இசிஸ் (Isis) பண்டைய எகிப்தின் பெண் கடவுள் ஆவார். பண்டைய எகிப்திய சமயத்தில் இசிஸ் பெண் கடவுளின் வழிபாடு பழைய எகிப்திய இராச்சிய (கிமு 2686–2181) காலத்தில் முதன்முதலாக அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் காலம் முடியவும் (கிமு 330 - கிமு32) மற்றும் அதனைத் தொடர்ந்து ரோமானியர்களின் எகிப்து மாகாணத்திலும் கிபி 600 முடிய இசிஸ் கடவுள் வழிபாடு விளங்கியது.[1][2][3]

இசிஸ்
Profile of a woman in ancient Egyptian clothing. She has yellow skin and wears a headdress shaped like a tall chair.
இராணி நெபர்தாரியில் கல்லறைச் சுவரில் வலது கையில் மந்திரக் கோலையும், இடது கையில் மந்திரச் சாவி போன்ற ஆங்க் சின்னம் தாங்கிய இசிஸ் கடவுள்
துணைஒசைரிஸ், மூத்த ஓரசு
பெற்றோர்கள்ஜெப் மற்றும் நூத்
சகோதரன்/சகோதரிஒசைரிஸ், சேத், மூத்த ஓரசு
குழந்தைகள்ஓரசு

ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கடவுள் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை, ஓசைரிசின் மனைவியும், பெண் கடவுளான இசிஸ் ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிஸ் ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். ஓரசு வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.

இதனையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிசு&oldid=3445660" இலிருந்து மீள்விக்கப்பட்டது