நுபியா (/ˈnbiə, ˈnj-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.

எகிப்து மற்றும் நுபியா

தோற்றம் தொகு

எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.[1] இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது புது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.[2]

 
நுபியாவின் பிரமிடு

எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது.[3] போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.[4] நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபியா&oldid=3613277" இருந்து மீள்விக்கப்பட்டது