எகிப்தின் பதினாறாம் வம்சம்

எகிப்தின் பதினாறாம் வம்சம் (Sixteenth Dynasty Egypt - Dynasty XVI) (ஆட்சிக் காலம்:கிமு 1649 - கிமு 1582) எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 1649 முதல் கிமு 1582 முடிய 67 ஆண்டுகள் ஆண்ட எகிப்திய அரசமரபுகளில் ஒன்றாகும்.[1] இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் மேல் எகிப்தின் தீபை நகரம் ஆகும். இவ்வம்ச ஆட்சியின் போது, பதினைந்தாம் வம்சத்தவர்களான ஐக்சோஸ் எனும் போனீசியா நாட்டவர்கள், கீழ் எகிப்தின் ஆவரிஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.கிமு 1580-இல் ஐக்சோஸ் மன்னர்கள் பதினாறாம் வம்சத்தவர்களின் தலைநகரான தீபை நகரத்தை கைப்பற்றினர். பின்னர் ஐக்சோஸ் எனும் பதினைந்தாம் வம்ச மன்னர்களிடம், பதினாறாம் வம்சத்தவர்கள் குறுநில மன்னர்களாக இருந்தனர். மேலும் எகிப்திற்கு தெற்கே இருந்த குஷ் இராச்சியத்தினரும் கீழ் எகிப்தினை ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கினர். பதினாறாம் வம்சத்துடன் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் முடிவுற்று, பதினேழாம் வம்சத்தின் ஆட்சி துவங்கியது. இப்பதினேழாம் வம்ச ஆட்சியின் போது புது எகிப்து இராச்சியம் உருவானது.

கிமு 1649–கிமு 1582
தலைநகரம்தீபை
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1649
• முடிவு
கிமு 1582
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]]
[[எகிப்தின் பதினேழாம் வம்சம்]]
கிமு 1580-இல் கீழ் எகிப்தின் ஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்சத்தவர்கள் மற்றும் குஷ் இராச்சியத்தினரும் (பழுப்பு நிறம்) மேல் எகிப்தின் 16-ஆம் வம்சத்தவர்களின் தீபை நகரம் உள்ளிட்ட பகுதிகளை (மஞ்சள் நிறம்) கைப்பற்றிய போது எகிப்தின் அரசியல் நிலை

பண்டைய எகிப்திய வம்சங்கள்

தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
முன்னர் எகிப்தின் பதினாறாம் வம்சம்
1649–1582 BC
பின்னர்