அபீதூசு

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
(அபிதோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபிதோஸ் (Abydos (அரபு மொழி: أبيدوس) பண்டைய எகிப்தின் மேல் எகிப்து பிரதேசத்தில் பாயும் நைல் நதியின் மேற்கே 11 மைல் தொலைவில், தற்கால எகிப்தின் சோபாக் ஆளுநகரத்தில் உள்ள எல்-பால்யானா நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பண்டைய எகிப்திய நகரம் ஆகும்.[1]இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது அபிதோஸ் வம்ச பார்வோன்கள் மேல் எகிப்து மற்றும் நடு எகிப்திய பகுதிகளை கிமு 1650 முதல் கிமு 1600 முடிய 50 ஆண்டு குறுகிய காலம் ஆண்டனர்.

அபிதோஸ் நகரம்
أبيدوس
AbydosFacade.jpg
அபிதோஸ் நகரத்தில் பார்வோன் முதலாம் சேத்தியின் கோயில் முகப்பு
Lua error in Module:Location_map at line 414: No value was provided for longitude.
மாற்றுப் பெயர்Ⲉⲃⲱⲧ; Abdju
இருப்பிடம்எல்-பால்யானா, சோபாக் ஆளுநகரம், எகிப்து
பகுதிமேல் எகிப்து
ஆயத்தொலைகள்26°11′06″N 31°55′08″E / 26.18500°N 31.91889°E / 26.18500; 31.91889ஆள்கூறுகள்: 26°11′06″N 31°55′08″E / 26.18500°N 31.91889°E / 26.18500; 31.91889
வகைகுடியிருப்பு
வரலாறு
காலம்எகிப்தின் முதல் வம்சம் முதல் முப்பதாம் வம்சம் வரை

பண்டைய அபிதோஸ் நகரத்தில் பண்டைய எகிப்திய பார்வோன்கள் மற்றும் பண்டைய எகிப்திய கடவுள்களின் கோயில்கள், கலலறைகள் மற்றும் பிரமிடுகள் நிறைந்திருப்பதால், இந்நகரத்தை எகிப்தின் முக்கியத் தொல்லியற்களமாகவும், புனித நகரமாகவும் கருதப்படுகிறது.[2]இப்பண்டைய நகரத்தைச் சுற்றிலும் தற்போது புதிய குடியிருப்புகள் தோன்றியதால், அபிதோஸ் நகரத்தின் தொல்பொருட்கள் சிதிலமடைந்து, பாழ்பட்டுள்ளது.[3]

பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில், அபிதோஸ் நகரத்தில் உள்ளது. இப்புகழ்பெற்ற கோயில் சுவரில் மூன்று வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது.[4][5]

இதுவரை அறியப்படாத அபிதோஸ் வம்ச பார்வோன் செனப்காயின் மம்மி 2014-இல் பண்டைய அபிதோஸ் நகர அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [6]

படக்காட்சிகள்தொகு

 
அபிதோசில் கண்டெடுக்கப்பட்ட எகிப்திய மன்னர்கள் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகளில் வரைபடம்

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. Abydos: Egyptian Tombs & Cult of Osiris
  2. "Tombs of kings of the First and Second Dynasty". Digital Egypt. UCL. மூல முகவரியிலிருந்து 6 January 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-15.
  3. Abydos ANCIENT CITY, EGYPT
  4. Misty Cryer (2006). "Travellers in Egypt – William John Bankes". TravellersinEgypt.org. மூல முகவரியிலிருந்து 2016-08-14 அன்று பரணிடப்பட்டது.
  5. "Abydos town". Digital Egypt. UCL. மூல முகவரியிலிருந்து 4 January 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-15.
  6. Previously unknown pharaoh's tomb reveals Ancient Egyptian dynasty

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abydos
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீதூசு&oldid=3074344" இருந்து மீள்விக்கப்பட்டது