பிரமிடு நூல்

பிரமிடு நூல்கள் (Pyramid Texts) பண்டைய எகிப்தியர்களின் மிகவும் பழைமையான சமய இறுதிச் சடங்கு நூல்களில் ஒன்றாகும்.[1][2] இந்த பிரமிடு நூல்கள் பண்டைய எகிப்திய மொழியின் பட எழுத்துகளில், பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட (கிமு 2686 – 2181) ஐந்தாம் வம்சம், ஆறாம் வம்சம், ஏழாம் வம்சம் மற்றும் முதல் இடைநிலைக்காலத்திய எட்டாம் வம்சத்தவர்கள் ஆட்சிக் காலத்தில் சக்காரா நகரத்தின் பிரமிடுகளின் நிலத்தடி சுவர்கள் மற்றும் கல் சவப்பெட்டிகளில் செதுக்கப்பட்டிருந்தது.[3][4]பழைய எகிப்து இராச்சியத்திற்கும், மத்தியகால எகிப்தி இராச்சியம் மற்றும் புது இராச்சிய காலத்திற்கிடையே பிரமிடு நூல்களின் பயன்பாடு முற்றிலும் மறைந்தது. பழைய இராச்சியக் காலத்திய பிரமிடு நூல்கள் இறந்த எகிப்திய மன்னர்களான தேத்தி, முதலாம் மெரென்ரே, முதலாம் பெப்பி, இரண்டாம் பெப்பி மற்றும் அவர்தம் இராணிகளை சக்கரா நகரத்தில் புதைத்த பிரமிடுகளின் அடித்தளச் சுவரிலும், சவப்பெட்டிகளில் பிரமிடு நூலின் உரைகள் செதுக்கப்பட்டிருந்தது.[5]

எகிப்தின் ஆறாம் வம்ச மன்னர் தேத்தியின் (கிமு 2345 - கிமு 2333) சக்காரா நகரப் பிரமிடு சுவரில் பிரமிடு நூலின் உரைகள் செதுக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் பிரமிடு நூல் உரைகள் கண்டுபிடிக்கப்பட்ட, எகிப்தின் ஆறாம் வம்ச மன்னர் முதலாம் மெரென்ரே பிரமிடு (கிமு2287 – கிமு 2278

இந்நூலின் காலம் ஏறத்தாழ கிமு 2400 - கிமு 2300-க்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.[6] புது எகிப்திய இராச்சியத்தின் சவப்பெட்டி நூல் மற்றும் இறந்தோர் நூல் போலன்றி, பிரமிடு நூல்களில் இறந்த பார்வோன்களையும், இராணிகளை மட்டுமே குறித்துள்ளது.[7]

நோக்கம்

தொகு

இந்த பிரமிடு நூல்களின் உருவாக்கம் இரண்டாம் வம்சம் மற்றும் மூன்றாம் வம்ச காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரமிடு உரைகளின் எழுத்துகள் அல்லது உச்சரிப்புகள் முதன்மையாக இறந்த ஒரு மன்னரை அல்லது இராணியை புனித மிக்கவராகவும், கடவுளுடன் கலப்பதற்கு தகுதி பெறும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இறுதிச் சடங்கு நூல் ஆகும். [8] இந்நூலின் மந்திர உச்சரிப்புகள் அவற்றை ஓதுபவர்களால் உச்சரிக்கப்பட வேண்டும். இந்நூல் மரணத்திற்குப் பின் வழிகாட்டி படிக்கட்டுகளாகவும், ஏணிகளாகவும் மற்றும் பறக்கும் திறன் வழங்கும். இந்நூலின் மந்திரங்கள் கடவுள்களை உதவி செய்ய அழைக்கலாம், அவர்கள் இணங்கவில்லை என்றால் கூட அச்சுறுத்தலாம். மேலும் கல்லறையிலிருந்து மற்றும் புதிய வாழ்க்கைகான ஆவிக்கு வழிகாட்டுவதில் இந்நூல் இறந்த பார்வோன்களுக்கு உதவியாக இருந்தது. பொதுவாக பிரமிடு நூல்களின் உரைகள் பார்வோன்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு வழிநடத்த பயன்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Malek 2003, ப. 102.
  2. Allen 2005, ப. 1.
  3. Verner 2001a, ப. 92.
  4. Allen 2001, ப. 95.
  5. Hornung 1997, ப. 1.
  6. Allen 2005.
  7. Lichtheim 1975.
  8. Allen 2005, ப. 1, 7 & 13 n.4.

அடிக்குறிப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pyramid texts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிடு_நூல்&oldid=3848922" இலிருந்து மீள்விக்கப்பட்டது