன.
மூக்கின் அமைப்பு
தொகுசுவாச மண்டலம்
தொகுஉடல் செல்களுக்குத் தேவையான சக்தியை தோற்றுவித்தல் சுவாசித்தலின் முக்கிய பணியாகும். ஆக்சிசனை உடலுக்குள் கொண்டு செல்லும் முக்கிய பணி மூக்கின் மூலமே நடைபெறுகிறது. இந்த ஆக்சிசன் மூலமே வளர்சிதை மாற்றம் வழியாக செல்கள் சக்தியைப் பெறுகின்றன. மனிதச் சுவாச மண்டலத்தில் நாசிப்பள்ளம், புற நாசித்துளை, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக்கிளைக் குழல், காற்ருச்சிற்றறை, உதரவிதானம் போன்ற பகுதிகள் உள்ளன.
மனித மூக்கின் அமைப்பு
தொகுமூக்கெலும்பின் வேர் மூக்கின் மேல் பகுதியில் உள்ளது, மூக்கு எலும்புகள் நெற்றி எலும்பைச் சந்திக்கும் இடத்தில் உள்ள இணைப்புக் கோட்டில் ஒரு பதிப்பை உருவாக்குகின்றன. மூக்குக்குழி இரண்டு பகுதிகளாக மூக்கு நடுச்சுவர் எலும்பு மூலமாக வலது இடது எனப்பிரிக்கப்படுகிறது. சளிச்சவ்வுப் படலம் மூலம் சூழப்பட்டுள்ள மூக்குக் குழிகளில் சிலியா எனப்படும் முடிகள் காணப்படுகின்றன. மூக்கின் இருபுறமும் கண்களின் மேல்பகுதியையும் கொண்ட கபால அமைப்பு சைனசு எனப்படுகிறது. மூச்சுறுப்பு மண்டலத்தை முக்கிய பிரிவுகளாகக் கருதலாம். முதற் பிரிவு காற்றைச் செலுத்தும் பகுதிகள் இரண்டவாது பகுதி காற்றை வெளியேற்றும் பிரிவு. மூக்கு மேல் பகுதியில், இணைக்கப்பட்ட நாசி எலும்புகள் மூளையின் எலும்புடன் இணைகின்றன. மனிதர்களின் சுவாச மண்டலத்தில் மூக்கு, நாசியறை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைக்குழாய், நுரையீரல்கள் முதலியன உள்ளன. மனித உடலில் மார்பு எலும்புக்கூட்டுக்குள் இரண்டு நுரையீரல்கள் உள்ளன. விலா எலும்புகளுடன் இணைந்த தசைகள், விலா எலும்புக் கூட்டை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இயக்கப் பயன்படுகின்றன. நுரையீரலுக்குக் கீழே வலிமையான தட்டையான தசைத்தொகுப்பு உள்ளது. அதற்கு பிரிமென்றகடு (அல்லது உதரவிதானம்) என்று பெயர்.
- நாசிப்பள்ளம் மூச்சுக்குழல்
- மூச்சுக் கிளைக்குழல்.
- மூச்சுக் கிளைச்சிறுகுழல்
- காற்று நுண்ணறை
- பிரி சுவரின் குருத்தெலும்பு
- பக்கவாட்டிலுள்ள குருத்தெலும்பு
- பெரிய ஆலார்
- சிறிய ஆலார்
- மூக்கெலும்பு
- நார்க்கொழுப்பு இழையம்
- நெற்றியின் எலும்பின் உள்ளறை
- ஆப்பெலும்பின் உள்ளறை
- மேல்தாடை எலும்பின் உள்ளறை போன்றவை மூக்கின் பிற பகுதிகளாகும்.
முகத்தைப் போலவே, மனித மூக்கும் தமனிகளாலும், நரம்புகளாலும் நன்கு ஆட்கொள்ளப்படுகிறது, இவைகளால் ஏராளமான இரத்தம் மூக்குக்கு வழங்கப்படுகிறது. உட்கழுத்துத் தமனி, வெளிக்கழுத்துத் தமனி ஆகிய இரண்டு மடிப்புகள் மூலமாக முக்கியத்தமனியிலிருந்தும் இரத்தம் மூக்குக்கு வழங்கப்படுகிறது.
சுவாசித்தல் மற்றும் மணம் அறிதல்
தொகுஇதயத் துடிப்பு, குருதியோட்டம் ஆகியவற்றைப் போலவே, சுவாசித்தலும் உயிரைப் பாதுகாப்பதற்காக மிகவும் இன்றியமையாத ஒரு செயல்முறையாகும். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகக் செயல்படுவதற்கு ஆக்சிசன் தொடர்ந்து தேவைப்படுகிறது நுரையீரல் மூலமாக இழுக்க பெறும் காற்றிலிருந்து உயிரியம் கிடைக்கிறது. நரம்புகளால் சாதரணமாக நாம் உள்ளிழுக்கும் மூச்சிலுள்ள காற்றில் உயிரியம், கரியமிலவாயு, நீராவி ஆகியவையும் புகை, திடப்பொருள் துணுக்குகள் போன்றவை உள்ளன. ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டு திக்குமுக்காடிப் சுவாசம் தடைப்பட்டு மரணம் நேரிடுவதற்கு காரணம் , சுவாசித்தலை மேற்கொண்டுள்ள மூளையின் பகுதி திரும்பவும் இயங்க தொடங்காது.
மூக்கின் வழியாக காற்று சுவாசிக்கும்போது, காற்று மூக்கின் நுனியில் நுழைந்து நாசி குழிக்குள் செல்கிறது. காற்று பின்னர் தொண்டை வழியாக நுரையீரலுக்கு செல்லுகிறது . நுரையீரல்களிலிருந்து சுவாசித்த பழைய காற்றை மீண்டும் மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது. மூக்கு உள்ளே இழுத்தல் மற்றும் வெளியேற்றும் இரு வேலைகளை செய்கிறது. நுரையீரலுக்கு செல்லும் முன், மூக்கு வெப்பமாகவும், ஈரமாகவும், காற்றை வடிகட்டவும் செய்கிறது. ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக ஒரு நிமிடங்களில்16முதல் 18 முறை வரை மூச்சு விடுகிறான்.
வாசனை அல்லது மோப்பம் என்பது ஒரு வகையான இரசாயன உணர்வு ஆகும். சுவை போலல்லாமல் நூற்றுக்கணக்கான மோப்ப ஏற்பிகள் ஒவ்வொரு குறிப்பிட்ட மூலக்கூறு அம்சத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. வாசனை மூலக்கூறுகள் பலவிதமான அம்சங்களைத் தனித்துவமாகக் கொண்டிருக்கின்றன, இவை குறிப்பிட்ட ஏற்பிகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கின்றன. வெவ்வேறு ஏற்பிகளிலிருந்து பெறும் குறிப்புகளின் கலவையை நாம் மூலக்கூறின் வாசனையாகக் கருதுகிறோம். பெரமோன் ஓர் உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு அதன் சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் பெரமோன் எனப்படும். இத்தகைய பெரமோன்களை உணரக்கூடிய நியூரான்கள் மூக்கில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது [3].
மனித மூக்கின் வேலை
தொகுவெளிப்புற சூழல் மற்றும் ஒரு விலங்கின் நுண்ணிய உள்ளக நுரையீரல், உள்வரும் காற்று காரணமாக மூக்கின் நிலைகள், சுவாசத்தின் போது வெப்ப கட்டுப்பாடு மற்றும் வடிகட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான முதல் இடைமுகமாக செயல்படுதல் மூக்கின் பணியாகும், அதே போல் வாசனை உணர்வைத் தூண்டும் செயலையும் மூக்கு செய்கிறது.
மனிதனின் மூக்கில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன அவைகள் நாசிதுவாரங்கள் [4] என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவைகள் வளையும் தன்மையை உடைய சுவரால் பிரிக்கப்பட்டு உள்ளது. மூக்கின் நுட்பமான மேல் தோல் நாம் சுவசிக்கும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு துவாரங்களில் உள்ள உரோமங்கள் பெரிய தூசுகள் அனைத்தையும் வடிகட்டி விடும்.மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற கோழைப்படலம் மேலும்மேலும் உள்ள தூசுகளை வடிகட்டும் பணியைச் செய்கிறது. மனிதர்களின் சுவாசக் காற்று நாசித்துளை மூலம் நுரையீரலுக்கு இழுக்கப்படுகிறது.
மூக்கு முகத்தில் உள்ள உடல் உறுப்புக்களில் ஒன்று மட்டும் அல்ல. அது இயற்கையில் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு அவசியமான மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளையும் செய்கிறது. ஒலியின் பண்புகளுக்கு காரணமாகவும் மூக்கு அமைகிறது. உதடுகளின் அசைவுக்கும், நாக்கின் அசைவுகளுக்கும், சொற்களைச் சீர்மையுடன் வெளிக்கொண்டு வரவும் உதவி புரிகிறது. அத்துடன் வெப்பம் குளிரிலிருந்து பாதுகாக்கவும், மற்றும் தூசியை வடிகட்டி துகள்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பான சுவாசத்துக்குத் தேவையான காற்றைக் கொண்டு செல்கிற பணியையும் செய்கிறது. நாசி சவ்வுகளை பெரிய துகள்கள் எரிச்சலூட்டுவதால் தும்மல் ஏற்படுகிறது. தும்மல் மூலம் தோன்றும் நீர்த்துளிகளால் நோய்த்தொற்றுகளை பரப்ப முடியும், ஏனென்றால் அந்நீர்த்துளிகளில் நுண்ணுயிர்கள் கலந்திருக்கலாம்.
மருத்துவ முக்கியத்துவம்
தொகுமூக்கில் இருந்து இரத்தம் தானாக கொட்டும் பிரச்னை பொதுவாகக் காணப்படும் மூக்கு நோய்களுள் ஒன்றாகும். மூக்கினுள் விரலை விட்டு நோண்டுவதால் ரத்தம் வரலாம். தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாகவும், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடியும். தொழுநோய், காசநோய், ரத்தஅழுத்தம், சைனசு போன்றவையும் மூக்கில் ரத்தம் வடிவதற்கு காரணங்களாக உள்ளன.
சில்லுமூக்கு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | R04.0 |
ஐ.சி.டி.-9 | 784.7 |
நோய்களின் தரவுத்தளம் | 18327 |
மெரிசின்பிளசு | 003106 |
ஈமெடிசின் | emerg/806 ent/701, ped/1618 |
ம.பா.த | C08.460.261 |
மூக்கிலிருந்து இரத்தம் வடிதலை சில்லுமூக்கு என்றும் அழைப்பதுண்டு. சில்லுமூக்கு என்பது சிலருக்கு மூக்கில் அடி அல்லது காயம் எதுவும் ஏற்படாமல் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை அல்லது கசிவதை குறிப்பதாகும். இது பொதுவாக கடுமையானதோ அல்லது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதோ அல்ல[5]. அதிகமாக மூக்கின் முன்பகுதியிலேயே இரத்தம் கசிதல் அல்லது வடிதல் இடம்பெறுகிறது, இதை முன்புற மூக்கு இரத்தக் கசிவு என அழைப்பர். சிலவேளைகளில் இரத்தக்கசிவு மூக்கின் பின்புறத்தில் ஏற்படும். இதை பின்புற மூக்கு இரத்தக் கசிவு என அழைப்பர். இவை மிகவும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியவை. இவை ஏற்பட்டால் சில வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலையும் ஏற்படும்[6]. பனிக் காலங்களிலேயே சில்லுமூக்கு அதிகம் இடம்பெறுகின்றது. வெப்பநிலையில் அல்லது ஈரப்பதனில் ஏற்படும் மாற்றங்கள் இரத்தம் கசிதலுக்கு காரணங்களாகின்றன.<ref>
சுத்தம் மற்றும் பாதுகாப்பு
தொகுமூக்கின் நுழைவாயில்களிலுள்ள உரோமங்கள், மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் ஆகியவற்றைத் தவிர மூன்றாவது பெரிய பாதுகாப்பான அமைப்பு மிகநுட்பமான உரோமங்கள் போல் நீட்டிக்கொண்டு இருக்கும் மூச்சுக் குழல்களில் உள்ள பிசிர் போன்ற அமைப்புக்கள் ஆகும். இவையெல்லாம் மெல்லியதாக உள்ள தோலின் மேற்புறம் உயிரணுக்களின் மீது பதிந்துள்ள உள்ளன. இவையெல்லாம் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கும். தூசுகளை முன்னோக்கி வெளியே தள்ளுவதில் இப் பிசிர்கள் மிக திறமையுடன் செயலாற்றும்.மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் உள்ளன,அவற்றில் சூடான குருதி பரவுகிறது. இந்த குருதி நாம் சுவசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனால் நமக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் போது இந்த நுண்புழைகள் திரண்டுவிடும் பாக்டீரியா மூக்கில் ஊடுருவி, சளியையும் மற்றும் வலியும் உண்டு பண்ணும்போது மூக்கின் மென்மையான பகுதிகள் சிவத்தல், எரிச்சல், மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தும், அதாவது மூக்கு நோய் தொற்றுக்குள்ளான நிலையில் அதன் பாகங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படும்.இந்த நுண்புழைகள் திரண்டு நமது மூக்கைப் பாதுகாக்கும்.
மூக்கின் வாழியாக நோய் பரவுதல் நோயுற்ற மனிதனிடம் இருந்து நேரடியாக மூக்கு மற்றும் வாயின் மூலமாக பரவும்வகை நோய்கள். தொண்டை அடைப்பான் ,கக்குவான் இருமல் ,நிமோனியா,காலரா, டைய்பாடு ,மீசல்சு, (மணல்வாரி அம்மை) இந்நோய்கள் சளி, இருமல்,பேசுதல் மூலமாக தெறிக்கும் நீர்த் திவலைகள் மூலமாக பரவுகின்றன. ஆகவே நாம் தும்மும் போதும் அல்லது இரும்பும் போது துணிகளை வைத்துகொள்வது நலம்.
வேறு விலங்குகளில் மூக்கு
தொகுவெவ்வேறு வகையான உயிரினங்கள் வெவ்வேறு வகையான சுவாச உறுப்புகளைப் பெற்றுள்ளன. இவ்வுறுப்புகள் அனைத்தும் ஆக்சிசனைப் பெறும் அளவிற்கு பெரிய பரப்பினைப் பெற்றுள்ளன. சுவாசித்தல் மற்றும் வாசனைகளை நுகர்வது மட்டும் மூக்கின் பணிகள் அல்ல. அவைகள் விலங்குகளின் உலகில் மிகவும் முக்கியமான பணிகளையும் செய்கிறது. அதாவது உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் இடங்களையும் அடையாளம் காண்பது போன்ற பணிகளையும் மூக்கு உதவுகிறது. மீன்களின் சுவாச உறுப்பு அதன் செவுள் பகுதியாகும். மேல் தோலும் நுரையீரலும் தவளையின் சுவாச உறுப்புகளாகும். பொதுவாக நிலவாழ் உயிரினங்கள் நுரையீரலை சுவாச உறுப்பாகக் கொண்டுள்ளன. டால்பின்களுக்கு மூக்கின் நுனியில் உணர் இழைகள் உள்ளன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ archaeologyinfo.com > glossary பரணிடப்பட்டது 2011-05-16 at the வந்தவழி இயந்திரம் Retrieved on August 2010
- ↑ "Nose, Anatomy". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 15, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "The Surprising Impact of Taste and Smell". LiveScience.
- ↑ Adult humans have nasal hairs in the anterior nasal passage
- ↑ "Nosebleeds". KidsHealth. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
- ↑ "Nosebleeds". eMedicineHealth. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் மூக்கு பற்றிய ஊடகங்கள்