அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10

அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 அல்லது அ.நோ.வ -10 (ICD-10) என்பது நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாட்டின் பத்தாவது பதிப்பு ஆகும். இப்பதிப்பில் எல்லா வகையான நோய்கள், அவற்றின் உணர்குறிகள், அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுகள் என்பன உரியமுறையில் வகைப்படுத்தப்பட்டு குழப்பம் ஏற்படாதவாறு சிறப்புக் குறியீடுகளைக் கொண்டுள்ளது.

இப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது.[1] நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பட்டியல் தொகு

அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 பட்டியல் (ICD-10).[2]

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு - பத்தாவது பதிப்பு
அதிகாரம் கட்டம் தலைப்பு
I A00–B99 சில தொற்றுநோய்களும் ஒட்டுண்ணி நோய்களும்
II C00–D48 உயிரணு மிகைப் பெருக்கம் (Neoplasms)
III D50–D89 குருதி நோய்கள், குருதியாக்க உறுப்புக்களின் நோய்கள், சில நிர்ப்பீடனநோய்கள்
IV E00–E90 அகஞ்சுரப்பி, போசாக்கு, வளர்சிதைமாற்ற நோய்கள்
V F00–F99 உளநோய், நடத்தை நோய்
VI G00–G99 நரம்புத்தொகுதி நோய்கள்
VII H00–H59 கண், கண் சூழ்பகுதிகளின் நோய்கள்
VIII H60–H95 காது, முலையுரு நீட்ட நோய்கள்
IX I00–I99 குருதிச் சுற்றோட்டத் தொகுதி நோய்கள்
X J00–J99 சுவாசத்தொகுதி நோய்கள்
XI K00–K93 சமிபாட்டுத் தொகுதி நோய்கள்
XII L00–L99 தோல், தோற்கீழ் இழைய நோய்கள்
XIII M00–M99 தசை வன்கூட்டுத் தொகுதி நோய்களும் தொடுப்பிழைய நோய்களும்
XIV N00–N99 சிறுநீரக, இனப்பெருக்கத் தொகுதி நோய்கள்
XV O00–O99 கர்ப்பம், மகப்பேறு, பிரசவக்காலம்
XVI P00–P96 பிறப்பின் முன்பின் காலப்பகுதியில் ஏற்படும் சில நிலைகள்
XVII Q00–Q99 பிறவிக் குறைபாடு, பிறப்பு உருத்திரிபு, மரபுத்திரி (நிறமூர்த்தம்) இயல்பு மாற்றம்
XVIII R00–R99 நோய் அறிகுறிகள், மருத்துவ மற்றும் ஆய்வுகூட அறிபேறுகள்
XIX S00–T98 காயங்கள், நஞ்சூட்டம், புறக்காரணிகளால் ஏற்படும் விளைவுகள்
XX V01–Y98 நோயுற்ற விகிதம், இறப்புவிகிதம் ஆகியவற்றிற்கான புறக்காரணங்கள்
XXI Z00–Z99 உடல்நல நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் மற்றும் உடல்நலச் சேவைகளைத் தொடர்புகொள்ளல்
XXII U00–U99 சிறப்புத் தேவைகளுக்கான சுட்டெண்


மேற்கோள் தொகு

  1. "International Classification of Diseases (ICD)". உலக சுகாதார அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.
  2. "International Statistical Classification of Diseases and Related Health Problems 10th Revision Version for 2007". உலக சுகாதார அமைப்பு. 2007. பார்க்கப்பட்ட நாள் February 26, 2010.