மூச்சுக்குழல் அழற்சி
மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும். இதனால் இருமலும், சளி தோன்றுதலும் ஏற்படும்.
இந்நோயில் இரண்டு வகைகளுண்டு.
- கடிய மூச்சுக்குழல் அழற்சி- திடீரெனத் தோன்றிச் சிறிது காலம் பாதிக்கும்.
- நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி- தொடர்ந்து நீடித்துப் பல ஆண்டுகள் பாதிக்கலாம்.
Bronchitis | |
---|---|
![]() | |
This diagram shows acute bronchitis. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pulmonology |
ஐ.சி.டி.-10 | J20.-J21., J42. |
ஐ.சி.டி.-9 | 466, 491, 490 |
நோய்களின் தரவுத்தளம் | 29135 |
மெரிசின்பிளசு | 001087 |
ஈமெடிசின் | article/807035 article/297108 |
ம.பா.த | D001991 |
இவை இரண்டு வகைகளும் புகை பிடிப்பவர்களிலும் அதிக அளவில் காற்று மாசுபடுதல் உள்ள இடங்களில் வாழ்பவர்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
காரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.