உனாஸ் பிரமிடு

உனாஸ் பிரமிடு, பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னரான உனாஸ் (ஆட்சிக் காலம் கிமு 2345 - கிமு 2315) என்பவர் இப்பிரமிடை கீழ் எகிப்தில் உள்ள சக்காரா நகரத்தில் நிறுவினார். உனாசின் பிரமிடு, பழைய இராச்சியத்தின் போது முடிக்கப்பட்ட அரச பிரமிடுகளில் மிகச்சிறியது. 750 மீட்டர் நீளமுள்ள (2,460 அடி) தரைப்பாலத்தால் இணைக்கப்பட்ட அதன் உயரமான நினைவுக் கோயில், வர்ணம் பூசப்பட்டு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது. மேலும் உனாஸ் தனது பிரமிடு அறைகளின் சுவர்களில் பிரமிடு உரைகளை செதுக்கி வர்ணம் பூசினார். பிரமிடு உரைகள் பொறிக்கும் வழக்கம், அவரது வழித்தோன்றல்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (கிமு 2160 - 2050) வரை பின்பற்றப்பட்டது. இந்த பிரமிடு உரைகள் மன்னரை இரா மற்றும் ஓரசு கடவுள்களுடன் அடையாளம் காட்டப்படுகிறது. உனாசின் ஆட்சிக் காலத்தில் அவரது வழிபாட்டு முறை அதிகரித்து வந்தது. மேலும் மன்னரின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை அடைய உதவுவதாக கருதப்பட்டது.

உனாஸ் பிரமிடு
சிதைந்த உனாஸ் பிரமிடு மற்றும் நினைவுக் கோயில்
ஆள்கூறுகள்29°52′6″N 31°12′53″E / 29.86833°N 31.21472°E / 29.86833; 31.21472
பழங்காலப் பெயர்
<
E34
N35
M17S29
>F35Q1Q1Q1O24

Nfr swt Wnjs[1][2]
Nefer asut Unas[3]
"Beautiful are the [cult] places of Unas"[4]
Alternatively translated as "Perfect are the places of Unas"[5] or
"The places of Unas are complete"[6]
கட்டப்பட்டதுஎகிப்தின் ஐந்தாம் வம்சம் (ஆட்சிக் காலம் கிமு 2345 - கிமு 2315)
வகைபிரமிடு (சிதிலமடைந்துள்ளது)
பொருள்சுண்ணக்கல், செங்கல்
உயரம்43 m (141 அடி; 82 cu)[6] (original)
அடி57.75 m (189 அடி; 110 cu)[6]
கனவளவு47,390 m3 (61,980 cu yd)[7]
சரிவு56°18'35"[8]
உனாஸ் பிரமிடின் சிதிலங்கள்
பிரமிடில் மன்னரின் மம்மியை அடக்கம் செய்யும் இடமான நினைவுக் கோயில்
Annotated map of Unas's mortuary temple.
மன்னர் உனாஸ் நினைவுக் கோயில் வரைபடம்.: (1) Granite doorway built by Teti; (2) Entrance hall with (5a and b) storerooms to the north and south; (3) Courtyard with (4) eighteen granite columns; (6) Transverse corridor; (7) Chapel with five statue niches; (8a, b and c) Storerooms of the inner temple; (9) Antichambre carrée with central column; (10) Offering hall with (11) false door bearing a protective inscription; (12) Cult pyramid; and (13) Courtyard surrounding the pyramid complex.

உனாஸ் பிரமிட் வளாகம் தொகு

 
செங்கல், மணல் மற்றும் கற்களால் கட்டப்பட்ட சிதைந்து போன உனாசின் பிரமிடு, சக்காரா

சக்காரா நகரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள யூசர்காப் பிரமிடுக்கு சமச்சீராக, செகெம்கெட்டின் பிரமிடுக்கும் ஜோசரின் பிரமிடு வளாகத்தின் தென்மேற்கு மூலைக்கும் இடையே, வடக்கு சக்காராவில் மன்னர் உனாஸ் தனக்கென ஒரு பிரமிட்டைக் கட்டிக்கொண்டார். இது 43 மீ (141 அடி) உயரம், 57.7 மீ × 57.7 மீ (189 அடி × 189 அடி) சதுர அடித்தளத்தைக் கொண்டது.

கல்லறைக் கோயில் வளாகம் தொகு

உனாஸ் பிரமிடு அருகில் உனாஸ் நினைவுக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் இறந்த அரசர் உனாஸ் வழிபாட்டிற்கான பொருட்களைப் படைக்க வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இக்கோயில் மன்னர் கூபுவின் நினைவு கோயிலுக்கு சமமாக இருந்தது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jiménez-Serrano 2012, ப. 155.
  2. Edel 2013, ப. 74.
  3. Budge 1920, ப. 167a.
  4. Verner 2001d, ப. 332.
  5. Lehner 2008, ப. 155.
  6. 6.0 6.1 6.2 Arnold 2003, ப. 250.
  7. Bárta 2005, ப. 180.
  8. Lehner 2008, ப. 10.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pyramid of Unas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனாஸ்_பிரமிடு&oldid=3849233" இலிருந்து மீள்விக்கப்பட்டது