துட்டன்காமன் கல்லறை

துட்டன்காமன் கல்லறை (tomb of Tutankhamun), பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை கிமு 1333 முதல் கிமு 1324 முடிய ஆண்ட பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னர் துட்டன்காமனின் கல்லறை ஆகும். எகிப்தின் அல்-உக்சுர் நகரத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள மன்னர்களின் சமவெளியின் கிழக்கில் இருந்த துட்டன்காமனின் கல்லறையை, கல்லறை எண் 62ல் 1922-ஆம் ஆண்டில் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் ஹாவர்ட் கார்ட்டர் என்பவர் கண்டுபிடித்தார்.[1]

துட்டன்காமன் முகமூடி
துட்டன்காமன் கல் சவப்பெட்டியின் அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட உள் பெட்டி
துட்டன்காமன் கல்லறைச் சுவரில் மன்னர் துட்டன்காமன் எகிப்தியக் கடவுள் ஒசிரிசை தழுவும் காட்சி

இக்கல்லறை நான்கு அறைகளும், படிக்கட்டுக்களும் மற்றும் நடைபாதையும் கொண்டது. இது பிற மன்னர்களின் கல்லறைகளை விட சிறியதாகவும், குறைவாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது துட்டன்காமுனின் அகால மரணத்திற்குப் பிறகு துட்டன்காமுனின் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்ட அரசரல்லாத நபருக்கான கல்லறையாக இருக்கலாம். மற்ற பாரோக்களைப் போலவே, துட்டன்காமனுக்கும் செய்த மம்மியின் வாய் திறப்புச் சடங்கு போன்ற இறுதிச் சடங்கு பொருட்களுடன், உசாப்திகள், அழகிய தங்க முலாம் பூசப்பட்ட கல் சவப்பெட்டிகள், தளபாடங்கள், ஆடைகள் மற்றும் நகைகள் போன்ற தனிப்பட்ட உடைமைகளுடன் மன்னர்களின் சமவெளி (கல்லறை எண் 62)ல் புதைக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் ஹாவர்ட் கார்ட்டர் 1922ல் துட்டன்காமனின் கல்லறையை கண்டுபிடித்த போது கல்லறையில் துட்டன்காமன் முகமூடி, மம்மி உள்ளிட்ட கல்லறையில் புதைக்கப்பட்ட பொருட்கள் அப்படியே இருந்தன.[2]

துட்டன்காமன் கல்லறையின் பெரும்பாலான தொல்பொருட்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது துட்டன்காமன் கல்லறையில் கிடைத்த மம்மி, சவப்பெட்டிகள், துட்டன்காமன் முகமூடி போன்ற முக்கியத் தொல்பொருட்கள் பெருநகர கெய்ரோவில் உள்ள கீசாவில் வைக்கப்பட்டுள்ளது.

மன்னர்களின் சமவெளியில் நடு-வலது பக்கத்தில் மன்னர் துட்டன்காமன் கல்லறை எண் 62
இரண்டாம் சேத்தியின் கல்லறையில் சிறுத்தை மீது துட்டன்காமன் நிற்கும் சிற்பம்[3]
தங்கம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் துட்டன்காமனுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி
துட்டன்காமன் மம்மி, ஆண்டு 1926[4][5]

துட்டன்காமன் கல்லறையில் கிடைத்த பொருட்கள் தொகு


இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துட்டன்காமன்_கல்லறை&oldid=3848685" இலிருந்து மீள்விக்கப்பட்டது