நான்காம் தூத்மோஸ்
நான்காம் தூத்மோஸ் (Thutmose IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன்களில் எட்டாமவர் ஆவார். இவர் எகிப்தின் புது இராச்சியத்தை கிமு 1401 – 1391 அல்லது கிமு 1397 – 1388 முடிய ஆண்டார். இவரது மம்மியை 20-ஆம் நூற்றான்டில் உடற்கூராய்வு செய்யப்பட்டதில், இவர் கை-கால் வலிப்பு நோயால் இளவயதில் மாண்டார் எனத் தொல்லியல் உடற்கூராய்வியல் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளனர். இவருக்குப் பின் இவரது மகன் மூன்றாம் அமென்கோதேப் எகிப்தின் அரியனை ஏறினார்.
நான்காம் தூத்மோஸ் | |
---|---|
நான்காம் தூத்மோசின் கருங்கல் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1401 – 1391 அல்லது கிமு 1397 – 1388, பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | இரண்டாம் அமென்கோதேப் |
பின்னவர் | மூன்றாம் அமென்கோதேப் |
துணைவி(யர்) | நெபர்தாரி, லாரெத், முத்தேம்வியா |
பிள்ளைகள் | மூன்றாம் அமென்கோதேப் உள்ளிட்டு எழுவர் |
தந்தை | இரண்டாம் அமென்கோதேப் |
தாய் | தியா |
இறப்பு | கிமு 1391 அல்லது கிமு 1388 |
அடக்கம் | KV43 |
நினைவுச் சின்னங்கள்
தொகுபிற தூத்மோசிய பார்வோன்களைப் போன்று நான்காம் தூத்மோஸ் கர்னாக்கில் எகிப்திய கடவுள்களுக்கு பெரிய அளவிலான மண்டபங்களுடன் கோயில் எழுப்பினார். மேலும் தனக்கென சிறிய கோயில் ஒன்றையும் எழுப்பினார். கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே, தனது புனித மன்னராட்சி குறித்தான கனவு கற்பலகையை நிறுவினார்.[1][2]
கல்லறை மற்றும் மம்மி
தொகுநான்காம் தூத்மோஸ் இறந்த பிற்கு அவரது உடலை மம்மியாக பதப்படுத்தி மன்னர்களின் சமவெளியில் கலல்றை எண் 43-இல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் பின்னர் கல்லறை எண் 35-க்கு மாற்றப்பட்டது. நான்காம் தூத்மோசின் மம்மியை விக்டர் லோரெட்டால் 1898-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்காம் தூத்மோசின் மம்மியை உடற்கூராய்வு செய்த கிராப்டன் எலியட் ஸ்மித் என்ற தொல்லியல் அறிஞரின் கூற்றுப்படி, நான்காம் தூத்மோஸ் இறக்கும் போது அவர் மிகவும் மயக்கமடைந்திருந்தார் என்பது தெரியவந்தது. மேலும் அவரது உயரம் 1.646 மீட்டர் ஆகும்.ஆனால் பிரேத பரிசோதனையில் நான்காம் தூத்மோசின் கால்கள் உடைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் அவரது மிகவும் உயரமாக இருந்திருக்கலாம் என்றும், முன்கைகள் மார்பின் மீது வைத்து, வலதுபுறம் இடதுபுறம் கட்டப்பட்டுள்ளது என்றும், அவரது தலைமுடி, நடுவில் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார். எலியட் ஸ்மித் எனும் தொல்லிய ஆய்வாலர், நான்காம் தூத்மோஸ் இறக்கும் போது அவரது வயது 25-28 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர் என்று மதிப்பிட்டார்
அண்மையில் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், இளவயதில் மாண்ட நான்காம் தூத்மோஸ் மற்றும் இளவயதில் மரணமடைந்த பதினெட்டாம் வம்ச பார்வோன்களான துட்டன்காமன் மற்றும் அக்கெனதென் மம்மிகளுடன் பகுப்பாய்வு செய்தார். இளவயதில் மாண்ட மேற்படி பார்வோன்கள் கால்-கை வலிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.[3]இந்த வகையான கால்-கை வலிப்பு தீவிர ஆன்மீக தரிசனங்கள் மற்றும் சமயத்துடன் தொடர்புடையது கருதினார்.[4]
பார்வோன்களின் அணிவகுப்பு
தொகு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5]
படக்காட்சிகள்
தொகு-
நான்காம் தூத்மோசின் தலைச்சிற்பம்
-
நீல நிற மணி முடி சூடிய நான்காம் தூத்மோஸ்
-
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்களின் கால்களுக்கு நடுவே நான்காம் தூத்மோஸ் நிறுவிய கனவு கற்பலகை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shaw, Ian (2000). The Oxford History of Ancient Egypt (Hardback ed.). Oxford: Oxford University Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ Ashrafian, Hutan.. "Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty". Epilepsy Behav 25: 23–31. doi:10.1016/j.yebeh.2012.06.014. பப்மெட்:22980077.
- ↑ Elliot Smith, G. (1912). The Royal Mummies (2000 reprint ed.). Bath, UK: Duckworth. pp. 42–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-2959-X.
- ↑ Ashrafian, Hutan.. "Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty". Epilepsy Behav 25: 23–31. doi:10.1016/j.yebeh.2012.06.014. பப்மெட்:22980077.
- ↑ 5.0 5.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Bryan, Betsy (1991). The Reign of Thutmose IV. Baltimore: The Johns Hopkins University Press.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson Ltd.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kemp, Barry J. (1989). Ancient Egypt: Anatomy of a Civilization. Routledge.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
Further reading
தொகு- C.N. Reeves, Tuthmosis IV as 'great-grandfather' of Tut῾ankhamun, in: Göttinger Miszellen 56 (1982), 65-69.