அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10
அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 அல்லது அ.நோ.வ -10 (ICD-10) என்பது நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாட்டின் பத்தாவது பதிப்பு ஆகும். இப்பதிப்பில் எல்லா வகையான நோய்கள், அவற்றின் உணர்குறிகள், அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுகள் என்பன உரியமுறையில் வகைப்படுத்தப்பட்டு குழப்பம் ஏற்படாதவாறு சிறப்புக் குறியீடுகளைக் கொண்டுள்ளது.
இப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது.[1] நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பட்டியல்
தொகுஅனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 பட்டியல் (ICD-10).[2]
அதிகாரம் | கட்டம் | தலைப்பு |
---|---|---|
I | A00–B99 | சில தொற்றுநோய்களும் ஒட்டுண்ணி நோய்களும் |
II | C00–D48 | உயிரணு மிகைப் பெருக்கம் (Neoplasms) |
III | D50–D89 | குருதி நோய்கள், குருதியாக்க உறுப்புக்களின் நோய்கள், சில நிர்ப்பீடனநோய்கள் |
IV | E00–E90 | அகஞ்சுரப்பி, போசாக்கு, வளர்சிதைமாற்ற நோய்கள் |
V | F00–F99 | உளநோய், நடத்தை நோய் |
VI | G00–G99 | நரம்புத்தொகுதி நோய்கள் |
VII | H00–H59 | கண், கண் சூழ்பகுதிகளின் நோய்கள் |
VIII | H60–H95 | காது, முலையுரு நீட்ட நோய்கள் |
IX | I00–I99 | குருதிச் சுற்றோட்டத் தொகுதி நோய்கள் |
X | J00–J99 | சுவாசத்தொகுதி நோய்கள் |
XI | K00–K93 | சமிபாட்டுத் தொகுதி நோய்கள் |
XII | L00–L99 | தோல், தோற்கீழ் இழைய நோய்கள் |
XIII | M00–M99 | தசை வன்கூட்டுத் தொகுதி நோய்களும் தொடுப்பிழைய நோய்களும் |
XIV | N00–N99 | சிறுநீரக, இனப்பெருக்கத் தொகுதி நோய்கள் |
XV | O00–O99 | கர்ப்பம், மகப்பேறு, பிரசவக்காலம் |
XVI | P00–P96 | பிறப்பின் முன்பின் காலப்பகுதியில் ஏற்படும் சில நிலைகள் |
XVII | Q00–Q99 | பிறவிக் குறைபாடு, பிறப்பு உருத்திரிபு, மரபுத்திரி (நிறமூர்த்தம்) இயல்பு மாற்றம் |
XVIII | R00–R99 | நோய் அறிகுறிகள், மருத்துவ மற்றும் ஆய்வுகூட அறிபேறுகள் |
XIX | S00–T98 | காயங்கள், நஞ்சூட்டம், புறக்காரணிகளால் ஏற்படும் விளைவுகள் |
XX | V01–Y98 | நோயுற்ற விகிதம், இறப்புவிகிதம் ஆகியவற்றிற்கான புறக்காரணங்கள் |
XXI | Z00–Z99 | உடல்நல நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் மற்றும் உடல்நலச் சேவைகளைத் தொடர்புகொள்ளல் |
XXII | U00–U99 | சிறப்புத் தேவைகளுக்கான சுட்டெண் |
மேற்கோள்
தொகு- ↑ "International Classification of Diseases (ICD)". உலக சுகாதார அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.
- ↑ "International Statistical Classification of Diseases and Related Health Problems 10th Revision Version for 2007". உலக சுகாதார அமைப்பு. 2007. பார்க்கப்பட்ட நாள் February 26, 2010.