முதலாம் சேத்தி

முதலாம் சேத்தி (Sethos I) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் முதலாம் ராமேசஸ்-இன் மகனும், இரண்டாம் ராமேசஸ்-இன் தந்தையும் ஆவார். முதலாம் சேத்தி பண்டைய எகிப்தை கிமு 1290 முதல் 1279 முடிய 11 ஆண்டுகள் ஆண்டார்.[4][5] இவரது ஆட்சிக் காலத்தின் போது முதலாம் சேத்தி கட்டிய கோயில் சுவர்களில் பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது. அதனை அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் என்பர்.

சேத்தி I
சேத்தி I
முதலாம் சேத்தியின் உருவம், அபிதோஸ் கோயில்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1290–1279, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
முன்னவர்முதலாம் ராமேசஸ்
பின்னவர்இரண்டாம் ராமேசஸ்
துணைவி(யர்)துயா
பிள்ளைகள்இரண்டாம் ராமேசஸ் உள்ளிட்ட நால்வர்
தந்தைமுதலாம் ராமேசஸ்
தாய்சித்ரே
இறப்புகிமு 1279
அடக்கம்கேவி17
நினைவுச் சின்னங்கள்சேத்தியின் நினைவுக் கோயில், அபிதோஸ் நகரம்
மன்னர்களின் சமவெளியில் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில் மேற்கூரையில் வானவியல் நாட்காட்டியை கணக்கிட உதவும் விண்மீன்களின் ஓவியம்

பார்வோன்களின் அணிவகுப்பு

தொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் முதலாம் சேத்தி மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [6][6]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, 1994. p.140
  2. "Sety I Menmaatre (Sethos I) King Sety I". Digital Egypt. UCL. பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.
  3. "Ancient Egyptian Royalty". பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
  4. Michael Rice (1999). Who's Who in Ancient Egypt. Routledge.
  5. J. von Beckerath (1997). Chronologie des Äegyptischen Pharaonischen (in German). Phillip von Zabern. p. 190.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. 6.0 6.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seti I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சேத்தி&oldid=3878983" இலிருந்து மீள்விக்கப்பட்டது