கனவு கற்பலகை
கனவு கற்பலகை அல்லது ஸ்பிங்ஸ் கற்பலகை (Dream Stele Or Sphinx Stele) பண்டைய எகிப்தின், புது இராச்சியத்தை கிமு 1401-இல் ஆண்ட பதினெட்டாம் வமசத்தின் எட்டாம் பார்னோனான நான்காம் தூத்மோஸ், கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே நிறுவிய கல்வெட்டு பொறித்த கற்பலகையை குறிக்கிறது.
நான்காம் தூத்மோசின் கனவு கற்பலகை | |
---|---|
கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே நான்காம் தூத்மோஸ் நிறுவிய கல்வெட்டு பொறித்த கனவு கற்பலகை | |
இருப்பிடம் | கீசா |
பகுதி | எகிப்து |
ஆயத்தொலைகள் | 29°58′31″N 31°08′16″E / 29.97528°N 31.13778°E |
நான்காம் தூத்மோஸ் தனது புனிதமான மன்னர் உரிமையை மக்கள் அறியும் பொருட்டு இக்கல்வெட்டு கருங்கல் பலகையை நிறுவினார்.[1][2]
அமைவிடம்
தொகுகீசா நகரத்தின் கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே நிறுவப்பட்ட செவ்வக வடிவிலான இக்கனவு கருங்கல் பலகை 3.6 மீட்டர் உயரமும், 15 டன் எடையும் கொண்டது. [3]இக்கனவு கற்பலகையை 1818-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[4] மேலும் இக்கற்பலகையை பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் நான்காம் மன்னர் காப்ராவின் கல்லறையின் பாதுகாப்பிற்காக மூட பயன்படுத்தப்பட்டது.
இக்கற்பலகையின் இடது பக்கத்தில் நான்காம் தூத்மோஸ் சிற்பமும், வலது பக்கத்தில் நான்காம் தூத்மோஸ் ஸ்பிங்ஸ்களுக்கு காணிக்கை செலுத்துவது போன்ற சிற்பமும் உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shaw, Ian (2000). The Oxford History of Ancient Egypt (Hardback ed.). Oxford: Oxford University Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ Ashrafian, Hutan.. "Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty". Epilepsy Behav 25: 23–31. doi:10.1016/j.yebeh.2012.06.014. பப்மெட்:22980077.
- ↑ 3.0 3.1 Lehner, Mark (1997). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. London: Thames and Hudson. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.
- ↑ Vyse, Colonel Howard (1842). "Appendix: The Sphinx: Account of M. Caviglia's Excavations in 1818 Taken From the Papers of the Late Mr. Salt". Appendix To Operations Carried On At The Pyramids Of Gizeh In 1837 Vol.III (PDF). London: Moyes and Barclay. pp. 107–116. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.