எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்
எகிப்தியப் பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Egyptian Civilization (NMEC) எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு அருகில் பழைய கெய்ரோ நகரத்தில் புஷ்தாத் எனுமிடத்தில் (23,235 சதுர மீட்டர்கள் (250,100 sq ft) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் பண்டைய எகிப்தியக் காலம் முதல் தற்போதைய நவீன கால எகிப்தின் பண்பாட்டை விளக்கும் 50,000 தொல்பொருட்கள் கொண்டது. இந்த அருங்காட்சியகம் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
المتحف القومي للحضارة المصرية | |
நிறுவப்பட்டது | 2017 |
---|---|
அமைவிடம் | புஷ்தாத், பழைய கெய்ரோ, கெய்ரோ, எகிப்து |
வகை | வரலாற்று அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 50,000 தொல்பொருட்கள் |
வலைத்தளம் | nmec.gov.eg |
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை இந்த புதிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு, 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.[1][2][3]
கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைகழகத் தலைவர் பிரான்சிஸ் ஜே. ரிச்சியர்டோன் என்பவர், 2017-இல் இந்த புதிய அருங்காட்சியகத்திற்கு 5,000 எகிப்திய தொல்பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hussein, Wael (3 April 2021). "Egypt mummies pass through Cairo in ancient rulers' parade". BBC News. https://www.bbc.co.uk/news/world-middle-east-56508475.
- ↑ Egypt mummies pass through Cairo in ancient rulers' parade
- ↑ 22 royal mummies, kings and queens who died more than 3,000 years ago, get a parade to move to their new home
- ↑ Hawass, Zahi (6 August 2017). "AUC: A story to be remembered". Al-Ahram weekly இம் மூலத்தில் இருந்து 20 ஜூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190620224410/http://weekly.ahram.org.eg/News/22078.aspx.
வெளி இணைப்புகள்
தொகு- எகிப்திய பண்பாட்டின் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- Podcast on the Golden Parade, "History of Egypt Podcast" series by Eyptologist Dominic Perry, 4 April 2021