ஒசிரிசு

(ஓசிரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓசிரிசு என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிறத் தோலுடன்,எகிப்திய பார்வோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூத் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி இசிசு ஆவார். இவர்களுக்கு இளைய ஓரசு பிறந்தார்.[1][2]

ஒசைரிஸ்
ஒசிரிசு
துணைஇசிசு
பெற்றோர்கள்கெப் மற்றும் நூத்
சகோதரன்/சகோதரிஇசிசு, சேத், நெப்தைசு, மூத்த ஓரசு
குழந்தைகள்மின், இளைய ஓரசு

இளைய ஓரசின் தந்தை

தொகு

ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை பெண் கடவுளான இசிசு ஒன்று சேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிஸ் ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Osiris, EGYPTIAN GOD
  2. Osiris
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசிரிசு&oldid=3074417" இலிருந்து மீள்விக்கப்பட்டது