ஆட்செப்சுட்டு

ஆட்செப்சுட்டு (Hatshepsut) (/hætˈʃɛpsʊt/;[3] அல்லது Hatchepsut; (பொருள்:புனித மகளிருள் முன்னவர்);[4](பிறப்பு:கிமு 1507– இறப்பு: கிமு 1458) என்பவர் எகிப்தின் 18 ஆம் வம்சத்தின் இராணி ஆவார்.[5] இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் பெண்ணரசி ஆவார். இவரது கல்லறை தேர் எல் பகாரியில் உள்ளது. பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்.

ஆட்செப்சுட்டு
Hatshepsut
ஆட்செப்சுட்டு சிலை, பெருநகரக் கலை அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1478 – கிமு 1458 ., எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் தூத்மோஸ்
பின்னவர்மூன்றாம் தூத்மோஸ்
துணைவி(யர்)இரண்டாம் தூத்மோஸ்
பிள்ளைகள்மூன்றாம் தூத்மோஸ்
தந்தைமுதலாம் தூத்மோஸ்
தாய்அக்மோஸ்
பிறப்புகிமு 1507
இறப்புகிமு 1458 (அகவை 51)
அடக்கம்KV20 (மறுபுதைப்பு KV60[2])
நினைவுச் சின்னங்கள்கார்நாக் கோயில், ஆட்செப்சுட்டு கல்லறைக் கோயில், சுப்பியோசு ஆர்த்தெமிடோசு, சாப்பெல்லி வட்டாரம்.
ஆட்செப்சுட்டுன் சிற்பம்

பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தைச் சேர்ந்த இந்த இராணி கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.[6] பண்டைய எகிப்திய வரலாற்றில் எகிப்தை ஆண்ட முதல் அரசி நெஃபர்டீட்டீக்குப் பின்னர், அரசி அட்செப்சுத் எகிப்தை ஆண்ட இரண்டாவது அரசி எனும் பெருமை படைத்தவர். இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா ஆவார். [7]

பண்டைய எகிப்திய இராணி ஆட்செப்சுட்டுவின் 9ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் பண்டு மீதான படையெடுப்பு வீரர்களின் ஒவியம்

இவரது ஆட்சியில் எகிப்தின் தெற்கில் இருந்த பண்டு இராச்சியத்தை கைப்பற்றினார்.

எகிப்திய பெண் அரசிகள்தொகு

பார்வோன்களின் அணிவகுப்புதொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி ஆட்செப்சுட்டுவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [8][8]

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Queen Hatshepsut". Phouka. April 13, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; times என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Hatshepsut". Dictionary.com. July 27, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  4. Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson. பக். 104. https://archive.org/details/chronicleofphara00clay. 
  5. Hatshepsut
  6. வார்ப்புரு:CITE BOOK
  7. வார்ப்புரு:CITE BOOK
  8. 8.0 8.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

மேற்கோள்கள்தொகு

வெளி இணப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்செப்சுட்டு&oldid=3607677" இருந்து மீள்விக்கப்பட்டது