ஜெர் (Djer (or Zer or Sekhty)[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதலாம் வம்சத்தின் (கிமு 3100 – கிமு 2900) மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கிமு 3000 ஆண்டில் பண்டைய எகிப்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மெம்பிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை ஆண்டார்.

ஜெர்
கல்லறையில் மன்னர் ஜெர்ரின் கல் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்41 ஆண்டுகள், கிமு 3000, முதல் வம்சம்
முன்னவர்ஹோர்-ஆகா
பின்னவர்ஜெத்
துணைவி(யர்)நக்நெய்த், ஹெர்நெய்த், பெனெபூய்
பிள்ளைகள்மெர்நெய்த், ஜெத்
தந்தைஹோர்-ஆகா
தாய்கென்தாப், நெய்த்ஹோதேப்
அடக்கம்உம் எல்-காப், அபிதோஸ் நகரம்
பார்வோன் ஜெர் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
பார்வோன் ஜெர் பெயர் பொறித்த கல் பாத்திரம், தேசிய தொல்லியல் அருங்காசியகம், பிரான்சு

இவர் கிமு 31-ஆம் நூற்றாண்டின் நடுவில் வரை வாழ்ந்தார்.[2] இவரது மம்மியின் முன் கை மற்றும் இவரது மனைவியின் மம்மியும் எகிப்தியவியல் அறிஞர் பிளிண்டர் பெட்ரி என்பவர் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[3][4]

இவரது பெயர் பலெர்மோ கல், அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களின் குறுங்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

ஜெர் மற்றும் அவரது தந்தை ஹோர்-ஆகாவின் கல்லறைகள் அபிதோஸ் நகரத்திற்கு அருகே உள்ள உம் எல்-காப் பகுதியில் அகழாய்வில் கண்டுபிடிக்கபட்டது.

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bruce Trigger (1983). Ancient Egypt: A Social History. Cambridge University Press. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521284271. 
  2. Grimal, Nicolas (1994). A History of Ancient Egypt. Wiley-Blackwell. பக். 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-19396-0. 
  3. W. M. Flinders Petrie: The Royal Tombs of the Earliest Dynasties, 1901, Part II, London 1901, p.16-17
  4. Salima Ikram and Aidan Dodson, The Mummy in Ancient Egypt: Equipping the Dead for Eternity, Thames & Hudson, 1998, p. 109

உசாத்துணை தொகு

  • Toby A. H. Wilkinson, Early Dynastic Egypt, Routledge, London/New York 1999, ISBN 0-415-18633-1, 71-73
  • Toby Wilkinson, Royal Annals of Ancient Egypt: The Palermo Stone and Its Associated Fragments, (Kegan Paul International), 2000.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜெர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்&oldid=3628054" இருந்து மீள்விக்கப்பட்டது