ஜோசெர் பிரமிடு

ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டுப் பிரமிடு (Pyramid of Djoser) பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர் (கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்) எகிப்தின் சக்காரா நகரத்தில் படிக்கட்டு அமைப்பில் பிரமிடுவை கட்டினார்.[4] இப்பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1924-25-களில் சக்காரா நகரத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது, மன்னர் ஜோசெர் கட்டிய படிக்கட்டு பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் வண்ணம் தீட்டிய சுண்ணாம்புக் கல் முழு உருவச் சிலையை கண்டுபிடித்தனர். மேலும் இப்பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டு பிரமிடு
எகிப்தின் சக்காரா நகரத்தில் மன்னர் ஜோசெரின் படிக்கட்டு பிரமிடு
ஆள்கூறுகள்29°52′16.56″N 31°12′59.02″E / 29.8712667°N 31.2163944°E / 29.8712667; 31.2163944
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 2670–2650 [1] (எகிப்தின் மூன்றாம் வம்சம்)
வகைபடிக்கட்டு பிரமிடு
பொருள்சுண்ணக்கல்
உயரம்62.5 மீட்டர்கள் (205 அடி; 119 cu)
அடி121 மீட்டர்கள் (397 அடி; 231 cu) by
109 மீட்டர்கள் (358 அடி; 208 cu)[2][3]
கனவளவு330,400 கன சதுர மீட்டர்கள் (11,667,966 cu ft)[3]
ஜோசெரின் படிக்கட்டுப் பிரமிடு வளாகத்தின் நுழைவாயில் மண்டபம், சக்காரா
கோயில் திருவிழா வளாகம்
மன்னர் ஜோசெரின் நித்திய வீடு எனும் கல்லறைக் கோயில், சக்காரா, மெம்பிஸ்
மன்னர் ஜோசெர் தலைச்சிற்பம், புருக்ளின் அருங்காட்சியகம், கிமு 2650-2600

சுண்ணக்கல்லில் மெருகூட்டப்பட்ட ஜோசெர் பிரமிடு எனும் படிக்கட்டு பிரமிடு 62.5 மீட்டர்கள் (205 அடி) உயரமும், 109 m × 121 m (358 அடி × 397 அடி) அடிப்பாகம் [5] கொண்டது.[6]

14 சீரமைப்பிற்குப் பிறகு ஜோசெரின் பிரமிடு பொது மக்கள் பார்வைக்கு மார்ச் 2020-இல் மீண்டும் திறக்கப்பட்டது.[7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pyramid of Djoser
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Step pyramid complex of Djoser
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசெர்_பிரமிடு&oldid=3777979" இருந்து மீள்விக்கப்பட்டது