காசெகெம்வி
காசெகெம்வி (Khasekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் இரண்டாம் வம்சத்தின் மன்னர்களில் 12-வதும் மற்றும் இறுதியானவர் ஆவார். இவர் எகிப்தை கிமு 2690 முதல் கிமு 2670 முடிய 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மேல் எகிப்தில் சூனெத் எல் செபிப் எனுமிடத்தில் பெரிய அளவில் களிமண் செங்கல் கோட்டையை நிறுவினார். மேலும் நெக்கென், சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களில் கோட்டைகளை நிறுவினார். மேலும் இவர் தனக்கான சிலையை தானே நிறுவிக்கொண்டவர். இவரது கல்லறை அபிதோஸ் நகரத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
Khasekhemwy | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காசெகெம்வி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மன்னர் காசெகெம்வி சிலை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 18 ஆண்டுகள் (கிமு 2690 முதல் கிமு 2670), எகிப்தின் இரண்டாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | சேத்-பெரிப்சென் அல்லது சேக்கெமிப்-பெரென்மாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜோசெர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | நிமெத்தப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஜோசெர் ஹெதெபெர்நெப்தி சேக்கெம்கெத் ? சனக்த் ? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 2686 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கல்லறை எண் V, உம் இல் காப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | நெக்கன் கோட்டை, சூனெத் இஸ் செபிப்[2] |
மன்னர் காசெகெம்வி ஓரசு மற்றும் சேத் கடவுள் சின்னங்களை கொண்டிருந்தார்.[3] இம்மன்னர் தனக்கான பெரிய கல்லறையை 58 அறைகளுடன், 70 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் அபிதோஸ் நகரத்தில் சுண்ணாம்புக் கற்களால் நிறுவிக்கொண்டவர். இவர் வடக்கு எகிப்தின் எதிரிகளை வேட்டையாடி, நெக்கென் நகரத்தை தனது இராச்சியத்தின் தலைநகராகக் கொண்டவர் எனக்கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது. [4]
இவரது மகன் ஜோசெர் மூன்றாம் வம்சத்தை நிறுவி பழைய எகிப்திய இராச்சியத்தை ஆட்சி செய்தவர் ஆவார்.
-
மன்னர் காசெகெம்வி கல்லறையில் கிடைத்த சுண்ணாம்புக் கல் குவளை மற்றும் தங்கத்திலான மூடி
-
மன்னர் காசெகெம்வி சிலை
-
மன்னர் காசெகெம்வி கல்லறையின் சிதிலங்கள்
-
மன்னர் காசெகெம்வி சிலை, எகிப்து
-
மன்னர் காசெகெம்வி பெயர் பொறித்த கல் குவளை
இதனையும் காண்க
தொகுஆதார நூற்பட்டியல்
தொகு- Toby Wilkinson, Royal Annals of Ancient Egypt: The Palermo Stone and Its Associated Fragments, (Kegan Paul International), 2000.
- Egypt: Khasekhem/Khasekhemwy of Egypt's 2nd dynasty
மேற்கோள்கள்
தொகுஊசாத்துணை
தொகு- ↑ Alan H. Gardiner: The royal canon of Turin.
- ↑ Khasekhemwy's fortபரணிடப்பட்டது 2012-09-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, 2006 paperback, p. 26
- ↑ "Khasekhemwy | Ancient Egypt Online" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.