உனாஸ் (Unas) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். உனாஸ் எகிப்தை ஏறத்தாழ கிமு 2345 - கிமு 2315 முடிய 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது இறப்பிற்குப் பின்னர் எகிப்தில் ஐந்தாம் வம்ச ஆட்சி முடிவுற்றது. இவருக்குப் பின்னர் ஆறாம் வம்ச மன்னர் தேத்தி எகிப்தின் அரியணை ஏறினார்.

உனாஸ்
Oenas, Onnos, Unis, Wenis
பண்டைய எகிப்திய பார்வோன் உனாஸ் பிரமிடுவின் கல்லறையில் இருந்த உனாசின் கல் சவப்பெட்டி
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 24-ஆம் நூற்றாண்டு: 15 - 30 ஆண்டுகள்[a], எகிப்தின் ஐந்தாம் வம்சம்
முன்னவர்ஜெத்கரே இசேசி
பின்னவர்தேத்தி
துணைவி(யர்)நெபெத், கெனூத்
பிள்ளைகள்ஹெமெத்ரே ஹெமி ,கென்ட்கௌஸ், நெபெருத், நெபர்கௌஸ் இகு , செஷெசெத் இதூத் .
உறுதி செய்ய்யப்படாதோர்: உனாஸ்-அங்க், இபுத் .
யூகிக்கப்பட்டவர்கள்: நெப்கௌஹோர், செப்செஸ்புப்தா.
தந்தைஜெத்கரே இசேசி (எனக்கருதப்படுகிறார்)
தாய்சேத்திப்போர் (எனக்கருதப்படுகிறார்)
அடக்கம்உனாஸ் பிரமிடு

அவரது தந்தை ஜெத்கரே இசேசிக்குப் பிறகு, எகிப்து பொருளாதார வீழ்ச்சியின் காலகட்டமாக இருந்த போது, ஆட்சி பீடம் ஏறிய உனாசின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவரது ஆட்சியில் எகிப்து லெவண்ட் மற்றும் நுபியாவுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வந்தது. மேலும் தெற்கு காணான் பகுதியில் இராணுவ நடவடிக்கை நடந்திருக்க வாய்ப்பு இருந்தது. மன்னர் உனாஸ் ஆட்சியில் அரசரின் அதிகாரம் குறைந்ததோடு, நோம் நிர்வாகிகளின் அதிகாரமும், வளர்ச்சியும், பரவலாக்கமும் தொடர்ந்தது.

மனன்ர் உனாஸ் தனக்கான பிரமிடுவை சக்காரா நகரத்தில் கட்டினார். உனாசின் பிரமிடு, பழைய இராச்சியத்தின் போது முடிக்கப்பட்ட அரச பிரமிடுகளில் மிகச்சிறியது. 750 மீட்டர் நீளமுள்ள (2,460 அடி) தரைப்பாலத்தால் இணைக்கப்பட்ட அதன் உயரமான மற்றும் பள்ளத்தாக்கு கோயிலுடன சவக்கிடங்கு வளாகம், வர்ணம் பூசப்பட்ட புடைப்புகளால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது, அதன் தரம் மற்றும் பல்வேறு வழக்கமான அரச உருவப்படத்தை மிஞ்சும் வகையில் இருந்தது. மேலும் உனாஸ் தனது பிரமிடு அறைகளின் சுவர்களில் பிரமிடு உரைகளை செதுக்கி வர்ணம் பூசினார். பிரமிடு உரைகள் பொறிக்கும் வழக்கம், அவரது வழித்தோன்றல்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (கிமு 2160 - 2050) வரை பின்பற்றப்பட்டது. இந்த பிரமிடு உரைகள் மன்னரை இரா மற்றும் ஓரசு கடவுள்களுடன் அடையாளம் காட்டுகின்றன. உனாஸின் காலத்தில் அவரது வழிபாட்டு முறை அதிகரித்து வந்தது. மேலும் மன்னரின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை அடைய உதவுவதாக கருதப்பட்டது.

உனாசின் மரணத்தின் போது நிகழ்த்தப்பட்ட இறுதி சடங்குகள் பழைய இராச்சியத்தின் இறுதி வரை தொடர்ந்தது. மேலும் குழப்பமான முதல் இடைநிலைக் காலத்தில் தவிர, பிற்கால மத்திய இராச்சிய காலம் வரை (கிமு 2050 - கிமு 1650) இற்ந்தோர் வழிபாட்டு முறை நிலவியதுடன், புத்துயிர் பெற்றது.

அதிகாரப்பூர்வ வழிபாட்டு முறைக்கு இணையாக, மன்னர் உனாஸ் இறந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிந்தைய கால எகிப்திய இராச்சியக் காலத்திலும் (கிமு 664 - கிமு 332) சக்காராவின் உள்ளூர் கடவுளாக பிரபலமான வணக்கத்தைப் பெற்றிருக்கிறார்.

உனாஸ் பிரமிட் வளாகம்

தொகு
 
செங்கல், மணல் மற்றும் கற்களால் கட்டப்பட்ட சிதைந்து போன உனாசின் பிரமிடு, சக்காரா

சக்காரா நகரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள யூசர்காப் பிரமிடுக்கு சமச்சீராக, செகெம்கெட்டின் பிரமிடுக்கும் ஜோசரின் பிரமிடு வளாகத்தின் தென்மேற்கு மூலைக்கும் இடையே, வடக்கு சக்காராவில் உனாஸ் தனக்கென ஒரு பிரமிட்டைக் கட்டினார்.[102] இது 43 மீ (141 அடி) உயரம், 57.7 மீ × 57.7 மீ (189 அடி × 189 அடி) சதுர அடித்தளத்தைக் கொண்டுள்ளது.[102] [103]

பிணவறை வளாகம்

தொகு

உனாஸ் பிரமிடு அருகில் உனாஸ் நினைவுக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் இறந்த அரசர் உனாஸ் வழிபாட்டிற்கான பொருட்களைப் படைக்க வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இக்கோயில் மன்னர் கூபுவின் நினைவு கோயிலுக்கு சமமாக இருந்தது.

இதனனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Proposed dates for Unas' reign: 2404–2374 BC,[1][2] 2375–2345 BC,[3][4][5][6] 2367–2347 BC,[7] 2353–2323 BC,[8] 2342–2322 BC,[9] 2321–2306 BC[10] 2312–2282 BC.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Altenmüller 2001, ப. 600.
  2. Hawass & Senussi 2008, ப. 10.
  3. Clayton 1994, ப. 60.
  4. Rice 1999, ப. 213.
  5. Malek 2000a, ப. 102.
  6. Lloyd 2010, ப. xxxiv.
  7. Strudwick 2005, ப. xxx.
  8. Arnold 1999.
  9. von Beckerath 1999, ப. 283.
  10. Hornung 2012, ப. 491.
  11. Dodson & Hilton 2004, ப. 288.
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Barsanti 1901, ப. 254.
  13. 13.0 13.1 Petrie 1917, p. 18 & p. 63.
  14. 14.0 14.1 Leprohon 2013, ப. 41, footnote 65.
  15. 15.0 15.1 15.2 15.3 Baker 2008, ப. 482.
  16. Leprohon 2013, ப. 40.

ஆதார நூற்பட்டியல்

தொகு
முன்னர்
ஜெத்கரே இசேசி
எகிப்திய பார்வோன்
ஐந்தாம் வம்சம்
(இவ்வம்சத்தின் இறுதி மன்னர்)
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனாஸ்&oldid=4072021" இலிருந்து மீள்விக்கப்பட்டது