நைல் வடிநிலம்

நைல் வடிநிலம் (Nile Delta) வடக்கு எகிப்தில் நைல் நதி உருவாக்கும் வடிநிலம் ஆகும். நைல் நதி வடக்கு எகிப்தில் பல கிளைகளாக பரவி மத்தியதரைக் கடலில் கலக்கிறது. [1]3,400,000 சதுர கிலோ மீட்டர் (1,300,000 சதுர மைல்) கொண்ட நைல் வடிநிலம் உலகின் மிகப்பெரிய ஆற்று வடிநிலங்களில் ஒன்றாகும். நைல் வடிநிலம் மேற்கில் அலெக்ஸாண்டிரியாவிலிருந்து கிழக்கில் சயீது துறைமுகம் வரை, மத்தியதரைக் கடலோரத்தில் 240 கிலோ மீட்டர் (150 மைல்) வரை உள்ளடக்கியது. நைல் வடிநிலம் வண்டல் மண் நிறைந்த ஒரு வ்ளமான வேளாண்மைப் பகுதியாகும். [2] எகிப்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நைல் வடிநிலம் சராசரி 160 கிலோ மீட்டர் (99 மைல்) நீளம் கொண்டது. நைல் வடிநிலம் கெய்ரோவிற்கு வடக்கே சற்று தொலைவில் தொடங்குகிறது.[3]

வடக்கு எகிப்தில் நைல் வடிநிலத்தின் வரைபடம்

புவியியல்

தொகு

நைல் வடிநிலம் எகிப்தின் வடக்கிலிருந்து தெற்கே சராசரி 160 km (99 mi) நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை ஒட்டிய நைல் வடிநிலம் கிழக்கிலிருந்து மேற்காக 240 கிலோ மீட்டர் அகலம் கொண்டுள்ளது. நைல் வடிநிலப் பகுதி 3,400,000 சதுர கிலோ மீட்டர் (1,300,000 சதுர மைல்) கொண்டது. நைல் நதியின் பலை கிளை ஆறுகளால் நைல் வடிநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

 
நைல் நதியும் அதன் வடிநிலமும்

நைல் வடிநிலத்தின் கிழக்கில் சுயஸ் கால்வாய் மற்றும் வடகிழக்கில் மன்சலா ஏரியும் அமைந்துள்ளது. நைல் வடிநிலத்தின் வடமேற்கில், மத்தியதரைக் கடலை ஒட்டி புருல்லஸ் ஏரி, இட்கு ஏரி மற்றும் மாரியட் ஏரிகள் அமைந்துள்ளது. நைல் வடிநிலம் ஒரு வளைவு வடிவத்தில் அமைந்துள்ளது. [5] நைல் நதி மீது அஸ்வான் அணை கட்டிய பின்னர் நைல் வடிநிலத்தில் வண்டல் மண் சேர்வது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. நைல் வடிநிலத்தின் அதிகபட்ச ஆழம் 70 அடியாகும்.

மக்கள் தொகை

தொகு
 
நைல் வடிநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி

நைல் வடிநிலத்தில் 39 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்த வடிநிலத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்ட்ரில் 1,000/km2 (2,600/sq mi) அல்லது அதற்கும் மேலும் உள்ளது. நைல் வடிநிலத்தின் முக்கியமான பெரிய நகரம் அலெக்சாந்திரியா ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 4.5 மில்லியன் ஆகும். பிற முக்கிய நகரங்கள் சயீது துறைமுகம், அபுசிர் போன்றவைகள் ஆகும்.[6]

தட்ப வெப்பம்

தொகு

நீர் நிறைந்த நைல் வடிநிலப் பகுதி பாலைவன வெப்ப நிலை கொண்டுள்ளது. கோடைக்காலத்தின் இதன் வெப்ப நிலை 34 °C (93 °F) ஆகும். குளிர்கால வெப்ப நிலை இரவில் 9 °C (48 °F), பகலில் 19 °C (66 °F) ஆக இருக்கும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 100–200 mm (4–8 அங்) ஆகும்.[7]

கடல் மட்டம் உயர்தல்

தொகு
 
Population density and low elevation coastal zones. The Nile delta is especially vulnerable to sea level rise.

புவி சூடாதல் விளைவாக வடக்கு எகிப்தின் நைல் வடிநிலப் பகுதியின் சில இடங்கள் 90 m (100 yd) வரையில் கடலில் மூழ்கியுள்ளது.[8]

ஆளுநரகங்களும், நகரங்களும்

தொகு

நைல் வடிநிலத்தில் எகிப்தின் 10 ஆளுநரகங்கள் உள்ளது:

ஆளுநரகங்கள்

தொகு
  • அலெக்சாந்திரியா ஆளுநகரம்
  • பெகிரியா ஆளுநகரம்
  • காப்ரி எல் சேக் ஆளுநகரம்
  • கார்பியா ஆளுநகரம்
  • மொனுபியா ஆளுநகரம்
  • கலியுபியா ஆளுநகரம்
  • தாகாலியா ஆளுநகரம்
  • தமிட்டா ஆளுநகரம்
  • சார்க்கியா ஆளுநகரம்
  • சயீது துறைமுகம் ஆளுநகரம்

பெரிய நகரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dumont, Henri J. (2009-05-06). The Nile: Origin, Environments, Limnology and Human Use (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-9726-3.
  2. Negm, Abdelazim M. (2017-05-25). The Nile Delta (in ஆங்கிலம்). Springer. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-56124-0.
  3. Zeidan, Bakenaz. (2006). The Nile Delta in a global vision. Sharm El-Sheikh., archived from the original on 2020-07-10, பார்க்கப்பட்ட நாள் 2021-12-13
  4. John Cooper (30 September 2014). The Medieval Nile: Route, Navigation, and Landscape in Islamic Egypt. The American University in Cairo Press. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-416-614-3.
  5. Holz, Robert K (1969). Man-made landforms in the Nile delta (in ஆங்கிலம்). American Geographical Society. இணையக் கணினி நூலக மைய எண் 38826202.
  6. City Population website, citing Central Agency for Public Mobilisation and Statistics Egypt (web), accessed 11 April 1908.
  7. Nile Delta Facts
  8. "Global Warming Threatens Egypt's Coastlines and the Nile Delta". EcoWorld. 25 September 2009. Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைல்_வடிநிலம்&oldid=3659453" இலிருந்து மீள்விக்கப்பட்டது