நெபர்தரி அல்லது நெபர்தரி மெரிட்மூத் (NefertariNefertari Meritmut), புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ்சின் பட்டத்து அரசி ஆவார்.[1]

நெபர்தரி
நெபர்தரி-மெரிட்மூத்
பார்வோன் இரண்டாம் ரமேசஸ்சின் கல்லறைச் சுவரில் இராணி நெபர்தரின் சித்திரம்
இறப்புகிமு 1255
புதைத்த இடம்
துணைவர்இரண்டாம் ராமேசஸ்
குழந்தைகளின்
பெயர்கள்
9
பெயர்கள்
நெபர்தரி மெரிட்மூத்
அரசமரபுஎகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
மதம்பண்டைய எகிப்திய சமயம்
நெபர்தரி-மெரிட்மூத் படவெழுத்துக்களில்
t G15 nfrit
r
Z1 Z1
n
N36
t

Nefertari Meritmut
அழகிய கூட்டாளி, மூத் பெண் கடவுளின் அன்பை பெற்றவர்

எகிப்திய மொழியில் நெபர்தரி என்பதற்கு அழகிய கூட்டாளி என்றும், நெபர்தரி மெரிட்மூத் என்பதற்கு மூத் பெண் கடவுளின் அன்பைப் பெற்றவர் என்பது பொருளாகும். எகிப்திய பட்டத்து இராணிகளில் இவர் கிளியோபாட்ரா, ஆட்செப்சுட்டு, நெஃபர்டீட்டீ ஆகியவர்களுக்கு அடுத்து இராணி நெபர்தரி அதிக அரசியல் புகழ் பெற்றவர் ஆவார்.

ராணிகளின் சமவெளியில் இவரது பெரிய கல்லறை மிகவும் அழகிய முறையில் நிறுவப்பட்டுள்ளது. இவருக்காக இவரது கணவர் இரண்டாம் ராமேசஸ் அபு-சிம்பெல்லில் அழகிய கோயில் கட்டியுள்ளார். மேலும் இராணி நெபர்தரிக்கு தீபை மற்றும் கர்னாக்கில் பல கோயில்கள் உள்ளன.


எகிப்திய பெண் அரசிகள் தொகு

இதனையும் காணக தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dodson, Aidan and Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3 [page needed]

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nefertari
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபர்தரி&oldid=3448838" இலிருந்து மீள்விக்கப்பட்டது