அரசிகளின் சமவெளி

(ராணிகளின் சமவெளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசிகளின் சமவெளி (Valley of the Queens) (அரபு மொழி: وادي الملكاتபண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும். இது தற்கால எகிப்து நாட்டின் பண்டைய தீபை நகரத்தின் சமவெளிகளில் உள்ளது. இராணிகளின் சமவெளியை பண்டைய எகிப்திய மொழியில் அழகின் இருப்பிடம் என்றழைப்பர்.[1]இறந்த பார்வோன்களின் மம்மிகள் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது.[2]இராணிகளில் சமவெளி மேல் எகிப்தில் பாயும் நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது எகிப்தின் பண்டைய தீபை நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்த இராணிகளின் சமவெளியில் பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம், மற்றும் இருபதாம் வம்சங்களின் இறந்த இராணிகள் மற்றும் இளவரசிகள் மற்றும் அரச குழந்தைகளின் சடலங்களை மம்மியாக்கி இச்சமவெளியின் கல்லறைகளில் அடக்கம் செய்வது வழக்கம்.

இராணிகளின் சமவெளி படவெழுத்துக்களில்
X1
G1
Q1X1
O1
F35F35F35

Ta-set-neferu
T3-st-nfrw
அழகின் இருப்பிடம்
இராணிகளின் சமவெளியில் கல்லறைகள், அல்-உக்சுர், எகிப்து

அரசிகளின் கல்லறைகளில் குறிப்பிடத்தக்கது இரண்டாம் ராமேஸ்சின் இராணி நெபர்தாரி மற்றும் இராணி தியுதியின் கல்லறைகள் ஆகும்.[3]

இதனையும் காணக தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valley of the Queens
என்பதின் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசிகளின்_சமவெளி&oldid=3580733" இருந்து மீள்விக்கப்பட்டது