தேர் எல் பகாரி
தேர் எல் பகாரி (Deir el-Bahari or Dayr al-Bahri) (அரபு மொழி: الدير البحري எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் எகிப்தியக் கடவுள்களின் கோயில்கள் கொண்ட இடமாகும். இது தீபை-அல்-உக்சுர் நகரத்திற்கு வெகு அருகில் உள்ளது. கிமு 15 முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களை கிபி 1894– 1896-ஆண்டுகளின் அகழாய்வில் கண்டுபிடித்தனர்.[1]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
![]() மேல் எகிப்தில் தேர் எல் பகாயின் அமைவிடம் | |
அமைவிடம் | லக்சர் ஆளுநனரகம், எகிப்து |
பகுதி | தீபை நகரம் |
உள்ளடக்கம் |
|
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (i), (iii), (vi) |
உசாத்துணை | 087-003 |
பதிவு | 1979 (3-ஆம் அமர்வு) |
ஆள்கூறுகள் | 25°44′18″N 32°36′28″E / 25.73833°N 32.60778°Eஆள்கூறுகள்: 25°44′18″N 32°36′28″E / 25.73833°N 32.60778°E |
தேர் எல் பகாரியில் பதினொன்றாம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் மற்றும் எகிப்திய அரசி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்கள் உள்ளது. மேலும் இங்கு பதினெட்டாம் வம்ச பார்வோன்களான மூன்றாம் தூதுமோசு மற்றும் முதலாம் அமென்கோதேப் ஆகியோர் எகிப்தியக் கடவுள்களுக்கு பெரிய அளவில் நிறுவிய கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளது.[2]
1979-இல் தேர் எல் பகாரியின் பண்டைய கட்டிடத் தொகுதிகளை இயுனேசுகோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்தொகு
மேல் எகிப்தில் நைல் நதி பாயும் தீபை நகரத்திற்கு வெளியே அமைந்த மலைக்குன்றுகளில் தேர் எல் பகாரி தொல்லியல் களம் உள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல்கள்தொகு
1997-இல் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களால், தேர் எல் பகாரியில் உள்ள இராணி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயிலை பார்வையிட்டுக் கொண்டிருந்த 62 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]
தேர் எல் பகாரியின் படக்காட்சிகள்தொகு
மறுசீரமைப்புக்கு முன் ஆட்செப்சுட்டுவின் கோயில்
தேர் எல் பகாரியில் ஆட்செப்சுட்டு (இடது), மூன்றாம் தூத்மோஸ் (நடுவில்) மற்றும் இரண்டாம் மெண்டுகொதேப் (வலது) கல்லறைக் கோயில்கள்[4]
ஆட்செப்சுட்டுவின் கோயில்
முற்றுப் பெறாத தூண்களைக் கொண்ட கட்டிடம், தேர் எல் பகாரி[5]
பண்டு போரில் இராணி ஆட்செப்சுட்டுவின் படைவீரர்களின் சித்திரம்
தீபை-கோயில்கள் - தேர் எல் பகாரி
செனுமூத் நிறுவிய ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்
இதனையும் காண்கதொகு
ஆதாரம்தொகு
- Mertz, Barbara (1964). "Temples, Tombs and Hieroglyphs". New York: Coward-McCann. ISBN 0-87226-223-5
மேற்கோள்கள்தொகு
- ↑ Dayr al-Baḥrī ARCHAEOLOGICAL SITE, EGYPT
- ↑ Trachtenberg, Marvin; Isabelle Hyman (2003). Architecture, from Prehistory to Postmodernity. Italy: Prentice-Hall Inc.. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8109-0607-5. https://archive.org/details/architecturefrom00trac_0/page/71.
- ↑ Luxor massacre
- ↑ Djeser-Djeseru, Temple of Hatshepsut
- ↑ "Mortuary Temple of Hatshepsut". Madain Project. 10 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Dayr al-Baḥrī
- Egypt Index at Bluffton University
- The Cache at Deir el-Bahri – Archaeology at About.com
- The Temple Djeser djeseru
- Hatshepsut: from Queen to Pharaoh, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Deir el-Bahari (see index)